பலஸ்தீனப் “தாய்” போராளி ஒருவரின் கதை

மாதவிராஜ் (அமெரிக்கா)

palastin_porali_03

முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சியமாக  இருந்ததாகவும் தான் பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப்  பெண் போராளியாக இருக்க வேண்டும் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது – எனவும் கூறியுள்ளார் ரீம் அல் ரியாஸி.

 

கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோரிக்கை ஐ.நா.விடமும் உலக நாடுகளிடமும் தங்களை தனிநாடாக அங்கீகரிக்க கோரியும் வரும் பலஸ்தீனியர்கள்  இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.  1967ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த எல்லை நிலை அடிப்படையில் தனிநாடு வரையறுக்கப்பட வேண்டும். எனவும்  194வது உறுப்பினர் நாடாக அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வரும் அதே வேளை காசா திட்டுப்பகுதி, கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளும் புதிய பாலஸ்தீன நாட்டின் எல்லையில் வரவேண்டும் என பலஸ்தீனம் கோரி வருகிறது. பலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு 6 நாள் போரின் போது ஆககி;ரமித்தது. ஏன்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

palastin_porali_03

  பாலஸ்தீனத்திற்கு தனி நாடு என்ற அந்தஸ்து அளிப்பது குறித்து சுவிஸ் இந்த மாதம் இறுதியில் தனது முடிவை அறிவிக்க இருப்பதாக   சுவிஸ் நாடாளுமன்ற கொமிட்டி அளிக்கும் முடிவைத் தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் பலஸ்தீன தனி நாடாக அமைவது பற்றி முடிவு எடுக்கப்படுமா என்பதை அறிவிக்கும் என தெரியவருகிறது.

 அதே போல் பலஸ்தீனம் தனி நாடாக வர   வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வலிமை மிக்க ஜேர்மனி மற்றும் இத்தாலி விரும்புகிறது.

பலஸ்தீனத்தில் பாத் மற்றும் ஹமாஸ் பிரிவனர் உள்ளனர். பாத் பிரிவை யாசர் அராபத் 1959ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த அமைப்பு 2006ஆம் ஆண்டு வரை பாலஸ்தீன நிர்வாக பகுதியில் பெரும் அமைப்பாக இருந்தது. ஹமாஸ் பிரிவினர் தீவிர இஸ்லாம் முறையை விரும்புவர்கள் ஆவார்கள். மேற்கத்திய நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என கூறிவருகின்றன. இந்த அமைப்பு காசா திட்டு பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இஸ்ரேலின் போர் நடவடிக்கையாலும் பாலஸ்தீனத்தில் பெண்கள் பலர் போராடுவதற்கு  ஆர்வம் காட்டுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  திருமணம் முடித்தவர்கள் கூட இப்படையில் சேர்வதாகவும் கூறப்படுகிறது.

 போராளி ஒருவரின்  கதை

 இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இவருக்கு இரு சிறு குழந்தைகள்

palastin_porali_02

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.
பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர். ஏனக் கூறப்படுகிறது.; பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

palastin_porali_01

 

 

முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சியமாக  இருந்ததாகவும் தான் பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப்  பெண் போராளியாக இருக்க வேண்டும் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது – எனவும் கூறியுள்ளார் ரீம் அல் ரியாஸி.

1 Comment on “பலஸ்தீனப் “தாய்” போராளி ஒருவரின் கதை”

  1. ஹ்ம்! பலஸ்தீனர்களின் போராட்டம் இன்றுவரை ஒரு நெடும் பயணமாகவே இருக்கிறது. தமது மண்ணில் விதையாய் விழுவதும் விருட்சமாய் எழுவதும் பிறர் பற்றி எழ விழுதுகள் தருவதும் பெண்களாகிய தம்மாலும் சாத்தியமே என்பதை வரலாற்றில் பதியும் இரத்த சாட்சிகள் இவர்கள்!

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *