நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்..

சாலினி கார்த்திகேயன்—https://www.facebook.com/shalini.karthikeyan.12?__tn__=%2CdK-R-R&eid=ARBGFoLmVPv70qoVIWXN4E8U3xfMNHP_PSFi4yCmyYVRRtzv5uFyQCebUJ3WGBCjBa65RL4sRTMaCjSW&fref=mentions

நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்.. May be உங்களுக்கு எதுவும் நடக்காம இருந்திருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணாக நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தானே பேச வேண்டும்..என்ன கோழைத்தனம் இது ஷாலினி???

metoo4ஹஹஹஹா..ஹஹஹா…..நீங்கலாம் celebrities ஓட metoo விஷயங்களை படித்துவிட்டு வக்கணையாக தேநீர் அருந்திகொண்டு அதைப்பற்றி அளவளாவுங்கள், நான் கட்டிடத்தொழிலுக்கும், என் வீட்டுப்பணிப்பெண்ணின், என் அருகில் வாழும் குரலலில்லாத ஊமைப்பெண் பிறவிகளின் உடல்களில் பதிந்த பற்களின் கதைகளையும், அவள்களின் தொடைகளின் வலியையும் தீவிரத்துடன் கேட்டு ஆவணப்படுத்தி வருகிறேன்.

எல்லாரும் பெண்கள்தான் எல்லாருக்கும் வலிதான் celebrity னா அவங்க கஷ்டப்படலையா?அவங்களும் பெண்தானே?

சரிதான் யார் இல்லன்னா இப்போ??
குரலெழுப்பியாயிற்றல்லவா,எந்திருச்சு அடுத்தவங்களுக்கு பேச இடம் கொடுத்து விலகணும், கெடச்சுதுடா limelight னு ரோட்ல போற வாறவனுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு, நானும் பெண்தான், நானும் பெண்தான், என் கண்ணீர், என் அவலம் னு கூவிட்டே இருக்கறது புடிக்கல.

இங்க மூச்சு கூட விட முடியாம பல மென்முலைகள் கசக்கிக்காயப்பட்டுக்கொண்டிருப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டு என்ன dash க்கு இது ஒரு இயக்கம் மாதிரி பேசிட்டு..!!

ஊடகங்களுக்கு தீனி போடுவதும், உன் நிலையை நியாயப்படுத்திக்கொள்ளவும் இது நேரமல்ல. நடந்தது, ஆம் நடந்தது, என்று சப்தமிட்டு கூறிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதை விடுத்து plz புரிஞ்சுகோங்க, ஏன் இப்படிலாம் கேக்குறீங்க, என் புருசன் support பண்றாரு, நாங்க பாவம் இல்லையா?? what is all this nonsense?

பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் இந்த அத்துமீறல்களை ஒரு ஓலத்தினால் அடக்கிவிட முடியாது. மாற்றம் நிகழ தலைமுறைகள் ஆகும். விதைத்த விதைகள் அப்படி. வேரூன்றியவற்றை அடியோடு அழிக்க நிதானம் தேவை..தொடர்ந்த செயல்பாடு தேவை.
மாற்றம் குடும்பத்தில் துவங்க வேண்டும். அப்பன்,சிற்றப்பன், அண்ணன், அக்கம்பக்கத்தான் என எத்தனைப்பேரின் முகத்திரைகளை கிழித்தெரிய வேண்டிய அவசியம் உள்ளது!! அதையெல்லாம் விடுத்து பிரபலங்களின் problem க்கு மட்டும் வெளிச்சம் தேவையற்றதென்று படுகிறது. வெளிச்சத்திற்கு மேலும் வெளிச்சமெதற்கு? இருளில் ஒளிப்பாய்ச்ச முயற்சித்தலே உண்மையான புரட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *