இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்

Yasmin-Sooka
 
இலங்கை இராணுவ முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கையளித்துள்ளது.
 
இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது
 
இராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இவர்களுள் 48 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் 7 பேர் புதிய அரசாங்கத்தின் காலத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
வவுனியாஇ கொழும்பு போன்ற இடங்களில் 4 பகுதிகளில் இவ்வாறான பாலியல் முகாம்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளதோடுஇ பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 6 அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இந்த அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள யஸ்மின் சூக்காஇ இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கம் எவ்வகையான நீதி விசாரணைகளை முன்னெடுக்கப் போகின்றதென பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
http://colombogazette.com/2017/02/13/sri-lanka-accused-of-violating-commitment-to-un-resolution/
 
http://www.itjpsl.com/assets/press/cedaw-press-release-final-english.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *