யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை )

maname_vasappadu_aug_17

இவ் வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான 82 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்  தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் பலதரப்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் 174 சிறுவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.maname_vasappadu_aug_17

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 204,388 சிறுவர்கள் உள்ளனர். அவ் எண்ணிக்கையினுள் தந்தையரை இழந்த பிள்ளைகள் 6118 பேரும், தாயை இழந்த சிறுவர்கள் 1625 பேரும் உள்ளடங்குகின்றனர். இத்துடன் 417 சிறுவர்கள் தந்தையையும் தாயையும் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச் சிறுவர்களுள் 1413 பேர் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.

மேலும் 114 சிறுவர்கள் தமது பிறப்பு அத்தாட்சிப் பத்திரமின்றியும் காணப்படுகின்றனர். மரதன்கேணி பகுதியில் பெரும்பான்மையான சிறுவர்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாது வாழ்கின்றனர் எனவும் யாழ் மாவட்டச் செயலகம் அறிவத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *