இராணுவத்தினரைக் காப்பாற்றும் இமெல்டா சுகுமாரும் அச்சத்தில் வாழும் தமிழ் பெண்களும்

SRI LANKA-UNREST-FUNERAL

 இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு நடைபெற்று  இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
போரினால் பாதிக்கப்பட்ட  இத்தகைய மனக்காயங்களை மறக்கடிக்கபடும்  தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிந்திக்கவில்லை எனவும் அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.

 வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மக்கள் மனங்களில் ஏற்பட்ட மனக்காயஙகள், சம்பவங்களால் ஏற்பட்ட காயங்கள் மக்களின் மனங்களில் இன்னமும் இருக்கின்றன.

வன்னியில் புதிய வீதிகள் அமைக்கப்படுகின்றன. கடந்த காலங்களை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் இப்போரினால் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை மறப்பதற்காக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இக்காயங்கள் அவர்கள் மனங்களில்
அப்படியே இருக்கின்றன.

இத்தகைய மனக் காயங்களை பற்றியோ அல்லது அது சம்பந்தமாக ஏற்படும் உளவியல் தாக்கங்கள் பற்றியோ  இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றுக்கு முன்னர் மக்களை உளவியல் ரீதியாக அவர்களின் உணர்வுகளை பரிநஇது கொள்வது நல்லது.  இத்தகைய உளவியல் ரீதியான செயற்பாடுகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்ய முற்படுகின்ற போது அம்முயற்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைச் சந்திப்பதற்காக தன்னுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சிறிலங்கா இலங்கை இராணுவத்தினன்  ஒருவன் நிர்ப்பந்தித்ததாக  பெண் ஒருவர் தெரிவித்தார். தனது கணவரை ஒரு மணித்தியாலம் சந்திப்பதற்காக தன்னுடன் ஒரு முறை பாலியலுறவு கொள்ளுமாறு குறிப்பிட்ட இலங்கை படைச் சிப்பாய் தன்னிடம் கேட்டதாக அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இலங்கை படைத்தரப்பினருக்கு எதிராக ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றார்.

ஆனால் நாம் சந்தித்த  தமிழ்ப் பெண்கள் பலர் இலங்கை படைத்தரப்பினராலேயே தாங்கள் அதிகம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் இமெல்டா சுகுமார் இராணுவனத்தினரை காப்பாற்றுகின்றாரா??

இந்நிலையில், இப்பகுதிகளில் வாழ்கின்ற மூன்றில் இரண்டு தமிழ் பெண்கள் ஆபத்தான நிலையில் அச்சத்துடன் வாழ்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *