இரும்பு பெண் ஏஞ்சலா மேர்க்கலின் அரசியல் ( (Angela Merkel ) சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது

.

This image has an empty alt attribute; its file name is angela.jpgஇரும்பு பெண் ஏஞ்சலா மேர்க்கலின் அரசியல் ( (Angela Merkel ) சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.2005 – 2021 முதல் ஏஞ்சலா மேர்க்கலின் ( Angela Merkel ) 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.அங்கேலா மேர்க்கெல் கடந்த 16 ஆண்டுகளில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜெர்மனியை வழிநடத்தினார். தனது குறிக்கோளை நன்றாகச் செய்தார்..ஒரே பெண் பல ஆண்டுகளாக அரசாங்கத்தை தலைமை தாங்கும் போது பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றையெல்லாம் தாண்டி அங்கேலா மேர்க்கர் தனது அரசாட்சியை மிகச்சிறப்பாகவே செய்துள்ளார் என்ற கருத்துக்களும் உள்ளன

பலம் பொருந்திய ஆணாதிக்க சமூகத்தில் நின்று பிடிப்பது என்பது மிககடினம் அங்கேலா மேர்க்கலின் தலைமை மற்றும் மூலோபாயம் அவரை அந்த பதவியில் நீடிக்கச் செய்தது விமர்சனங்களும் உள்ளன.அரசியல் கட்டமைப்பில் அவர் வழி நடத்தினார். அதன் அதிகார தளத்தை, மூலோபாய ரீதியாக தவிர்க்க முடியாத நிலையில் வைத்திருக்க முடிந்தது இந்த கட்டமைப்பின் நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், தனது சொந்த தலைமைத்துவ பாணியைக் கொண்டிருந்தார் என்று ம் அவர் எதிர்கொண்ட நான்கு பெரிய நெருக்கடிகள் – யூரோ நெருக்கடி- இடம்பெயர்வு நெருக்கடி- பிரெக்ஸிட் மற்றும் கொரோனா தொற்றுநோய் – இவை அனைத்தும் அதிக அளவு நிச்சயமற்ற தன்மையால் வகைப்படுத்தப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள் அரசியல் கட்டமைப்பின் நிலைமைகள் வேகமான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளாதாக ஜேர்மனிய மக்கள் கருதினாலும் அவர்களுக்கு இன்றையை நிலைமையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் ஜேர்மனியர்கள் ( Angela Merkel ) ஒரு சிறந்த தலைவராக நீண்ட காலமாக நினைவில் வைத்திருப்பார்கள்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *