“தண்ணி” மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனாஅஹ்மத்)

சல்மாவுக்கு காலெல்லாம் கொப்புளம். டொக்டராவது ஆஸ்பத்திரியாவது? என்ன பீபிதாத்தாவுக்கு தெரியாதவைத்தியமா? நாடிபிடிக்காமலே அவவுக்கு விஷயம்எல்லாம் விளங்கிப்போய்விட்டது. அதாவதுகண்ணூறு.
இந்தநோஞ்சான் சல்மாவுக்குப் பார்த்துத்தான் ஊரில்; யாரும் கண்ணூறுப்பட வேண்டுமா? அவர்களுக்குக் கண்ணூறுப்பட்டுக் கொண்டிருப்பது இதெல்லாம் அவர்களுக்குக் கண்ணூறுப்பட்டுக் கொண்டிருப்பது தவிர வேறுவேலையே கிடையாதா, கேட்டுபீபிதாத்தாவிடம்தப்பித்துக்கொள்ளமுடியுமா?ஹாசிம் லெவ்வையிடம் ஒரு முட்டித் தண்ணீர் மந்திரித்துக் கழுவிப் போட்டுவிட்டால் எல்லாம் சரியாப்போய்விடும் என்று ஒரேதீர்மானமாகக் கூறிவிட்டா பீபிதாத்தா.

தண்ணி மந்திரிக்கிறதென்றால் இக்கால இளவட்டங்களுக்கு ஏதொலேசுமாசான விஷயம் என்றுதான்படும்.அதிலிருக்கின்ற சாத்துமாத்துக்கள், நுணுக்கங்கள் பீபிதாத்தாவுக்கல்லவா தெரியும்.தண்ணி மந்திரிக்கிறதென்றால் அதற்கு வெறும் கிணற்றுத் தண்ணீர் சரிவராது.பள்ளிவாசல் ஹவ்லில் தண்ணீர் எடுக்கவேண்டும். அதுவும் அவ்வல் சுபஹிலே எடுக்கவேண்டும்.அதுமட்டுமல்ல எடுக்கும் போதுயாரோடும் ஒருவார்த்தை மறந்தும் கதைக்கக்கூடாது. எனவே பீபிதாத்தா அதிகாலை 4 மணிக்கே நித்திரை விட்டெழுந்து பள்ளிவாசல் நோக்கிப்புறப்பட்டா.

கன்னங்கரிய இருட்டுக்குள்ளே அதுவும் கபுறுக்காட்டைத்தாண்டி பள்ளிஹவ்லுக்குப் போவதென்றால்லே சானகாரியமல்ல. இடையிடையே என்னென்ன பழைய ஜின்சைத்தான்கள் இருக்குமோ. இதை நினைக்கும் போது என்னதான் முரட்டுத்தைரியமுள்ள மனுஷியாயினும் பீபிதாத்தாவுக்கும் கொஞ்சம்நெஞ்சு ‘படக்கு’ என்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது. எதற்கும் இரும்புகையிலிருந்தா ஒன்றும் நெருங்காது என்று சொல்லுவாங்க என்று ஒருகையில் பேய்விரட்டக்கத்தியும் மறுகையில் செம்பு முட்டியுமாக வெளியே புறப்பட்டு விட்டா பீபிதாத்தா தொழும் பழக்கம் பெரும்பாலும் இல்லாத படியால் பீபிதாத்தாவுக்கு இவ்வளவு நேரகாலத்தோடு எழும்பிய அனுபவம் இல்லை. அத்தோடு கும்மிருட்டும் சேர்ந்து கொள்ளவே காற்றில் அசையும் ஒவ்வொரு புதரும் சிறகடித்துப் பறக்கும் ஒவ்வொரு வெளவாலும் அவவுக் குஜின்களாகவும் சைத்தான்களாகவுமே காட்சியளித்தன. எனவே என்றுமில்லாதவாறு அரையும்குறையுமாகப் பாடமுள்ள அத்தனை குர்ஆன்வசனங்களும் ஆச்சரியத்தக்கவிதமாக பீபிதாத்தாவுக்கு ஞாபகம்வந்தன.அவை உரத்தசப்தங்களாக வெளிப்படவே இனந்தெரியாத சிறுபிராணிகள் பயந்து அங்குமிங்கும் ஓடத்தலைப்படவே மேலும் பலவசனங்களை ஓதவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

பள்ளியினுள்ளே இருந்த லாந்தர் விளக்கின் ஒளி ஹவ்லைச் சுற்றியிருந்த இருட்டை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தது.அப்பாடா !ஒருவாறு கஷ்டப்பட்டு வந்துவிட்டோம் என்று ஹவ்லோரம் போககாலைத் தூக்கிவைத்தாவோ இல்லையோ அவ்வளவுதான்.பீபிதாத்தாவின் சப்தநாடிகளும் அடங்கிவிட்டன. ஹவ்லின் கடைக்கோடியில் குந்திய நிலையில் ஓர்உருவம். இவ்வளவு ஓதல்கள் ஓதியும் ஒன்றும் பயன் தராமல் போய்விட்டதே. யாரோபில்லி,பிசாசுகளை ஏவிவிட்டிருக்கிறானோ தெரியாது. எதற்கும் ஹாசிம் லெவ்வையிடம் முன்னாடியே ஒருவார்த்தை சொல்லிக்கொள்ள முடியாமல் போய்விட்டதே.சரி எதற்கும் இப்போது  திரும்பிப்போகவும் முடியாது. என்ன செய்ய, வருவது வரட்டும் என்று பேய் விரட்டும் கத்தியை வேகமாக ஆட்ட ஆரம்பித்தா பீபிதாத்தா.

இதற்கிடையில் ;யாரு மோதினாரா’ என்ற சப்தம் அவ்வுருவத்திலிருந்தே கிளம்பியது.
முகிதீன் ஆண்ட வருடைய காவல். நல்லகாலம். குரலிலிருந்து குந்தியிருப்பது சாட்சாத்ஹாசிம் லெவ்வையவர்களே என்று அறிந்த பீபிதாத்தா, முகிதீன் ஆண்டவருடைய பறகத்து, விஷயம் இவ்வளவு எளிதில் முடியும் என்று நான்நினைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டே முன்னேநகர்ந்தா. பேசினாற் தான்காரியம் பழுதாய்ப்போய்விடும்.
ஹாசிம் லெவ்வை என்றால் ஊரெ கலங்கி நிற்கும்.பேய்,பிசாசு,ஜின்,சைத்தான் ஒன்றும் அவரிடம் வாலாட்ட முடியாது என்பது மட்டுமல்ல எந்தக்காட்டிலுள்ள ஜின்சைத்தானையும் சிண்டைப் பிடித்து ஏவிவிட்டு எந்தவேலையையும் அவர் செய்துவிடுவார் என்பது ஊரவரது நம்பிக்கை. ஊரில் பெரிய பெரிய வியாதிகளுக்கு       மட்டுமல்ல.சிறு தடிமற் காய்ச்சலுக்குக் கூட அவரிடம் போய் ஒருகாரியம் பார்த்துவிட்டு அப்புறம்  தான் ஆஸ்பத்திரி டொக்டரெல்லாம். எனவே,             பள்ளிவாயல்,கபுறுக்காடு முதலிய பயங்கரப் பிரதேசங்களில் இரவில் அகால வேலைகளில் உலவி, தனது அச்சமினமையையும் பேய்பிசாசின் மீதுள்ள ஆதிக்கத்தையும் ஊரவருக்கு எடுத்துக்காட்டுவது ஹாசிம்லெவ்வையின் வழக்கம். அதன்படிதான் அன்றும்ஸ{ப{ஹக்கும் முன்னேயாரும் வராதவேளையில் பள்ளியில்நுழைந்து, ஊர்முழங்ககனைத்தல் இருமல்களோடு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வுழுஎடுக்கக் குந்தியிருந்தார்.

இந்நிலையில் யாரோ மெல்லடி வைப்பது கேட்டுத்தான் யார்மோதினாரா என்றார். ஆனால் பதில் வராது போகவே கொஞ்சம் உற்றுப் பார்த்தார். என்ன? உருவத்தைப் பார்த்தால் ஏதோ கொஞ்சம வித்தியாசமான தோற்றம்போல இருக்கிறதே என்று எண்ணி இன்னும் சிறிது விழித்துப் பார்த்தார். உண்மையில் லெவ்வையவர்கள் அத்தகைய ஒருதோற்றத்தை, தான் எப்போதாவது தனது யாதார்த்தவாழ்வில் சந்திப்போம் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

உடல் ஏகமும் மூடிய வெள்ளைத் துணி. ஒருகையில் கத்தி, மறுகையில் உருண்டையான ஏதோ ஒருபொருள். பேசினால் பதிலில்லை! போதாக் குறைக்கு கத்தியை வேறு ஆட்ட ஆரம்பித்திருக்கிறது. இதையெல்லாம் கண்ட லெவ்வையவர்களின் அடி வயிற்றிலிருந்து ஏதோ குபீர என்று மேலெழுந்து தொண்டையை இறுக்கிப் பிடிப்பது போன்றிருந்தது.

எனினும் சமாளித்துக் கொண்டு மீண்டும ;யாரது என முழங்கினார். ஊஹ_ம் பதிலில்லை…ஆனால் அவ்வுரவ மோகத்தியை உயர்த்திக ;கொண்டு ஹவ்லை நெருங்குவது தெளிவாகத் தெரிந்தது. லெவ்வையவர்களின் சர்வாங்கமும் தன்னிச்சையாக வெடவெடவென்று டான்ஸ் ஆடஆரம்பித்தது.
நாற்பது வருடகாலம் பேய்களை விரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஹாசிம்லெவ்வையவர்கள் இப்போது தான் தனது வாழ்க்கையிலேயே ஓர் அசல ;பேயை முழு உருவத்தோடும் சந்தித்திருப்பதாக உணர்ந்தார். இத்தகைய ஓர் அனுபவம் அபார துணிச்சலுள்ள தன்னை இவ்வளவு மோஷமாகப் பாதித்துவிடும் என்று அவர் துளி கூட எண்ணியிருக்கவில்லை. இனித் தாமதிக்க நேரமில்லை. பேய்பிசாசுகளைக ;காட்டியே மக்களிடம் பிழைத்து வந்த தன்னை ஆண்டவனே தண்டிக்க இப்படியொரு பேயை ஏவிவிட்டானோ என்ற எண்ணம் அவருக்கேற்பட்டது. உடனே, ஆண்டவனே, என்னை இந்தமுறைமட்டும ;காப்பாற்றிவிடு, இனி இந்த மாதிரியான காரியங்களில் தலையிடவேமாட்டேன் என்று மானசீகமாகப ;பிரார்த்தனை புரிந்தார், எனினும ;தான் செய்திருக்கும் திருவிளையாடல்களுக்கு அவ்வளவு விரைவாக மன்னிப்புக் கிடைத்துவிடும ;என்ற நம்பிக்கை அவருக்கில்லை. எனவே சகலநம்பிக்கைகளையும் இழந்தவராகக் குர்ஆன் வசனங்களை உரத்தகுரலில் உச்சாடணம் பண்ணஆரம்பித்தார்.

ஆனால் பேயோ இதற்கெல்லாம் மசியக ;கூடிய ஒன்றாகக் காணப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க ஹவ்லை நெருங்குவதை அதுவிடுவதாகவும் இல்லை.
உடனே சட்டென்று லெவ்வையவர்களுக்கு ஒரு உபாயம ;தோன்றியது, பிறந்த மேனியைக் கண்டால் பேய் அப்படியே பறந்து ஓடிப்போகும் என்று யார் சோல்லியோ கேள்விப்பட்டது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. அவ்வளவுதான். லெவ்வையவர்களின் தொப்பி, ஷேர்ட்மட்டுமல்ல சாரமும் அரையில் போட்டிருந்த பெல்ட், திறப்புக்  கோர்வை சகிதம் சலார் என்று விழுந்தன. ஊஹ_ம் …லெவ்வையவர்களின் ஆடையில்லாத மேனியில் எந்தவிஷேசத்தைக் கண்டும் அந்தப்பேய் அசைவதாக இல்லை.

