ஓர் ஆயிரம் கண்ணீர்த் துளிகள் – தமிழ் வடிவம்அன்னலட்சுமி இராஜதுரை

நான் ஆயிரம் வார்த்தைகள்
கூடப்பேசுவேன்
நீ கேட்பாய் என்பதாக
இருக்குமானால்
உன்னை நான்
நெஞ்சில் கூடச்சுமப்பேன்
அது நாம் அருகருகில்
இருப்போம் என்பதாக
இருக்குமானால்
நான் ஆயிரம் கண்ணீர்த்
துளிகளை விட்டுக் கூட
அழுவேன்
அதில் ஒன்று உன்னைவந்து
சேருமாக இருக்குமானால்
நான் உனது அனைத்து
அச்சங்களையுங்கூட
எடுத்துக் கொள்வேன்
அது உன்னைக் குணப்படுத்துவதாக
இருக்குமானால்
நான் எனது எல்லாவற்றையுங்கூட
உனக்குத் தருவேன்
நீ உயர்ந்து நிமிர்ந்து நிற்பதாக
இருக்குமானால்
அது கொண்டுவரும் பாதிப்பைக் கூட
நான் ஏற்பேன்
அது நீ விழாமல் இருக்க
உதவுவதாக இருக்குமானால்

நான் ஆயிரம்
வார்த்தைகளைக்கூடப்பேசுவேன்
அது நீ மூழ்கிப் போகாதிருக்க
உதவுவதாக இருக்குமானால்
நான் எனது அனைத்து
உணர்வுகளையுங்கூடக்
கேட்க வைப்பேன்
ஆனால் அதற்குப் பதில்
அவற்றை நான் எழுதுவேன்
நான் ஆயிரம் கண்ணீர்த்
துளிகளை விட்டுக் கூட
அழுவேன்
அது நீ பார்ப்பதாக இருக்கும்
என இருந்தால்
நான் உனது பயங்களைக் கூட
ஏற்பேன்
அது நீ சுதந்திரமாக இருக்க
வைக்குமானால்

மூலம்
ஜானெல்லிஎரின் எலிசபெத்
((Peters poetry))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *