தோட்டக்காட்டச்சி

 -எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து

malayakam 13.6.2013நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும்
என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது
உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல
உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும்
குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம்
அவைகளுக்கு நிறைய பலுன்களும் பொம்மைகளும் தோட்டத்து நிறுவாகம்
வழங்கி வருகிறது
அவள் நடப்பாள்அது தெரியும்தானே

அடுத்த மாதம் வரும் தீபாவளி செலவும் மகனின் செருப்பில்லாத கால்களும்
எப்போதும் ஒழுகும் வீட்டையும் நினைத்து கனக்கும் இதயத்துடன் வெறும் கால்கள்
கூடைகளை நிரப்ப nfhட்டும் மழையில் ரெட்டைக் கட்டிக்கொண்டு அந்த வரக்கட்டு
மழையில் ஏறுகிறது.அவள் தோட்டக்காட்டச்சி சாகும் வரையிலும்
தோட்டக்காட்டச்சி!!
மனித உரிமை விவாதங்கள்
ஜரோப்பா தேசத்தில்
ஆவிபொங்கும் தேனீர் கோப்பையுடன்
அனல் பறக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *