மோஷன் காமிக்ஸ் (Motion Graphic / Comics) புதிய வடிவம் -சர்மிளா செய்யித்

கலைத்துறையிலாகட்டும் ஊடகத்துறையிலாகட்டும் ஒப்பீட்டளவில் மோஷன் காமிக்ஸ் (Motion Graphic / Comics) புதிய வடிவம். இது காமிக் நாவல்களையும் அனிமேஷன் ஆகிய இரண்டின் கூறுகளையும் ஒருங்கிணைத்து உயிர் தரும் அற்புதமான ஒரு கலை வடிவம். ஒலி விளைவுகள், குரல் நடிகர்கள், இசை, அனிமேஷன் ஆகியவை அசல் காமிக் புத்தகக் கலைப்படைப்புடன் இணைந்து கதையை மேம்படுத்தவும் மேலும் சினிமா அனுபவத்தை உருவாக்கவும் செய்கின்ற ஒரு கலைவடிவம் தமிழில் முதன் முறையாக Treasure Land என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலைத்தேய கலை உலகில் மட்டுமே பிரபலமாக இருந்த அனிமேஷன் கிராஃபிக் நாவல் காட்சியை முதன் முறையாக இலங்கையிலிருந்து Bavaneedha Loganathan முயன்றிருக்கிறார். மனிதர்களின் வாழ்வையும் கனவுகளையும் நாகரீகங்களையும் முடிவு செய்கின்ற நிலம் நாம் எண்ணிப்பார்க்க முடியாத நம் புலனில் அகப்படாத எத்தனையோ புதையல்களைத் தன் இதயத்தில் மூடிக்கொண்டு சலனமற்றுக் கிடக்கின்றது. நிலத்தின் உயிரையும் அதன் மூச்சையும் உணர்ந்து மதிக்கின்ற யாரும் அதனைத் தோண்டித் துன்புறுத்துவதை விரும்புவதில்லை. Treasure Land கதையின் துவக்கமே நிலத்தைத் தோண்டுவதில் தொடங்குகின்றது. உள்நாட்டுப் போரின் புதையல்களாக நம் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளையும் மனிதப் புதைகுழிகளையும், மக்களின் சொத்துக்களையும் அது நினைவுபடுத்திப் பதட்டமுறச் செய்கிறது. அவ்வளவு மிரட்டல்களையும் எதிர்ப்புகள் அரச அதிகாரிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி அப்படி எதைத்தான் நிலத்தைத் தோண்டிக் கண்டடைய தேவிகா துடித்தாள் என்பதற்கான பதிலை அறிய வெறும் 10 நிமிடங்கள் காத்திருந்தாலே போதும்! தேவிகா தேடிய அந்தப் புதையலை நீங்களும் காணுங்கள். இதோ அதற்கான லிங்க். https://www.youtube.com/watch?v=lo-gG_wuuJAகால்படாத காடுகளை தங்கள் உழைப்பாலும் உயிராலும் நாடாக்கி செழிக்க வைத்து அதே மண்ணில் உரமாகிப் போன இறப்பர் தோட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தப் படைப்பின் உயிர்நாடியாக இருக்கும் பவனீதாவை மானசீகமாக அணைத்துக் கொள்கிறேன். 2017 இல் முதன்முறையாக பவனீதாவை மந்த்ரா லைஃபில் சந்தித்திருக்கிறேன். ஒரு பட்டாம்பூச்சிக்குரிய பரபரப்புடன் பளிங்கு உருண்டைகளாக மின்னிய அந்த வட்டக் கண்களின் எல்லாக் கனவுகளும் மெய்ப்படவேண்டும் என்று அப்போதே எதன் பொருட்டோ தோன்றியது. பின்னொருநாளில் அதனை சொன்னேன் என்பதாகவும் நினைவு. @Bigeyes இன் கனவுகள் விரியட்டும்!

Thanks –https://www.facebook.com/photo/?fbid=10159935526905891&set=a.428977615890

https://www.youtube.com/watch?v=lo-gG_wuuJA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *