ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

hand 
இன்றைய சூழலில் இணையம் தன்னுடைய இலக்கிய, சமூக, பொருளாதார, அரசியல், வியாபார பங்களிப்பினை பரந்தளவு செய்துக் கொண்டிருப்பது தொழிநுட்ப விருத்தியினதும் அறிவியல் பரம்பலினதும் வளர்ச்சியில் செழுமைக்குரிய விடயமாகும். பொதுவாக காணப்படும் ஒவ்வொரு இணையத்தளங்களும் விடயத்துக்கு விடயம், ஆளுக்காள், அமைப்புக்கு அமைப்பு, நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, இடத்துக்கிடம் வேறு பட்டும் மாறுபாடான விடயதானங்களுடன் இணையத்தளத்தளங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறான பங்களிப்பில் ஊடறு இணையத்தளமும் பெண்களுக்கென ஆரம்பிக்கப்பட்டு தன்னுடைய பார்வையை விசாலமாகவும் பல்வேறு துறைசார் விடயங்களுடனும் சமூக, அரசியல், பொருளாதார அம்சங்களின் அடிப்படையில் தடம்பதித்து வரும் இணையத்தளமாக காணப்படுகின்றது. பல்வேறு மட்;டத்தில் பல்வேறு விடயங்களிலும் ஒடுக்குமுறைகளிலும் அடக்குமுறைகளிலும் ஆட்பட்டு வீழ்ந்துக் கிடந்த பெண்களின் சிந்தனைக்கும் விடுதலைக்கும் களமாக ‘ஊடறு’ காணப்படுகின்றது. தாம் ஒடுக்கப்படும் விடயங்கள் இதுவென்று கூட தெரியாத நிலையில் ‘அறிவு’ விழிப்பின்றி பல்வேறு இம்சைகளுக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருந்தனர். வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அது பற்றிய தான சிந்தனைகளை ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த ‘ஊடறு’ தன்னாலான காத்திரமான பங்களிப்பை மிக நேர்மையாகவும், இதய சுத்தியுடனும் செய்து வருகின்றது.
 
‘ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை உலகத்தில் வேண்டப்பட்டும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிக முக்கியமான மனித குல வரலாற்று புத்தகத்தின் திருப்புமுனையை கொண்ட அத்தியாயமாகும். இந்த அத்தியாயம் புரட்டப்படும் விவேகத்தில் தான் மனித குலம் மிளிர்வதும் வீழ்வதும் பதிவாக்கப்படவிருக்கின்றது. எதிர்கால வரலாற்று பதிவின் பயம் நோக்கும் மனித குலத்தின் மகிமை நோக்கியும் அவை சிந்தனைக்குரிய சீரிய விடயமாய் பயிலப்படவும் வேண்டும். இந்த சிந்தனைக்கு வித்தாக பல விடயங்களைப் பற்றி அன்றாடம் ஊடறு இணையத்தளம் பேசிக்கொண்டிருக்கின்றது. பெண் விடுதலை தொடர்பான உறுதியான கருத்துக்களை வெளிக் கொணர்வதில் ‘ஊடறு’ முன்னின்று உழைக்கின்றது.
 
பெண்கள் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், நேர்க்காணல்கள், ஆராய்ச்சிகள், அறிவிப்புகள், இலக்கிய உரையாடல்கள், சினிமா, குறும்படம், சிறுகதை என பல்வேறு ஊடகங்களில் தம்முடைய கருத்துக்களை உலகளாவிய பெண்களிடமிருந்து சேகரித்து ஊடறு வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக நாடு, இனம், மதம், சாதி, வர்க்கம் கடந்து பேசப்படும் சகல பெண்கள் பிரச்சினைகளும் ஊடறுவில் இடம்பெறுவது, இது பெண்களின் பிரச்சினை பேசும் பக்கசார்பற்ற ஒரு இணையத்தளமாக கருதப்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது.
 
பிரச்சினைகளை பேசும் பொழுது அடுப்படி தொடங்கி ஐ.நா சபை வரை பெண்களுக்கான பிரச்சினைகளை விமர்சன ரீதியாகவும் ஆழமாக அகலம் நோக்கியும் ஊடறு செய்வது பெண் விடுதலைக்கு வித்திடும் பணியை தனக்கே உரிய தனி நடையில் வெளியிடுவது அதன் சிறப்பிற்கு இன்னொரு காரணமாகின்றது.
 
ஒரு பொருள் பற்றிய சிந்தனையை எடுத்துக் கொண்ட விதம், அதனை சொல்லுந்திறன், அது சார்ந்த நேர்மையான வாழ்வியல் விமர்சனப்பார்வை, தூரநோக்கு என்பவற்றின் தெளிவினால் ஊடறு வெற்றியடைந்துள்ளதினை காணமுடிகின்றது.
 
அவ்விணையத்தளம் பெண்கள் சம்பந்தமான பிரச்சினை மட்டும் பேசும் தளமாக இல்லாமல் பெண்களின் பல்வேறுபட்ட திறன்கள், முயற்சியாண்மை, வெற்றிகள் என்பவற்றையும் பற்றிய சிந்தனைகளை பரவலாக்கி நிற்கின்றது. தனிப்பட்ட பிரச்சினைகளைக்கூட சமூகப் பிரச்சினையாக பக்கசார்பின்றி பவித்திரமாக பேசி தன் உறுதிநிலை குலையாத கொள்கை போக்கை கொண்டு ஊடறு இணையத்தளம் செயற்படுகின்றது.
 
பெண்களின் இலக்கிய பங்களிப்புகள் சமூக, அரசியல், பொருளாதாரங்களில் அவளுக்கிழைக்கப்படும் அநீதிகள் அவர்களின் பங்களிப்புகள் அங்கு அவன் ஓரங்கட்டப்படும் நிலையை இரண்டாம் பிரஜையாய் இழிவுபடுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளை உலகின் பல்வேறுபட்ட நிலைகளிலும் மிகவும் பின் தள்ளப்பட்ட பிரதேசங்களில் வாழும் பெண்களிடமிருந்தும் ஊடறு வெளியிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. கருத்து சார் நிலை பிரச்சினைகளை பேசும் பொழுது தனிப்பட்ட பிரச்சினைகளை புறந்தள்ளி கருத்து நிலையில் நின்று அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
 
கடந்த வருடம் ஊடறு வெளியிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்தி சீர்தூக்கி பார்ப்பதும் கூட அதன் வளர்ச்சியை புடம்போட்டதாய் அமையுமெனலாம்;. கடந்த வருடம் மிகவும் காத்திரமான பெண்கள் பிரச்சினைகள் பேசப்பட்டன. பெண்களுக்கு இழைக்கப்பட்ட மிக கொடுமையான போரியல் சம்பவங்களின் பல விடயங்கள் அங்கு பேசப்பட்டன. காணாமல் போன உறவுகளை தேடியலையும் பெண்கள் இலங்கை அரசின் படுகொலை, இலங்கை யுத்தத்தில் வடுக்கள் என்பன முக்கியமான பேசப்பட வேண்டிய விடயங்களாகும்;;. விடுதலை இயக்கத்தில் தலைவி ஆங் சாங் சூசியின் வரலாற்று சம்பவம் ஒரு எடுத்துக்காட்டான விடயமாக கருதப்படுகின்றது. அராபிய, ஆஸ்ரேலியா, இலங்கை, இந்திய மற்றும் மேலைத்தேய பெண்களின் பல்Nவுறுபட்ட ஆக்கங்கள் கடந்த வருடத்தில் ஊடறுவை சிறப்பித்தன.
 
மேலும் கடந்த வருடத்தில் மிகவும் அடக்கி ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரான ‘மலையக தோட்டத் தொழிலானர் பெண்களின் நிலைப்பற்றிய பரந்துபட்ட பார்வை ஊடறுவின் நேர்மையான பார்வையினால் உலகிற்கு காட்டி நிற்பதனை காணமுடிகின்றது. ஊடறு கடந்த வருடம் பேசிய இவ்விடயம் மிகவும் பின் தள்ளப்பட்டு பல்வேறு அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆட்பட்டு உழைப்பினை உலகிற்கு கொடுத்து வீடு, ஊதியம், உரிமைகள் அற்றநிலையில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றிய ஆழமான பார்வை அவை சார்ந்த விடயங்களுக்கும் இடமளித்த நிலை ஊடறுவின் தரத்தினை இன்னும் மேலோங்கச் செய்கின்றது.
 
உலகில் இரண்டாம் பிரஜை நிலையில் கருதப்படும் ‘பெண்கள்’ சம்பந்தமாகவும் அவர் தம் விடுதலை நோக்கிய கருத்துக்களையும் பெண்களின் திறமைகளையும் முயற்சிகளையும் வெளிக் கொணரும் சக்தியாக நின்று செயற்படும். ஊடறுவுக்கு பெண்கள் கட்டுடைந்து உலகை வெல்லக்கூடிய திறம்படைத்தவர்கள் என்பதிலும் மனிதகுல வரலாற்றில் அவர்கள் சமத்துவமாய் பேணப்பட வேண்டிய சிந்தனைகளில் ஆர்வங் கொண்டுள்ள எனது சிந்தனைக்கும் ஏதோவொரு வகையில் களமமைத்து வந்த ‘ஊடறு’ இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *