றஞ்சி (சுவிஸ்)
![]() |
|
விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி வேண்டும் சிறுகதைத் தொகுப்பு பற்றி சிறுவிமர்சனம் பெண்களின் எழுத்து, வாசிப்புத் தளங்களில் பல்வேறுபட்ட பார்வைகளாக பதிவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழ் பெண்கள் தங்களுடைய அறிவாற்றலின் பரப்பை சமூகம் பற்றியும் மண்ணின் போர் பற்றியும் அனுபவத்தின் சோகங்களை பதிவுகளாய் மாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து வாசிக்க.. |
பிறெளவ்பி ( நுண்கலைத் துறை உதவி விரிவுரையாளர் – கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டகளப்பு. இலங்கை)
வீழ்ந்து சிதறுகின்ற கண்ணீர்த் துளியிடம்
வினாவ முடியுமா – எந்தன் வாழ்க்கையின் நியதி
இதுதானா என…..!
மனசினுள் ஏதேதோ வைத்து – தினம் தினம்
வார்த்தைகளால் வதைக்கப்பட்டு – சமூக
சம்ரதாய வர்ணணைக்காய் தொடர்ந்து வாசிக்க..
மீனாட்சி
![]() |
பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற பெண்ணியம் என்னும் சொல் உலகளாவியது. பெண்ணியம் என்ற சொல் ஆங்கிலத்தில் Feminism என்று சொல்லப்படுகிறது. இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள பெமினா (Femina) பெண்ணின் தன்மைகள் உடைய (having the qualities of women) என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததாகும். அதாவது பெண்ணின் உடற்கூறு பற்றிக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க.. |
நிறைவேற்றப்படாத ஆசைகள்
கொட்டும் அருவியிலும்
குளிர்ந்த தென்றலிலும்
பச்சை வயல்களிலும்
பனி செய்யும் பூமியிலும்
காலாற நான் நடந்தால்
கவலையெதுவும் தெரியாதே தொடர்ந்து வாசிக்க..

The works of vasan are multidimensional and innovative. His work on applied painting with School children and the children in the villages has parallel in Educational Theatre of the Sri Lankan Thamils.
The use of medium and the message in his creative works are strange but explores the severity of the life in crisis.
His expressions are genuine to life and the creations are truthful to the medium of the art.
The paintings will speak for him in detail!
கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நாம் அப்புறப்படுத்தப் போகிறோம். ஆரியவதி மீது ஏற்றப்பட்ட வர்க்கத் திமிர் ஆணிகளை அகற்றக் கோரும் நமது குரல்கள் வன்னியின் மீது ஏற்றப்பட்ட ஆணிகளை அகற்றக் கோரினால் அதை எங்கள் உள்ளூர் எஜமானர்கள் அனுமதிப்பார்களா?
மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு
ஊடறு பெண்ணியம் தொடர்பான இதழ் என்ற வகையில் தயவு செய்து இத்தகைய கீழ்தரமான ஆண்களின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கும் சகல பெண்களுக்கும் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன். – அஸ்மின்
கருத்தாடல்கள்