அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்

சி.ரமேஷ்

http://www.oodaru.com/wp-content/uploads/2014/01/karunavu-170x300.jpg

மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான அர்த்த தன்மையைத் தராத கவிதை வாசித்தலுக்கூடாகவும்புரிதலுக்கூடாகவும் அர்த்த தன்மையை சாத்தியமாக்கவல்லது. மனவெழுச்சியையும்எண்ணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நவீனகவிதை குறிவழிஇயங்கும் போது வடிவமற்ற வடிவமாகவும் வடிவத்துக்குள் புதியஉருமாதிரிகளையும் உருவாக்கவல்லது. அவ்வகையில் உருப்பெறும் ஆழியாளின்கவிதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை உள்வாங்கிப் பிறக்கிறது.நிராதரவான மக்களின் வலியும் வேதனையும் கவிதையெங்கும் நிறைந்துஇருக்கின்றன.ஈழமக்களின் வேதனைகளையும் துயரங்களையும் பேசும் இக்குரல்பெண்மையவாதத்தினுhடாக தன்னிருப்பையும் அவ்விருப்பியலுக் கூடாக எழும்வலியையும் பதிவு செய்கிறது.

ஆழியாளின் உரத்துப்பேச, துவிதம் ஆகிய இரு தொகுப்புக்களும் சமூகதாpசனங்களுக்கூடாக பெண்ணின் வாழ்வியல் அனுபவங்களைப் பேசின. சமூகமதிப்பில் பெண்ணின் இழிந்தநிலையையும் வாழ்வையும் பேசிய இத்தொகுப்புக்கள்பெண்ணுரிமைக்குரிய குரலாகவும் ஒலித்தன. அநுபவச் சூட்டில் மிளிரும்பெண்ணுணா;வுகளை ஆத்ம சுத்தியுடன் வெளிப்படுத்தும் ஆழியாளின் கவிதைகள்வெளியுலகினால் அதிகம் கண்டிராத மனித உணா;வுகளைப் பேசுபவை.

பெண்ணின் நுண்ணுணா;வுத் தளத்தில் எழும் அன்பு  கருணைஇவேட்கைஇவலிஇ கனவு போன்ற இன்னோரன்ன அகநிகழ்வுகளை வெளிப்படுத்தும்ஆழியாளின் பிறிதொரு தொகுப்பே கருநாவு.மாற்று வெளியீடாக வெளிவந்தஇத்தொகுப்பில் அம்மா தொடக்கம் நானும் வாழ்வும் ஈறாக இருபத்தைந்துகவிதைகள் உள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் மற்றொரு பகுதிஅவுஸ்ரேலியாவில் பிறந்த ஜாக் டேவிஸ், எலிசபத் ஹொஜ்சன், பான்ஸி றோஸ்நபுல்ஜாரி முதலானோரின் கவிதைகளை மொழிபெயா;ப்பினுhடாக அறிமுகம்செய்கின்றன. துவித வாழ்நிலையையும் வாழ்வனுபவங்களையும் பேசும்இவ்வெளி காட்சி அனுபவங்களுக்கூடாக புதிய படிமங்களயும் குறியீடுகளையும்தோற்றுவிக்கவல்லன.

http://www.oodaru.com/wp-content/uploads/2014/01/karunavu-170x300.jpg

தமிழ்ப்பண்பாட்டு மரபுவழிச் சமூகத்தில் பெண் அதிகாரமற்றவள். ஆண்வழிச் சமூகஅமைப்பில் பண்பாட்டு அடக்குமுறைக்குட்பட்ட பெண் தான் அடிமை என்பதைஉணராதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளாள். ஆண்வழிச்சமூக அமைப்பில்ஊதியமற்று உழைத்துழைத்து ஓடாய்த் தேய்ந்து உருக்குழைந்து போகும்துன்பியல் வாழ்வை ஆழியாளின் “அம்மா” என்னும் படிமம் மிக நுட்பமாகவெளிப்படுத்துகிறது.

நம் ஓய்வு நேரங்களிலும்
விடுமுறை நாட்களிலும் பண்டிகைக்
காலங்களிலும்கூட
அம்மா அவதியாய் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறாள்
இலைகளைக் காணாது பாதையோரத்து
மரங்கள்
வெலவெலத்து நிற்கின்ற நாட்களில்
சருகுகளைச் சலசலக்க வைத்தபடி
அம்மா ஓடுகின்றாள்…

பண்பாட்டுத்தளத்தில் பெண்ணானவள் அடங்கியும் இணங்கியும் போகசெய்யும்வழிமுறைகளை ஆண்மைய அதிகார மையங்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதை இக்கவிதை நுண்ணுணாவுத் தளத்தில் பூடகமாகவெளிப்படுத்தி நிற்கின்றது.

புறவுலகுடன் மனிதன் கொண்டுள்ள உறவுகள் பெரும்பாலும்உண்மைத்தன்மைமிக்கதாக அமைவதில்லை.பிறிதொருவகையில் கூறுவதானால்உண்மை என்பது நிட்சயமற்றது. ‘ழான் மோp எமில் லக்கான்’ கூறுவது போல்உண்மை அகநிலை என்னும் தனித்தன்மையால் உருக்கொள்கிறது.சொல்வெளிப்படுத்தும் பொருள் நிச்சயமற்றதாக நமது கட்டுக்கு அடங்கமறுப்பதாகஉருமாற்றம் கொள்ளும் போது உண்மையும் மனிதனின் அறிந்தலுக்கும்உள்வாங்களுக்கும் அமைய தோற்றம் கொள்கிறது. இதனை ‘2சைவரும் 1சைவக்காரியும்’ என்னும் கவிதை எடுத்துரைக்கிறது.

நீங்க சைவமா?
ம்…ம்…சைவப்பழம் நான்
நீங்க?
சைவம் சைவம் சுத்த சைவம்
சிக்கன் மட்டும் சாப்பிடுவேன்
நீங்க எப்படி?
ஓமோம் நானும்
மீன் தலை சாப்பிடும்
ஆட்டுக்குடல் மாட்டிறைச்சி சாப்பிடும்
செம்மறி கொழுப்பில் வதக்கின நத்தை
சாப்பிடும்
சைவக்காரி

மனஅழுக்குகளாலும் பொய்மையாலும் போலிமையாலும் கட்டுண்ட உலகைஇக்கவிதை ‘சைவம்’ என்னும் குறியீட்டு உத்திக்கூடாக வெளிப்படுத்தி நிற்கிறது.
 

“நவீன பெண்ணியம்” என அழைக்கப்படும் தீவிர பெண்ணிய வாதம் தந்தை வழிக்கோட்பாட்டை உடைத்தலை முக்கிய நோக்காகக் கொண்டுசெயற்படுகிறது.தந்தைவழிக் கோட்பாடே பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படைகள்என தீவிர பெண்ணிய வாதிகள் நம்புவதால் அதற்கு வித்தான திருமணம்இகுடும்பம்இ என்ற சமூகக் கட்டுகளையும் வெறுத்தனா;. இவ்வகையில் ஆழியாளின்“மௌனம்” இத்தன்மையினை தனக்குள் உள்வாங்கிக்கொள்கிறது.
தந்தையரே

ரு கெட்ட குமாரனைப் போல் மீண்டும்
உங்கள் வாயில்களை நோக்கி வருவேன் என
நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால்
அறிக ! நானோ அவனில்லை
நான் குமாரத்தி
நீங்கள் தரும் உயா;ந்த வஸ்திரத்தை
ஏற்கப் போவதில்லை
விருந்துண்டு உம்மோடு
கீத வாத்தியத்தில் மூழ்கிக் களிக்கவும்
போவதில்லை

“பாவியாகிய ஒருவன் மனந்திருந்தி மீண்டும் மனிதனாக மாறும் போது மாpத்தவன்மீண்டும் உயிர்த்தவனாகின்றான்”. கிறிஸ்த்தவ வேதகாமம் லுhக்கா 15ஆம்அத்தியாயத்தின் 11முதல் 32 வரையான வசனத்தில் கையாளப்பட்ட தொன்மத்தைஉள்வாங்கி ஆண்மையவாதத்தை தகா;க்கிறது. செல்வமனோகாpயின் “எதார்த்தம்”என்னும் கவிதை இரு குமாரருக்கூடாக  விழுமியத்தைக் கடந்து நிற்கும்நடத்தைசார் மனிதமனத்தின் இயல்புவழியை வெளிப்படுத்தி நிற்க இயல்பாகவேவாழநினைக்கும் பெண்மனதின் வெளிப்பாடாக இக்கவிதை நிற்கிறது.

கதையென வழக்கிலுள்ள ‘ஒருவகை எழுதல் முறையானது’ இன்று பல்வேறுமுறைமைகளினால் வித்தியாசப்படுகிறது. மனிதப் பண்பினை மையமாகக்கொண்ட ‘கதையாடல்’, புனைகதைவடிவமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டநிலையில் இன்று கதை சொல்லுதல் நவீன கவிதை உத்தியாகவும்இடம்பெறுகின்றது. காட்சிகளுக்கூடான கதை கூறுதலை அடிப்படையாகக்கொண்ட ஈழத்து நவீன கவிதை புதிய சொல்முறையாலும் வெளிப்பாட்டுமுறையாலும் தன்னை நவீன கவிதையாக வெளிப்படுத்திக் கொண்டது.மண்பட்டினங்கள், ‘பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று,‘வன்னிநாச்சியாரின் சாபம், ‘மடுவுக்குப் போதல்இ ‘யாழ்ப்பாணமே ஓ.. எனதுயாழ்ப்பாணமே’ ஆகிய நிலாந்தனின் கவிதைகளும்É றியாஸ்குரானாவின்‘ஆதியிலிருந்து கிழக்குப்பக்கம் பிரிகிறது ஒரு கிளைஇ ‘ஒரு சிறுபான்மைக்கவிதை’, முதலான கவிதைகளும்É மஜீத்தின் ‘சுள்ளிக்காடும் செம்பொடையானும்போன்ற கவிதைகளும் இத்தளத்தில் இயங்குகின்றன. ஆழியாளின் “தாயும் மூன்றுயாமங்களின் தேவதையும்” என்னும் கவிதை கறுப்பின மக்களின் வாழ்வியல்அவலங்களையும் வௌ;ளையா;களை அவா;கள் எதிர்கொண்ட தன்மையையும்வெளிப்படுத்தி நிற்கிறது.

மனிதாகள் எவரும் உதவவில்லை
பெருங்கடவுளரும் கைகொடுக்கவில்லை
அவளின் பாதம் பட்டநடை பாதை நெடுகிலும்
பூண்டுகளோ கருகித் தீய்கின்றன
எந்த வாயும் அவளுக்காககத் திறக்கவில்லை
எவா; கண்களும் அவளுக்காகக் கனியவில்லை
எந்த சீவன் தன்னும் சாட்சியாக
முன்வரவில்லை
என் மகளே என் மகளே எனப்
பிதற்றிக் கொண்டு முன்நடக்கிறாள்
அவள்

நாடகம், புனைவு, கவிதை என்னும்  முப்பாpமாணங்களை உள்வாங்கி எழுதப்பட்டஇக்கவிதை நவீன கவிதை இயங்கியலின் அதீத தன்மையை சுட்டிநிற்கிறது.

இருபதாம் நுhற்றாண்டில் தோன்றிய வீறுணா;ச்சிக் கவிஞா;களின் கவிதைகளில்இயற்கை முதன்மைமிக்கது. இயற்கை இகந்த தன்மைத் தழுவிய கவிதையின்வெறியினை (pழநைவiஉ inளிசசயவழைn) பாரதி, பாரதிதாசன் முதல் பலாpன்கவிதைகளில் காணலாம். பாரதி கவிதை வெறியைப் பெறுவதற்காக வாழ்நாளின்பெரும்பகுதியை இயற்கைச்சூழல்களிலும் கடற்கரைகளிலும் பாரதி கழித்தான்என்பதை யதுகிரியம்மாளின்  “பாரதி நினைவுகள்” நுhலில் கூறுவார். இருபதாம்நுhற்றாண்டு வீறுணா;ச்சிக் கவிதைகள் இயற்கையை வெளிப்படுத்தி நின்றதைப்போல் ஆழியாளின் கவிதைகளும் இயற்கையை வெளிப்பட்டுநின்றன.

விரல்களால் கீறி அழித்தலையும்
காற்பெரு நகத்தால் நிமிண்டி
புகைத்தலையும்
கால் நனைக்கையில் பாதத்துhடு நழுவிப்
போனவையும்
மணற்கோட்டையாய் எழுந்தவையும்
தோண்டிய குழியுள் விழுந்தவையும் என
எத்தனை இரகசியங்களைப்
புதைத்திருக்கிறோம் கடற்கரைகளில்?
எத்தனையைக் கரைத்திருக்கிறோம் இக்
கடல்நுரைகளில்

தோற்றப்பொருளான இயற்கை ஆழியாளின் “பெருமடி”, “ஏமலாந்தியின்விடுமுறைநாள்”, வரைபடம்” முதலான கவிதைகளில் கற்பனை கலந்தகலைநுட்பத்தோடும் உள்ளுணா;வின் துடிப்போடும் வெளிப்படுகிறது.
கிறிஸ்தவாகளின் “தவக்காலம்” எனப்படுவது யேசுவினுடைய பாடுகளையும்அவருடைய மரணம்இ உயிர்ப்பு முதலானவற்றையும் விளக்குகிறது. நாற்பதுநாள்வனாந்தரத்தில் இயேசுபிரான் உபவாசமிருந்து அவா; தந்தையிடம்மன்றாடியதையும் சிலுவைபாடுகளையும் நினைவு கூருமுகமாக இந்நோன்பு கிறிஸ்தவாகளால் நோற்கப்படுகிறது. விபூதி புதனுடன் ஆரம்பித்து பொpய வௌ;ளிவரை தொடா;ந்து உயிர்த்த ஞாயிறுடன் இந்நோன்பு நிறைவு பெறும். குருத்தோலைஞாயிறு முதல் பொpய வௌளி வரையுள்ள நாட்களை புனித வாரமென்பா இந்நாளில் இயேசுபிரான் குருத்துவம், நற்கருணை போன்றவற்றைஏற்படுத்தியதுடன் சிலுவைப்பாடுகளையும் அநுபவித்தார். இதனை சண்முகம்சிவலிங்கத்தின் “எமது பாடுகளின் நினைவாக”, ஆழியாளின் “அன்று புனிதவௌளி 2013” முதலான கவிதைகள் விளக்கி நிற்கின்றன.

திடீரென /எல்லோரது கழுத்துக்களையும் கண்களையும்  /
மேலே உயரச் செய்தவண்ணம்  ஃ என் கைகளைத் தோகையாக

விரித்துப்  / பரப்பியபடி  /  நீ கீழே வந்து கொண்டிருக்கிறாய்  /
           …. புனித ஞாயிறன்று நீள் சட்டகத்துள் ஓவியமாய் ஃமஞ்சள் சட்டை,
           சப்பாத்தோடும் / நக்கல் சிரிப்போடும் /உன் உயிர் நண்பி ஒலியாவின்
           முன் /உயிர்தெழுகிறாய் …”

இயேசுபிரானின் உயிர்தெழுதல் ஆழியாழின் கவிதையில் புதிய பாpமாணம்பெறுகிறது.
கொடுமைகளுக்கு எதிரான எதிரப்பின் குரலாக எழும் ஆழியாளின்‘மன்னம்போpகள்’ ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் மனிதவதையினைத்தத்துருபமாகப் பதிவு செய்த கவிதையாகும். 1971இல் ஜே.வி.பி. கிளாச்சியில்பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கி 1971.04.16 அன்று படையினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டமன்னம்போp, 17.05.1997இல் அம்பாறையில் சென்றல் முகாம் பொலிசாரினால்வன்புணா;வுக்குப் பின் கணவன் முன்னிலையில் யோனியில் கிரனெட் வைத்துவெடிக்கச் செய்த கோணேஸ்வாp முருகேசு, முதலானவரைப் பாடும் இக்கவிதை,வீச்சு மிக்க ஈழத்துக் கவிதைகளில் ஒன்றாகும்.தாயக வாழ்வின் அவலங்களைஇக்கவிதையைப் போன்று “தப்ரபேன் என்ற செரண்டிப் என்ற சிலோன்”, கொப்பித்தாளில் கிடந்த பான் கீ மூனுக்கு விளங்காத குறிப்ப யாருடையது ,“வெற்றிவாகை”,“சூட்டுக்குச் சொந்தக்காரா;” முதலான கவிதைகளும் புதிய பாடுபொருண்மைக்கூடாக வெளிப்படுத்தி நிற்கிறது.
தன்னைக் குறித்து சுயவுணாவு கொள்வதும் மாறிவரும் உலகில் சமூகதன்மைகளுக்கேற்ப முழுமையாக இயங்குவதுமே நவீன கவிதையின் இயங்குமுகமாகும்.

இவ்வடிப்படையில்  ஈழத்துக்கவிதைகள் தேசிய விடுதலையைஅவாவி நிற்பவையாகவும் வன்முறைகளுக்கு எதிரான குரலாகவும் ஒலிக்கத்தொடங்கின. ஆழியாளின் “செவ்வரத்தம் பூ” ‘சிவப்பு’ என்னும்வண்ணபடிமத்துக்கூடாக குருதி படிந்த ஈழதேசத்தைக் காட்டிநிற்கிறது.

அவனுக்கோ சிவப்பே பிடிக்கவில்லை / சிவப்பை விட்டுத் /துhரப் போவதாக /
அவன் முடிவெடுத்துக் கேட்டபோது ஃ அவாகள் / அவனை விடவில்லை / வாழக்
கிடைத்த நாளெல்லாம் / அவனும் சிவப்பை வெறுத்தபடியே இருந்தான் / ஆனால்
அவாகளோ / அவனை போக விடவில்லை…. /ஒரு சாதாரணநாளில் / செம்மண்
     புழுதி தினமும் பிரண்டெழும் குச்சு /  ஒழுங்கையில்/ துவண்டு / ஊர் நாய்கள்
எட்டி குரைக்க / மிகச் சாதாரணமாய்ச் / சிவப்பில்  ஊறித் தோய்ந்து கிடந்தான் /

ஒரு செவ்வரத்தம் பூப்போல

மனிதாகள் வேட்டையாடப்படுவதை இக்கவிதை மென்மையான நுண்ணுணா;வுத்தளத்தில் விளக்கி நிற்கிறது.
துல்லியமான சொற்கள், சிக்கனமான வாpகள், காட்சித்தன்மை, இயற்கைவருணிப்புக்கள் என்னும் தன்மைக்குள் இயங்கும் ஆழியாளின் எழுத்துக்கள்காத்திரமானவை. சமகாலப் பெண்கவிஞா;களில் ஒருவரான ஆழியாள் உறவின்மென்னிலைகளை நுண்ணுணா;வுக் கூடாகக் காட்சிப்படுத்துபவா;.கவிதையின்பிரதான போக்கிலிருந்து கிளைத்து புதிய போக்குக்கு இட்டுச் செல்லும்இவ்வெழுத்துக்கள் மிகைத்தன்மையற்றவை. தன்னுடைய இருப்புக்கு எதிரானநிலவரங்களை விமா;சிக்கும் இவ்வெழுத்துக்கள் நுண்ணுணா;வுக்கூடாக அர்த்ததளத்தை உருவாக்குபவை.

ருநாவு கவிதைத் தொகுதி பற்றி வெளியீடும் விமர்சனங்களும்

மரப்பாச்சி வழங்கும் கவிதை வாசிப்பும்  -ஆழியாளின் கருநாவு கவிதைத்தொகுதி வெளியீடு ம்

ஆழியாளின் கருநாவுஅறிமுகம்

ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!யாழினி

ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு

தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு ––    சு. குணேஸ்வரன்

கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு – வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *