இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
.இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்கள்; இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் எப்படி 2009ம் ஆண்டு லண்டனை ஸ்தம்பிக்க செய்தனர் என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த வருடம் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததன் மூலம் பிரிட்டிஸ் அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.