என்னசெய்யலாம். மரணத்துக்கு அவ்வளவு இலேசில் தயாராகிவிடமுடியுமா? கடைசிஉபாயம்.’அல்லா{ஹஅக்பர்…அல்லா{ஹஅக்பர்’ ஊரேமுழங்கபாங்குசொல்லஆரம்பித்தார்லெவ்வை.
கடைசியில், தான்மேற்கொண்ட அத்தனை உபாயங்களும் அந்த உண்மையான பேயிடம் செல்லாது போனதைக் கண்ட ஹாசிம் லெவ்வையவர்கள் தன்னை மறந்தார்.தன்நிலையை, தொழிலை மறந்தார்.மரணம் தன் முன் நிழலாடுவதைக் கண்டுதான் செய்வதைக் கூடமறந்தார்.
‘என்னைக்காப்பாத்துங்கோ….பிசாசி…பிசாசி” என உரக்கக் கூவிக ;கொண்டேதன்னால் ஆனமட்டும வேகமாக ஒடஆரம்பித்தார்,

அப்போது தான்’ என்னத்தன் மாமா ஒவ்வளவு பயம், நான் தான் தெரியல்லியோ…. பீபி ‘ என்று ஒருகீச்சுக்குரல் எழுந்தது அவ்வுருவத்திடமிருந்து.

இவ்வார்த்தை ஹாசிம் லெவ்வையின் உள்ளத்திற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அவரை பிரேக் போட்டுநிறுத்தியது. அடுத்தகணம் ஹாசிம்லெவ்வை அவ்வுருவத்தை உற்றுப்பார்த்தாரோ இல்லையோ

“அடீபண்டீவே..ஒன்னைக்கீறிவளத்திற, இந்தஇருட்டுக்குள்ளே பிசாசி மாதிரி வந்து என்னைப்பயமுறுத்தின..“ என்று சொல்லிக் கொண்டே பாய்ந்தாரே பார்க்கலாம் பீபிதாத்தாவை நோக்கி. அவர் உள்ளத்திலே மூண்டிருந்த அவ்வளவு பயமும் நொடியில் அசுரகோபமாக மாறிவிட்டது.

என்ன இன்று என்றுமில்லாதவாறு நேரகாலத்துடனே பாங்குச்சத்தம் கேட்கிறதே, அதுவும்  மோதினாரோட குரல்; அல்ல ஏதோவித்தியாசமாக நடந்திருக்க வேண்டும ;என்று எண்ணி ஓடோடி வந்த ஊர்ஜனங்கள் தக்க சமயத்தில் லெவ்வையவர்களைப் பிடித்து பீபிதாத்தாவைக் காப்பாற்றினார்கள்.

அடுத்த நாள் டொக்டர் வில்ஸனின்ஸ் டெதஸ்கோப்ஹாசிம் லெவ்வையவர்களின் நெஞ்சுப் பிரதேசம் எங்கும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. இந்த இலட்சணத்தில் பீபிதாத்தாவாவது தண்ணி மந்திரிக்கிறதாவது.

ஸைபுன்னிஸா

நன்றிஅல்ஹஸனாத் 1973 நவம்பர்,டிஸம்பர்இதழ்கள்

70களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சிலநம்பிக்கைகளையும் ஜின்சைத்தான், மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபிதாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது. ஸை புன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதிவந்தவர் வேறுயாருமல்ல் அப்போது இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த என் இனிய தாயார்- அமீனா அஹ்மத். மிக அண்மையில் தான் அந்தப்பழைய பத்திரிகையில் அவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. அதன் பிறகு தொடராக அவர் எதையும் எழுதவில்லை என்பது துயரம் தந்தாலும் மீண்டும ;இப்போதும் எழுத ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையை அவரது நேர்த்தியான மொழிக்கையாள்கை தருகிறது.
சமீலாயூசுப்அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *