மாற்றுதிறனாளிப் பெண்களின் அறைகூவல் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு -மட்டகளப்பு 8 டிசம்பர் 2021

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் நாள், மட்டக்களப்பின் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்;கு, குறிப்பாக பெண்களுக்கு வரலாற்று முக்கியத்துவமுடைய நாளாக மாறியுள்ளது. மட்டக்களப்பின் பொது வெளியில் மறைத்து மறுக்கப்படும் உண்மைகளை கலையுணர்வுடனும், மனத்திடத்துடனும், பொறுமையுடனும் மாற்;றுத்திறனாளி பெண்கள் முன்வைக்க, பிற சமூகத்தினர், உண்மையின் ஒளியில் நெகிழ்ந்து போய் நின்றனர்.

ஏதோ ஓரளவு காற்றோட்டமுடைய செல்வநாயகம் அரங்கில், அசௌகரியமென்றும் பாராமல், பாய்களிலும், கதிரைகளிலும் மட்டகளப்பின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், அரசு உத்தியோகத்தர்கள், தன்னார்வ நிறுவன பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் என ஒரு உயிரோட்டமான குழு கூடியிருந்தது. முதலில் வந்த சிறு அறிமுகத்தில் இது மட்டக்களப்பின் மாற்றுத்திறனாளி பெண்களின், டிசம்பர் 3ஆம் திகதி அனுட்டிக்கப்படும்; மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கான விழா என்பது அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் உதவியுடன் முற்றுமுழுதாக மாற்றுத்திறனாளி பெண்கள் வடிவமைத்து, பயிற்;சி செய்து நிகழ்த்திய ஒன்று.

ஒரு வருட காலமாக சந்தித்து, சுக துக்கங்களை பகிர்ந்து, பிரச்சினைகளை ஒன்றினைந்து எதிர்கொண்ட இந்தக் குழுவுடன்; முதல் பொது வெளிப்பாடே இந்த நிகழ்வு. முதலில் விளக்கேற்றுவதற்;குமுன், அறையின் ஒவ்வொரு திசையிலிருந்தும் மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்க்கை கதைகள் அவர்களாலேயே கூறப்பட்டது. ‘வன்னிக்காரி’ என்று ஏசுவது, ‘எங்;கே சுத்திட்டு வர்ரா’ என்று சமூகத்தினரும், சில நேரம் குடும்பத்தினரும் கதைப்பது, வைத்தியசாலையில் நீண்ட நேரம் காத்திருந்து புது கால் கேட்டால், அங்குள்ளவர் பழைய காலை கொண்டு வரச்சொல்வது, அப்படி பயனிக்க முயற்;சிக்கும்போது ஓயாது ஏற்படும் சவால்கள் – நிற்காத பேருந்துகளும், இருக்க இடமில்லாமல் போவது என்று பல கதைகள்.இந்த கதைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டு குழுவினர் தமது செயற்கை கால்களை நம்முன்னேயே பொருத்தினர்.

அந்த காலுடன் வாழ்வதிலுள்ள தினசரி சிக்கல், தம் செயற்;கை காலை தூக்கி வைத்து கொண்டு அழும் அம்மா” என்று கதைகள் கேட்போரின் மனதை தொட்டன. கதை சொல்லிய கையுடன், வாருங்கள் ஒன்றினைவோம் என்று அறைகூவலிட்டு குழுவினர் அனைவரும் விளக்கேத்தி நிகழ்வை தொடங்கி வைத்தனர். இதன்பின், பாட்டு, கவிதை, பேச்சு, நடனம், கும்மி, காதல் பாடல் என்று எல்லா வடிவங்களிலும் தமது வாழ்வின் உண்மைகள், சவால்கள், ஆசைகள் கனவுகள் ஆகியவற்றை கொட்டித் தீர்த்தனர். மட்டக்களப்பின் பொது சமூகத்தினர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் நிகழ்வின் பங்கேற்று இவை அனைத்தையும் கேட்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை, சவால்களை பற்றி ஒரு சிறு உரையும் கவிதையும் பகிர்ந்;து கொண்டார் ஏறாவூரைச் சேர்ந்த ஜாஹிரா அவர்கள், இவர் கடந்த கால யுத்தத்தில் இன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இன்று இனங்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவர குரல் கொடுக்கும் ஒரு படைப்பாளி ஆவார். பெண்ணியச் செயற்பாட்டாளர் சுபத்திரா ஜெயக்குமார் அவர்கள் ஒரு கலந்துரையாடலை நடாத்திச் சென்றார். அதனுள் மாற்றுத்திறனாளி குழுவினைச் சேர்ந்தவர்கள் தௌ;ளத்தெளிவாக தமக்கு வேலை செய்வதற்;கான வாய்ப்புக்களை அரசு மூலமாகவும், பொதுவாக அனைத்து வெளிகளிலும் உருவாக்க வேண்டியதின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தனர். சமூகத்தில் அனைவரையும் போல அவர்கள் பணிபுரிந்த வாழ உகந்த நிலைப்பாட்டினை உருவாக்குவது அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அதோடு விரும்புவோருக்கு ஒன்றினைந்து குழுவாக சுய தொழில் மேற்கொள்ள தேவையான சேவைகளின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. தொழில்வாய்ப்புக்களை அவர்கள் முழுமையாக நிறைவேற்ற போக்குவரத்து சார் சவால்களை எதிர்கொன்டு தீர்வு காணவேண்டிய விடயம் வலியுறுத்தப்பட்டது.

போக்குவரத்து உட்பட பற்பல அரசு சேவைகளை நாடுவதற்;கு, வெளியே இலகுவாக தெரியாத, காட்டமுடியாத மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு உதவ, ஒரு தேசிய அடையாள அட்டையின் அவசியம் பேசப்பட்டது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளான கொடுப்பனவு மற்றும் 3மூ வேலை வாய்ப்பின்; ஒதுக்கீடு ஆகியவற்றில் எழும்பும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. கொடுப்பனவினுள் உள்வாங்கப்படக்கூடிய மாற்றுத்திறனாளிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை போதிய அளவு இல்லை என்பது தெளிவாக கூறப்பட்டது. அதோடு 3மூ ஒதுக்கீடு செயல்முறை படுத்தப்படாததும், அதனுள் மிகக்குறைந்த அளவே பெண்கள் உள்வாங்கப்படுவதும், சாதாரண பரீட்சையில் தேர்ச்சி என்னும் நெறிமுறை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் அடைய முடியாத சூூழலும் வலியுறுத்தப்பட்டது. இதனை மாற்றி அவர்களது திறன்;களை மதிப்பிட்டு வேலை வாய்ப்பு அளிக்கும் முறை கொண்டு வர வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரின்; மகளான சிறுமி சர்ச்சனா, ஊனம் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரதும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை, தனது எதிர்காலக் கனவை மழலை மொழியில் பகிர்ந்து கொண்டார். மட்டக்களப்பு அமேரிக்கன் சிலோன் மிசனில் இருந்துகொண்டு தமது கல்வியை மேற்கொண்டு வரும் இளம் மாணவி விவேகா, மாற்றுத்திறனாளிப் பெண்களின் வாழ்க்கை கதைகளின் பதிவான ‘மூன்றாம் கால்‘ புத்தகம் பற்றிய சிறு கருத்துரையும், அப்புத்தகம் அவருள் எழுப்பிய உணர்வுகளின் வெளிப்பாடாக ஒரு கவிதையும் நம்முடன் பகிர்ந்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து தேசிய மட்டத்தில் பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் ஷசிறிரீன் சரூர் தமது கருத்துக்களை ஒலிப்பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடையும் வேளையில் மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் அவர்கள் தமது நேரத்தை இதற்காக ஒதுக்கி, அனைவரதும் கருத்துக்களையும் கேட்டு, தமது கருத்தினையும் விரிவாக பகிர்ந்து கொண்டமை வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஊர் மட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை சமமான பிரஜைகளாக கணக்கில் கொண்டு அவர்களது கருத்துகளை அவதானிப்பதில் இன்னும் எவ்வளவு சவால்கள் உள்ளன என்பதும், அந்த கனவினை அடையும் பாதை எவ்வளவு நீண்டது என்பது அவரது பேச்சினால் உணர முடிந்தது. இருந்தாலும் மாற்றுத்திறனாளி குழு துவண்டு போகவில்லை.

அனைவரும் ஒன்றினைந்து நிகழ்ச்சியின் நிறைவாக, பெண்களின் ஒன்றுகூடலுக்கான வடிவமான கும்மியை உரிமை கும்மியாக மாற்றி:‘விடியலுக்கு நாங்க காத்திருக்கோம் அதை காணும் வரை நாங்கள் ஓயமாட்டோம்’ என்ற உறுதியான குரலுடன் நிகழ்வு நிறைவேறியது. ஒரு நீண்ட பயணத்தின் திடமான தொடக்கமே இந்த நாள். இவ்வளவு தைரியமிக்க இந்த பெண்களுடன் வாழ்பவர்கள்; எப்படி அவர்களது குரல்கள் கேட்காதவாறு, உண்மைகள் தெரியாதவாறு வாழ முடியும்? கண் விழித்திடுவோம்! நம்மிடையே வாழும் மாற்றுத்திறனாளிப் பெண்களை அறிந்திடுவோம், உணரந்;திடுவோம். அனைவருக்குமான சமமான சமூகமாக, நம் ஊரை, நாட்டை, உலகை மாற்றிடுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *