பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.

கோகில ரூபன் -லண்டன்

MeToo080

மீ ரூ குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு விடயங்களை பற்றியே பேசப்படுகின்றது.

1- பெண்கள் ஆண் உலகில் அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும்,  வன் முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது போல சினிமா துறைகளிலும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதாகவும்

2. சாதிய மட்டத்தில் அல்லது வறிய நிலைப் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அத்துமீறல்களை வன் முறைகளைப் பற்றிப் பேசாது உயர் நிலைப்பெண்கள் குறிப்பாக கல்வி, தொழில், சாதி, புகழ் போன்றவற்றால் மேல் நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்களை மட்டுமே மீரூ Metoo பொதுவில் வெளிப்படுத்துகிறது என்பனவான கருத்துக்கள் பதியப்படுகின்றது.சினிமாத் துறையில் இடம் பெறும் பாலியல் ரீதியான வன்முறை சீண்டல்கள் அல்லது சுரண்டல்கள் என்பதை முன்னிறுத்தியே பெரும்பாலும் மீ ரூ தொடர்பிலான சர்ச்சைகள் தமிழுலகில் எழுந்திருக்கின்றன என்பது உண்மைதான். தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாத் துறையில் பெண்கள் மீதான அத்துமீறல்கள் என்பது மிகச்சாதாரணமான வழக்கமாக இருந்து வருகின்றது என்பதையும் அவைகளின் மீதான தாக்குதல் ஒட்டு மொத்த ஆண்மைய சினிமாவையும் ஆட்டங்காண வைத்துள்ளது என்பதுவும் உண்மையே. வைரமுத்து, சின்மயி சர்ச்சையில் வைரமுத்து குற்றவாளியா இல்லையா என்பதை விட “சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற கதைகள் சொல்லப்படுவதைக் காதால் கேட்க முடிகின்றது அப்படியானால் மேக்கப் மேன் முதல் முதல் புரோடியூசர் வரை எல்லா இடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்திருக்கின்றனர் என்பதேயே இது எடுத்துக்காட்டுகின்றது.. ‘மீரூ MeToo ’என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் அல்லது சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்துவிட வேண்டும் என நம்பவைக்கப்பட்டு வந்த ஒரு மரபின் மீதான பலத்த அடியாகவே பாரக்க முடிகிறது ஆனால் ஏகப் பெரும்பான்மையாகப் பாலியல் சுரண்டல்கள் இடம் பெறும் துறை ஒன்றில் ஓரிருவர் மட்டும் குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்படுவது ஏனையோரை சில சமயம் உத்தமர்களாக ஆக்கிவிடும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *