மதமும் பெண்களும்

  விஜி,திண்டுக்கல்   
   
மதம் என்பது மனிதனை மனிதன் பிரித்துக்காட்டவே உதவுகிறது. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளைக் கொண்டே மதம் கட்டிக்காக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே தங்கள் முன்னோர்கள் பின்பற்றும் மதத்தையே தங்கள் சந்ததிகளுக்கும் தொடர்ந்து பின்பற்றும் படி சமூகத்தில் கற்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிவு ஆராய்ச்சியை கெடுப்பதாகவே மதத்தின் கோட்பாடுகள் அமைந்துள்ளது.ஆதி காலத்தில் மதம் என்பது நன்னெறிகளுக்காக ஏற்படுத்த பட்டதற்காக இருந்தாலும் பெண் இனத்தை அடக்கி அடிமைபடுத்தும் ஒரு கருவியாகவே இந்து மதமும் கிறித்துவ மதமும் முஸ்லீம் மதமும் பிற ஏனைய மத்டங்களும் உள்ளன .  இந்து மதம்                அறிவு ஆராய்ச்சியை கெடுத்ததே இந்து மதம்தான் ஆண்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை பெண்களுக்குத்தான் எல்ல கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும் என்ற மூடஅறிவீனமான கொள்கைகளை கொண்டதுதான் இந்து மதம்.இந்து மதத்தில் பெண்களை ஈனப் பிறவிகள் என்றும் சுத்த்ந்திரத்திற்க்கு அப்பாற்பட்டவர்கள் என்று மேலும் ஒரு பெண் குழந்தை சிறு வயதில் பெற்றோராலும் திருமணம் ஆன பின் கணவரால் பாதுகாக்க பட வேண்டும் என்றும் கணவன் இல்லை என்றால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் பாதுகாப்புத் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெண்னின் உடலே அவளுக்கு பாதுகாப்பு இல்லாத அளவில் உள்ளது என்றும் பெண் வீட்டில் வைத்து பாதுகாக்கபடவேண்டியவள் என்றும் கேவலமான கொள்கைகளும் கோட்பாடுகளும் சித்தரிக்கின்றது. பெண் எப்போதும் பூச்சூடி வாசனை திரவியங்களை பயன்படுத்தி கணவனை திருப்தி படுத்துபவளாக மட்டும் இருக்க வேண்டும். பெண் தனித்து வெளியே செல்ல கூடாது என்றும் தங்கள் வீட்டைத்தவிர வேறு இடங்களில் ஒரு பெண்ணால் தனித்து தங்க முடியாது. அப்படி தங்கினால் குடும்பத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது .மேலும் பெண் சந்ததிகளை பெருக்குபவள் அவள் வெளியில் எங்கும் செல்ல கூடாது. கணவனோ கணவன் வீட்டாரோடு தான் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலூம் பெண்கள் மென்மையானவர்கள் கடின வேலை செய்ய லாயக்கில்லதவர்கள் எனவெ குடும்பம், சமையல்,கோவில் குளம் என்றே இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது. ஒவ்வொரு மதத்திலும் அந்தந்த மதத்தைச் சார்ந்த பெண்களுக்கென்று தனி அடையாளத்தை வைத்துள்ளார்கள் .

       உதாரணமாக இந்து பெண் என்றால் நெற்றியில் விபூதியிட வேண்டும்

திருமணம் ஆன பெண் என்றால் தாலிக்கயிறு , மெட்டி , மூக்குத்தி , வளையல்கள் கண்டிப்பாக அணியவேண்டும் .மேலும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டும் விரதம் இருக்க வேண்டும். இந்த நாள்களில் அசைவம் சமைக்க கூடாது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் தீண்டதகாதவளாய்  ஒதுக்கி  வைக்கும்  பழக்கம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

       உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக் கொண்டால் ஒரு பிரிவு புலால் உண்பவர்களாகவும் புலால் உண்னாதவர்கள் சைவம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் . இந்த இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண சமந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்

இந்து மதத்தில் கடவுள்கள்

    இந்து மதத்தில் கடவுள்களையும் பிரித்துதான் வைத்துள்ளார்கள் .

ஆண் கடவுள்கள் – முருகன் / பெருமாள் , வெங்கடாஜலபதி போன்ற பணக்கார கடவுள்களாம்(உண்டியல் வசூலில்) இவர்களை வணங்குபவர்கள் பார்ப்பனர் , வெள்ளாளன் , செட்டியார் , முதலியார் போன்றோர் வணங்குகின்றனர். மேலும் பெண் கடவுகள்களான மாரியம்மன் , பத்ரகாளி , இசக்கியம்மன் போன்ற கடவுள்களை தாழ்த்தப்பட்டவர்களும் மிகவும் பிற்படுத்தபட்டவர்களும் வணங்குகிறார்கள் . பக்தியிலும் பேதம் பார்க்கிறார்கள். ஒரு பார்ப்பன பெண் இசக்கியம்மனையோ காளீ போன்ற தெய்வங்களையோ வணங்கியதாக சரித்திரமே இல்லை. இதிலிருந்து மதம் மனிதனை பிரித்து வைப்பது தெளிவாக தெரிகிறது.

     இந்து மதம் பெண்களை இழிவு படுத்துவது கீழ்க்கண்ட உதாரணம்

1.   பெண்கள் அலங்காரம் செய்யப்பட்டு ஆண்களுக்கு விருந்தாவது.

2.   உடமைகளில் ஒன்றுதான் பெண்.

3.   பெண்கள் போகதிற்கு உறியவர்களாக இருக்கிறார்கள்(வேதங்கள்)

4.   அதர்வண வேதத்தில் பெண்கள் போஷியா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என அழைக்கப்படுகிறாள்

5.   மகபாரததில் பெண்ணாய் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது.

6.   அர்த்த சாஸ்திரத்தில் பெண் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ கையிற்றினாலோ பெண்கள் வாயிலே அடிக்கலாம்

7.   அதர்வண வேதம் பெண் மகவு பிறக்கவே கூடாது, பெண் குழந்தைகள் சாக கூடியவர்கள்

 

      மதங்கள் பெண்ணை ஒரு மனுஷியாக பார்க்காமல் இன்று இந்த நிமிடம் வரை ஒரு பொருளாக பார்க்கும் பார்வை மாறவில்லை என்பது கூர்ந்து கவனித்தால் நன்கு புரியும்.

 

கிறித்தவ மதம்

    இங்கும் இந்து மததிலிருந்து மதம் மாறியவர்கள் என்பதால் ஒரு சில மாற்றங்களை தவிர்த்து பெண்களை முடக்கி வைக்கும் பழக்கம் கிறித்துவத்திலும் இருந்து வருகிறது . பெண்கள் வேற்று மத சாதியில் உள்ளவர்களை மனமுடிக்க அனுமதி கிடையாது. அப்படியே மனமுடிக்க நேர்ந்தால் கிறிஸ்தவ சபையிலிருந்து விலக்கி வைக்கப் படுவார்கள் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போதோ பெண்கள் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும். கிறித்துவ பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்ககூடாது . சில பிரிவுகளில் கலர் உடை உடுத்தக் கூடாது, நகை அணியக்கூடாது, இறை வழிபாட்டிற்க்கு செல்லும் போது கண்டிப்பாக் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மதம்

         இஸ்லாம் பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது . பெண்களுக்கு கோஷா முறை உள்ளது .பர்தா அணிந்து முகத்தை மூடி பிற ஆண்களை பார்க்காத வண்ணம் உடை உடுத்தப்படுகிறது. காற்று புகாத உடை எத்தனை மன உளைச்சலை தரும். பர்தா அணிந்து கொள்ளுவது அசௌகரீயமாக பட்டாலும் பர்தா அணியாமல் பெண்களால் இருக்க முடியாது.

மிக முக்கியமாக பார்த்தோமானல் இறை வழிபாடு நடத்துமிடங்களுக்கு பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. ஏன் கல்வி கூடங்களுக்குகூட பர்தா அணிந்து வருவதை பார்க்க முடிகின்றது. திருமண முறை எடுத்துக்கொண்டால் கணவனுக்கு அந்த பெண்ணை பிடிக்கும் வரை சேர்ந்துவாழ்வதும் பிடிக்கவில்லை என்றால் “தலாக்” சொல்லி பிரிந்து கொள்ளலாம். இதானால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

   கோஷா முறையை எடுத்துக்கொண்டால் துருக்கி , ஆப்கன் ஆகிய நாடுகளில் புரட்சிகளால் கோஷா முறையை ஒழித்துள்ளார்கள் துருக்கியில் கமால் பாட்சாவும் ஆப்கனில் அமனுல்லாவும் கோஷா முறையை ஒழித்துள்ளார்கள். நம் நாட்டிலும் இந்த நிலை மாற வேண்டும்.

   நம் நாட்டில் சிறந்த கல்வியாலும் , அறிவியல் வளர்ச்சியாலும் , பொருளாதார வளர்ச்சிகளாலும் தகவல் தொடர்புகளாலும் , அரசியல் மாற்றங்களாலும் எத்தனையோ வளர்ச்சிகள் நம் அடைந்து விட்டாலும் பெண்ணைப் பார்க்கும் பாகுபாடற்ற பார்வையும் பொருளாக நினைக்கும் தன்மையும் நம்மை விட்டு அகலவேண்டுமாணால் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நபரும் பெண்ணை சரி சமமாக மதிக்க வேண்டும். தனக்கிருக்கும் உரிமையையும் ஆண்கள் பெண்களுக்கு அன்பு,ல் பாசம் , உணர்வு அத்தனையும் சமமாக கிடைக்க செய்ய வேண்டும் .உட்லாலும் உள்ளத்தாலும் வலிமை நிறைந்த பெண்கள் தங்கள் அடிமை நிலையை உணர்ந்து தங்களை அடிமைபடுத்தும் அத்தனை விஷயங்களையும் தூக்கிஎறிந்து விட்டு வர வேண்டும் . சமரசம் செய்து வாழும் வாழ்வு நம்மையும் நமக்கு பின் வரும் சந்த்ததிகளையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து தடையாய் இருக்கும் மத கட்டுப்பாடுகளை உடைத்து மனிதனோடு மனிதராக சமத்துவ வாழ்வு பெற வேண்டும்.

   நன்றி

            

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *