ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

 oodaru 9th

ஊடறு இணையத்தளத்தின் உருவாக்கத்தில் 9 ஆண்டு காலம் முடிவுறுகிறது. 10 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது. 2005ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் வாரத்தில ஊடறு இணையத்தளம் தொடங்கப்பட்டது HTTP://UDARU BLOGDRVE:COM

பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எமது விடாமுயற்சியும் பெண் படைப்பாளிகளின் ஒத்துழைப்பும் ஊடறுவுக்காகவே படைப்புக்களை எழுதி அனுப்பும் படைப்பாளிகள் உட்பட வாசகர்களின்; வருகையும் விமர்சனங்களும, ஊடறு வளர உந்து சக்தியாக இருந்துள்ளன. அனைத்து படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.

இந்த 9 வருடகாலத்தில் ஊடறுவில் 2843 படைப்புக்கள் வெளியாகியுள்ளன. அதில் 33 படைப்புக்கள் ஆண்களால் எழுதப்பட்ட பெண்ணிய ஆக்கங்கள். மிகுதி அனைத்தும் பெண் படைப்பாளிகளால் எழுதப்பட்டவை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.

இது வரை 113 நாடுகளில் இருந்து ஊடறுவை பார்வையிட்டுள்ளார்கள் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறோம்

ஊடறுவில் வெளியான 73 கவிஞைகளின் கவிதைகள் அனைத்தும் அவரவர் பெயர்களில் ஒருங்கிணைக்கப்படுள்ளன. UDARU BLOGDRVE:COM இவ் 73 கவிஞர்கள் உட்பட 149 பெண் படைப்பாளிகளின் ஆக்கங்கள் (கவிதை,ஓவியம்,கட்டுரை,உரையாடல்,விமர்சனம், இதழியல், திரை விமர்சனம், பதிவு என பல்வேறு வகைப்பட்ட படைப்புக்கள்) ஊடறுவில் இது வரை பிரசுரிக்கபட்டிருக்கிறன. தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் ஊடறுவில் ஆக்கங்கள் பிரசுரமாகி உள்ளன என்பதையும் பெருமையுடன் கூற விரும்புகின்றோம். அது மட்டுமல்லாமல் சிங்கள பெண் படைப்பாளிகளின் படைப்புக்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இதைவிட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இலக்கியப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவிகள் பலர் தமது ஆய்வுகளுக்காக ஊடறுவை பயன்படுத்தி வருகின்றமை எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு தொடர்ந்தும் ஊடறு வெளிவருவதற்கு மிகவும் உந்து சக்தியை தந்துள்ளது. அண்மையில் நாம் இந்தியா சென்றிருந்த வேளை மாணவிகள் எம்மிடம் நேரடியாக இதை தெரிவித்திருந்தார்கள். இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவியின் அத்தாட்சிப்பத்திரத்தில் ஊடறு. அதன் ஒரு இணைப்பு கீழே –

தங்கப்பதக்கம் பெற்றுள்ள DHARMARETNAM MEMORIAL GOLD MEDAL AWARD கவிஞை “பிறெளவ்பி”

profee 2

அதே போல் இலங்கையின் தமிழ்மொழிப்பாடத்திட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட புத்தகத்தில் ஊடறு பதிப்பாக வெளிவந்த மை கவிதைத்தொகுதியிலிருந்து சிலகவிஞர்களின் கவிதைகள் வெளியாகியுள்ளது, மை கவிதைத்தொகுதிக்கு பாடத்திட்டக் குழுவினர் நன்றியும் தெரிவித்திருந்தார்கள். இதை எமக்கு அனுப்பி தந்த மாதுமைக்கு எமது நன்றிகள.;

oodaru 9th year

எமது வேலைப்பளுவின் காரணமாகவும் நேரமின்மையும் எம்மால் படைப்பாளிகள் அனுப்பி வைக்கும் ஆக்கங்களை உடனே பிரசுரிக்க முடியாவிட்டாலும்; அவர்களது ஆக்கங்கள் ஊடறுவில் காலக்கிரமத்தில் பிரசுரமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். படைப்பாளிகள் தயவாக பொறுக்க வேண்டும்.

இந்த 9 ஆண்டுகாலத்தில் எமது சொந்த செலவிலேயே நாம் ஊடறுவை நிர்வகித்து வருகின்றோம். இந்த 9 வருட காலத்தில் ஊடறுவினால் பதிப்பிக்கப்பட்ட நூல்களான

 

penniya books

 

– பெண்ணியாவின் – ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று  தலைப்பு வை”

 

mai s

 

– 2005 – 2007 வரை ஊடறுவுக்கு வந்த 35 கவிஞர்களின் கவிதைகள் – ‘மை” தொகுப்பு

 

isai piliyapadda veenai

 

– மலையகப் பெண்களின் கவிதைகள் – ‘இசைபிழியப்பட்ட வீணை”

 

PeyaridathaNadsathirankal s

 

 -ஈழத்து பெண் போராளிகளின் கவிதைகள் – ‘பெயரிடாத நட்சத்திரங்கள்”

ஆகிய தொகுப்புக்களை எமது சொந்த செலவிலேயேகொண்டு வந்ததது மட்டுமல்லமலாமல் அவற்றை –

இலங்கை, இந்தியா, சுவிஸ், ஜேர்மன், கனடா, லண்டன் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ் மலேசியா, , டென்மார்க் ,நோர்வே,என பல நாடுகளுக்கும் இலவசமாகவே இத் தொகுப்புக்களை விநியோகித்திருந்தோம்.

– ஊடறு தொகுப்பு மை, இசைபிழியப்பட்டவீணை ஆகிய தொகுப்புக்கைள விற்று அவ் பணத்தை எமக்கு அனுப்பித் தந்த சுமதிரூபன், (கனடா) நந்தினி கனடா(கனடா) ஆகியோருக்கும் எமது நன்றிகள்

– பெண் போராளிகளின் தொகுப்பான பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பில் கிடைக்கப்பெற்ற நிதி- காலம் செல்வம், (கனடா) என் செல்வராஜா (லண்டன்) கரன் (டென்மார்க்) பாமதி, சௌந்தரி, ஆழியாள், அவுஸ்திரேலியா- ஆகியோர் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சுய வாழ்வுக்கு வழங்கியுள்ளோம். (அதன் விபரங்கள் ஊடறுவில் வெளியிடப்படும்.)

– 2005ம் ஆண்டு ஜீன் மாதம் தொடக்கம் 2013 டிசம்பர் 16ம் திகதி வரை எம்முடன் இணைந்து ஊடறுவின் ஆசிரியராக இருந்த தேவா (யேர்மன்) அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இதுவரை ஊடறுவினால் வெளிக்கொண்டுவரப்பட்ட அனைத்து தொகுப்புகளுக்கும் சரிபாதி நிதியுதவியை தேவா செய்திருந்தார் அவரின் பேருதவிக்கு எம் தலைசாய்ந்த நன்றிகள்.

-ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புக்களை வெளியிட்டு வருகின்றோம் நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஆரம்ப காலத்து எழுத்தாளர்களைப்பற்றிய குறிப்புக்களை எமக்கு தந்து உதவினால் எமக்கு உதவியாக இருக்கும்

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு எப்போதும் களம் அமைத்துக் கொடுக்கும்.

ஆனாலும் அவ்வப்போது ஊடறுவினை கொச்சைப்படுத்தும் வகையில் சில ஆணாதிக்கவாதிகள் முயன்று கொண்டேயிருக்கிறார்கள். ஊடறுவை நிர்வகிக்கும் எம்மீது பாலியல் நிந்தனைச் சொற்களை பின்னுட்டங்களாக அனுப்புவதும் போர்னோகிராபி லிங்சுகளை பின்னூட்டம் இடுவதும் எம்மைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசுவதையும் இலக்கியவாதிகள் என்ற எல்லைக்குள் நின்று இவ் ஆணாதிக்கவாதிகளால் செய்யப்படும் கேவலமான நடத்தைகளை எல்லாம்; புறம்தள்ளி நாம் செயற்படுகின்றோம்.

பழைய ஊடறு .கொம் இணையத்தளத்திற்கும் (UDARU BLOGDRVE:COM ) ஆணாதிக்க வாதிகளால் அனுப்படும் பாலியல் நிந்தனை சொற்களால் நாம் அதை தற்காலிமாக எமது பார்வைக்கு மட்டுமே வைத்திருக்கிறோம். படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அல்லது கவிதைகளை பெற வேண்டுமானால் எம்முடன் தொடர்பு (udaru@bluewin.ch) கொள்ளும் பட்சத்தில் இணையத்தளத்திற்குள் அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம். (UDARU BLOGDRVE:COM என்ற இணையத்தளம் சுவிஸ் காவற்துறையின் ஆலோசனையின் பேரில் எமது பாவனைக்கு மட்டுமே தற்போது உள்ளது. )

பெண்கள், ஆண்களின் ஒத்துழைப்பும் உற்சாகம் தரும்படியான கருத்துகளும் ஊடறுவை வளப்படுத்தியே வருகின்றன. பெண்களின் படைப்புகளும் இருபாலாரினது ஒத்துழைப்பும் வாசகர்களது தளவருகைகளும் ஊடறுவை ஒரு எழுத்தியக்கத்துள் வைத்திருக்கிறது. நாம் அதனை ஒன்றுகுவிக்கும் வேலையில் தொடர்ந்தும் செயற்பட உங்கள் ஒத்துழைப்பையும், உதவியையும் எதிர்பாரக்கிறோம். விமர்சனங்களும், உரையாடலும் ஊடறுவை மேன்மேலும் வளர்க்கும் என்பதையும் நினைவு கொள்கிறோம்.

தொடர்ந்த ஒத்துழைப்பைக் கோரியபடி…10 வது வருடத்தில் உள் நுழைகிறது ஊடறு.
ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

றஞ்சி (சுவிஸ்) ஆழியாள் (அவுஸ்திரேலியா)

ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில…!

ஆனந்தவிகடனில் ஊடறு பற்றி.. அருள் எழிலன்…

பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி – அணி

பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.புதியமாதவி

– ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்- எழுதிய குறிப்புக. சித்திரசேனன்

– ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள் – யதீந்திரா

–  பெண் எழுத்துக்கள் பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி…வ.கீதா

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி… , லறீனா அப்துல் ஹக்.(இலங்கை)

பெண்களுக்காக வாதாடும் ஊடறு.ஸர்மிளா ஸெய்யித்,இலங்கை)

ஒரு சினிமா -பெண்களுக்கான ,  நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம்  ஊடறு – திலகபாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *