கைத்தறி நெசவுத் துணியின் பண்பாட்டைக் கொண்டாடுவோம்

 BALIமனிதயுக வளர்ச்சியில் நெசவுத் தொழில் முக்கிய இடம் வகித்துள்ளது. மனிதரின் கூர்ப்பு ரீதியான முன்னேற்றத்தில் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் வளர்ச்சி கண்ட வண்ணமே உள்ளன. ஆதிகால மனிதர் (ர்ழஅழ நசயபவழள, ர்ழஅழ nலையனெயவாயட) ஆடைகளாக இலைகுழை, மரப்பட்டை, செம்மறி ஆட்டுத்தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இவ்வாறே முன்னேற்றம் கண்ட மனிதர் தாவரப் பொருட்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறே பருத்தி, கம்பளி என்பவற்றைக் கண்டறிந்தனர். பருத்திப் பஞ்சினை எடுத்து நூல் நூற்கும் முறை பற்றி ஆராயத் தொடங்கினர்.

BALI

ஆரம்ப காலங்களில் கிராமப்புறங்களில் நெசவு நிலையங்கள் நிறுவப்பட்டு நூலினை பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தி ஆடைகள் நெய்யப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்காலத்தில் இந்த நெசவுக் கைத்தொழில் நிலையங்கள் பல மூடப்பட்ட நிலையிலே உள்ளன. காரணம் இதற்குப் பதிலாக சில்க், நைலோன் ஆடைகள் சந்தையில் அதிகளவில் விற்பனையாவதே ஆகும். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இவ் வகை ஆடைகள் அந்தந்த நாடுகளுக்குரிய காலநிலையை மையமாகக் கொண்டவை ஆகும். குளிர்ப்பிரதேசத்தில் வாழ்வோர் தமது உடற்சமநிலையைப் பேணும் முகமாக இவ்வாறான சில்க், நைலோன், வெல்வெட் போன்ற துணி வகைகளை தமது ஆடைகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் எமது நாடு மத்திய கோட்டுக்கு அண்மையில் இருப்பதால் வருடத்தில் அதிகமான நாட்கள் வெப்பத்தைப் பெற்ற வண்ணமே இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலைகுறைவாகவும், வண்ணமயமான வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாலும் அவற்றின் அழகில் விரும்பி மக்கள் அவ்வாடைகளைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஆயினும் அவை தம் உடல் நலத்திற்கு ஏற்றதா என்பதை சிந்திக்க மறுக்கின்றனர். மேலும் இவ்வகை துணி தாரிப்பில் செயற்கைச் சாயங்கள் கலக்கப்படுவதால் அவை புற வெப்பததுடன் தாக்கம் புரிந்து உடலினுள் ஊடுருவிச் சென்று குருதியுடன் கலந்து ஒவ்வாமை நோய்களையும், தோல் அழற்சி நோய்களையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனிதனின் சுயாதீன நிலை பாதிக்கப்படுகிறது.

BALI

எனினும் இன்றும் இவ்வகையான கைத்தறி ஆடைகளுக்கு நல்ல கேள்விநிலை நிலவத்தான் செய்கின்றது. கோடை காலங்களில் வெப்பத்தைத் தணிக்க மக்கள் பட்டு, பருத்திகளாலான ஆடைகளையே கூடுதலாக நாடுகின்றனர்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில்முதியோர்கள் இன்றும் தொன்மையான மரபுகளைப் பின்பற்றி வருகின்றனர். தற்காலத்திலும் எமது மூதாட்டிகள் சிற்சில பிரதேசங்களில் கைத்தறித் துணியினாலான சேலைகளை இன்றும் பல்வேறு வகைகளில் உடுத்திப் பயன்படுத்தி வருவதனைக் காணலாம். இவை தவிர திருநீற்றுப் பை, வெற்றிலைப் பை, காசுப்பை, மங்கலப் பை, சந்தைப் பை என்பனவும் நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பிரதான காரணமாக உடல் சுவாத்தியத்தியத்தையும், நீண்ட காலப் பாவனையையும், எடுத்துச் செல்லல் இலகுவான தன்மையினையுமே கருதுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் செங்குந்தர் சாதியினரே ஆரம்ப காலத்தில் நெசவுத் தொழிலினை செயற்பாட்டு ரீதியில் அறிமுகம் செய்துள்ளனர். ஆயினும் 1967இல் அரச கல்வித் திட்டத்தினுள் உட்படுத்தப்பட்டதன் பிரகாரம் இந்நெசவுப் பயிற்சியானது எல்லோருக்கும் உரிய கலையாக மாற்றம் கண்டுள்ளது. இம் மாற்றத்தின் காரணமாக குறித்த சாதிக்குரிய இத் கைத்தொழில் கொண்டுள்ள அதிக உற்பத்தி, அழகியல்த் தன்மை என்பன வீழ்ச்சி கண்டுள்ளதோடு இக்கைத்தொழில் தொடர்பான போதிய அறிவில்லாத இளைஞர்களும் மேதற்றுவிக்கப்படுகின்றனர். இது உள்நாட்டு நெசவுத் தொழிலுக்கு வீழ்ச்சி நிலையையே ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கதான குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட இந் நெசவுத்துணியானது ஏழைகளின் கையிலிருந்து விடுபட்டு இன்று பணக்காரர்களுடைய கையில் வைபவங்களுக்காக உடுத்தப்படும் நவசாகரீகமான உடையாக உயர்விலையில் வலம் வருகிறது.

இத்தகைய பிரச்சினைகளை சூழலில் இனங்கண்டமையால் மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே “சூழலுக்கு ஒவ்வாத பொருட்களுக்கு பிரதியீடாக கைத்தறித் துணியினாலான பாவனைப் பொருட்களைப் அறிமுகம் செய்தல் – தையல் கலையூடான ஓர்; கண்காட்சி எனும் தலைப்பிலான ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தத்தம் காலநிலைக்கேற்ற பொருட்களை பயன்படுத்தத் தெரிந்து கொள்;ளவும், தையல் கலை ஆர்வலர்கள் இதனை சுயதொழிலாகக் கொள்வதற்கு வழியமைப்பதுடன், கைத்தறித் துணி தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அதன் மூலம் உள்நாட்டுக் கைத்தறித்துணியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யமுடியும் என்பது எனது முன்னெடுப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *