எனக்கு எதிராக திரும்பிய என் “கமரா”

sudan கடந்த டிசம்பர் மாதம்  சூடானில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் அவ் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  பெண்கள்  பலரை சூடான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களை விடுவிக்க கோரி பல பெண்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அதே நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 பெண்கள் தங்களை விடுவிக்க கோரி சிறைக்குள்ளேய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

இந்த நேரத்தில் தான் நகலா சீட் அக்மட் என்ற ஊடகவியலாளர் சிறைக்குள் உள்ள பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரத் தொடங்கினார். சிறைக்குள் அப்பெண்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறும் நகலா இப்பெண்களுக்கு ஆதரவாக ஜனவரி 14ம் திகதி 150 பெண்களைத் திரட்டி சூடான் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார

sudan

சிறைக்குள் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அவரின் கமாரா பதிவு செய்ததை அவர் மனித உரிமை அமைப்புகளான Women’s Initiative Against Violence (WIAV), , Director of Al-Fanar Center, a Khartoum-based human rights advocacy group, Sudanese Journalists The Sudanese Women’s Union, Alhurra channel.BBC   ஆகிய ஊடகங்கள், அமைப்புக்களுக்கு தனது கமராவில் பதியப்பட்ட பல விடயங்களை  அனுப்பி வைத்துள்ளதாக கூறும் நகலா அதனால் ஆத்திரமடைந்த சூடானிய அரசு அவரை எந்த நேரமும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் எனவும் தனது கமராவே தனக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் தனது கமராவினால் சிறையில் உள்ள பெண்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *