ஊர்வசியின் “இன்னும் வராத சேதி” அறிமுகக் குறிப்பு

தனா சக்தி

innum-varatha-sethi-

யுவனேஸ்வரி என்கிற ஊர்வசி என் நிலத்தைச்சேர்ந்தவள் யாழ் என்பதின் அடையாளத்தை எங்களைத்தவிர வேறு யாரால் இசைக்கப்படும் என் நிலப்பெண்களைத்தவிர .போராடுபவனுக்கும் புரட்சியாளனுக்கும் வறியவனுக்கும் எழுத்து வளைய வரும் என்பதில் பாரதி தொடங்கி பிரமிள் வரை கண்டுணர்ந்த ஒன்றாக என் எண்ணம்.

இந்த இடத்தில் ஒரு பெண் படைப்பாளியை இட்டு நிரப்ப விரல் விட்டுதான் சொல்ல முடியும் என்னால் என் குறைந்தபட்ச வாசிப்பும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதின் விளைவும் . அங்கு வைத்த குற்றச்சாட்டுகள் பெண் தன் வலிகளை மட்டும்தான் சொல்கிறாள் சமூகம் சார்ந்து யாரும் காத்திரமாக எழுது முயல்வதில்லை என்று அன்று அது கோவத்தை கிளப்பினாலும் பிறகு யோசிக்க வைத்தது .

அதன் பிறகு மேலோட்டமாக வாசிக்காமல் உள் புக ஆரம்பித்தேன் என் எழுத்துக்குள்ளும் சேர்ந்து எல்லாமே சுயநல பச்சாதாபங்களாகவே தெரிஞ்சது ஒரு சிலரின் எழுத்தைத் தவிர “ஏழு தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டாள், நேபாளத்தில் பூகம்பம் வந்தால் நான் பூக்களை ரசிக்க கூடாதா என்று ஒரு திராவ்க நெடியாக ஒரு அபத்தத்தை கேட்டதிலிருந்தும் பெண்ணிய கவிதைகள் மீதான என் பார்வை மாறியது அதுவரை நான் சுகிர்தாவையோ மாலதியையோ புதிய மாதவியையோ வாசித்ததில்லை மற்றவர்களின் ஒன்றிரண்டு கவிதைகளை எதன் மூலமாகாவாது வாசிதிருக்கிறேன் ஒரு சிலரைத்தவிர எல்லாருடையதும் பெண் உடலரசியல் வீட்டு பொடக்காலி பிரசவ அறையோடு நின்று விடுகிறது. மலாலா , அருந்ததி , அஜிதா . இப்படியானவர்களை காணும்போது கொஞ்சம் எனக்கு வெட்கமா இருக்கும்.

இதோ 1958ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஊர்வசி 2016ன் நவீன கவிதை எனப்படுவதையும் மொழி நிபுணத்துவத்தோடு  தோட்டாக்களின் மீது செவ்வரளியின் மணத்தை பூசி நறுக்கென்று மனசை துளைத்தெடுக்கிறார் . “புதுசு,அலை, சக்தி. இதழ்களில் 1982, 1985 காலகட்டங்களில் இவரின் கவிதைகள் வெளி வந்துள்ளது . “சொல்லாத சேதிகள்”, “மரணத்தில்வாழ்வோம்”. ஆகிய தொகுப்புகளில் வெளிவந்ததோடு சரி .தொகுப்பே வெளியிடவில்லை இந்த கவிதைக்காரி

ஆனால் அவளின் கவிதைகள் வாசிக்கும்போது ஆச்சரியம் ,மகிழ்வு , வியப்பு . எப்படி இன்றைய காலக்கண்ணாடிய படம் பிடித்து வைத்திருக்கிறாளே என்று. அவர்களுடைய இரவு என்ற கவிதை வாசிக்கும்போது ஈரக்குலை நடுங்கியது

அந்த கவிதையில் வரும்

 

“அந்த இரவில் இருள் வெளியே

உறைந்து கிடந்தது

ஐந்து ஜீப்புகள் ஒன்றாய்ப் புழுதி கிளப்பின

சோளகம் விசிறி அடித்தது

என் ஆழ் மனதில்

அச்சம் திரளாய் எழுந்து புரள

அவனை இழுத்துச் சென்றனர்

பல்லிகள் மட்டும் என்னன்னவோ சொல்லின

கூரைத் தகரமும் இஞ்சி அஞ்சி மெதுவாய் சட சடத்தது

காலைச் சுற்றிய

குழந்தை வீறிட்ட்ழுதது

“விடுப்பு’ பார்க்க அயலவர் கூடினர்

நீட்டிய துவக்குகள்

முதுகில் உறுத்த அவன்

நட்ந்தான் அவர்களுடன்

அந்த இரவில்

ஐம்பது துவக்குகள்

ஏந்திய கரங்கள்

என்னுள் பதித்த சுவடுகள்

மிகவும் கனத்தவை

அந்த இரவு அவர்களுடையது

******************

மகனுக்கு சொல்வதாக தம்பிக்கு சொல்வதாக காதலனுக்கு சொல்வதாக எல்லாமே சுதந்திர உரிமை வேட்கையை தான் பேசுகிறது ஊர்வசியை வாசிக்க உணரும் அளவிற்காவது எனக்கு அறிவு உள்ளது என் அதிர்ஸ்டம் பொருந்திய ஆசிர்வாதமே

புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம்தான்
எங்கேனும்
கோடை மழைக்குக் காட்டுமல்லி
பூத்திருக்கும்.

இங்கே,
முற்றத்து மல்லிகைக்குத்
தேன்சிட்டும் வந்தாச்சு
‘விர்-’ என்று பின்னால்
அலைகின்ற சோடியுடன்…..

வெள்ளையும் மஞ்சளுமாய்
வண்ணத்திப் பூச்சிகளும், படையாக
செவ்வரளி வரிசைகளில்
காற்றில் மிதந்தபடி.

 

வீட்டுக்குப் பின் தோப்பில்
மரங்கள் சலசலக்க
குருவிகளின் வம்பளப்பு
தினமும்தான் புதுசாக.

ஆனாலும்,
நீ சொன்ன சேதியை
இன்னும் ஒன்றுமே தரவில்லை
காற்றுங் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *