கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″

தகவல் -இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்”

france meeting

கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″ என்ற பதாகையின் கீழ் ஒரு சமூக நிகழ்வை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் நிகழ்த்தியது. அதில் எழுத்தாளர்கள் அம்பை(ஸ்பரோ பவுண்டேஷன் – இந்தியா)இ றஞ்சி(ஊடறு சஞ்சிகை -சுவீஸ் ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

france meeting 5‘புலம்பெயர் பெண் எழுத்துக்கள்” என்ற தலையங்கத்தில் றஞ்சி அவர்கள் உரையாற்றுகையில் இன்னொரு இனத்தின் அடக்குமுறைக்கும் ஆதிக்கவெறிக்கும் பாகுபாடுகளுக்கும் உயிரழிப்புகளுக்கும் உள்ளாகி அகதிகளாக உலகம் முழ.வதும் பரந்து விரிந்து சிதறிப்போய் நிற்கும் தமிழ் சமூகத் தளத்திற்குள் தனது சொந்த சமூகத்தினராலேயே அதேபோன்ற அநீதிகளுக்கு (தாம் பிறந்த மண்ணிலும் சரி – தஞ்சம் புகுந்த மண்ணிலும் சரி) முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் கருத்துக்களைப் பரப்பவும் அடிமைத்தளையை உடைத்ததெறியவும் வேண்டிய போராட்டத்தில் புலம்பெயர் பெண் எழுத்தாளர்களின் ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு அளப்பரியது என்பதனை ஆழமாகவும் விரிவாகவும் அழகாகவும் எடுத்துக் கூறினார்.

‘இலக்கிய எழுத்தும் இலக்கிய உறவுகளும்” என்ற தலையங்கத்தில் உரையாற்றிய அம்பை அவர்கள் பதினாறு வயது தொடக்கம் எழுதத் தொடங்கிய தனது அனுபவத்தின் ஊடாக தமிழ் இலக்கிய எழுத்துலகில் ஒரு பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு இயங்குவதற்கு எதிராக ஆணாதிக்க சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடைகளைஇ பாகுபாடுகளைஇ இடர்பாடுகளைஇ வாழ்வுச் சிக்கல்களைஇ அடக்குமுறைகளை மிகத் துல்லியமாகவும் பரந்த பார்வையுடனும் சுட்டிக்காட்டினார்.
இவர்களின் உரையாற்றல்களையொட்டி வருகைதந்தோர் மத்தியில் அமைதியான ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றது

தோழர் லக்ஸ்மி அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்; இந்நிகழ்வில் கணிசமான அளவில் மக்கள் வருகைதந்து சிறப்பித்திருந்தனர். ‘இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்” இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
centre.solidarite.srilankais@gmail.com
தொலைபேசி : +33 (0) 7 51 41 33 05
Face book : CENTRE DE SOLIDARITE DES SRILANKAIS
பிரான்ஸ்
15.12.2014

 

 france meeting 1 france meeting 2 france meeting 3jpg

1 Comment on “கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *