சிரிப்பு

சூரியகலா கருணாமூர்த்தி(மலேசியா)

 

இறந்துக் கொண்டிருந்த
மனிதன்
சிரித்தபடி இருந்தான்

மரணத்தின் ஓலம்
அவனின் செவியில்
விழாமல் இருக்க – சத்தமாய்
சிரித்தபடி இருந்தான்.
அவனைச் சுற்றி இருந்தவரின்
சோகத்தை விரட்ட – பல் தெரிய
சிரித்தபடி இருந்தான்தன் மனதிலிருந்த மரணபயம்
வெளி தெரியாமலிருக்க-
கண்ணீர் சுரக்கும் வரை
சிரித்தபடி இருந்தான்.

உடலின் வலி – தன்
முளைக்கு எட்டாதபடி
விழுந்து விழுந்து
சிரித்தபடி இருந்தான்.

இறந்துவிட்ட தன் உடலைக் கண்டு
உருண்டு அழும் உறவைக் கண்டு

சிரித்தபடி இருந்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *