“நாங்க” READY

தகவல் அ. மங்கை  


Naanga-Ready-Mailer-tamil (1)கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வாழும் மாற்று பாலினரின் கதைகளைக் கேட்டு ஒளிப்பதிவு செய்தனர் பெங்களுரைச் சேர்ந்த சுனில் மோகன்,சுமதி மூர்த்தி என்கிற மாற்றுபாலினம்சார் சமூக செயற்பாட்டாளர்கள். அப்படங்களை தெரிவு செய்து பனுவலுக்கான கதைகளையும் கதை சொல்லல் முறையையும் தேர்ந்தெடுப்பதற்கான பட்டறை இரணடு கட்டங்களாக சென்னையில் நடைபெற்றது. அவற்றில் பங்கேற்றோம் சுனில் மோகன், சுமதி மூர்த்தி வ.கீதா,பிரேமாவதி, ஜெனி,அனுஷ} ,சங்கரி, சிவா, கௌதமன் ரங்கநாதன் தீபக் ஸ்ரீநிவாசன்,அம்ரிதா சந்தா மற்றும் அ. மங்கை.. அவற்றை நாடகப் பனுவலாக்கும் பொறுப்பை பிரோமாரேவதி ஏற்றார். மரப்பாச்சி குழுவினர் அப்பனுவலை அளிக்கை செய்வதற்காக நடந்த பயிற்சிகளில் தமது பங்களிப்பை செய்தனர். அனைத்தும் ஒருங்கிணைந்து உருவானது தான் நாங்க ரெடி

 

நாள் ஏப்ரல் 18 சனிக்கிழமை

நேரம்

19.15 மணி

இடம்

ஸ்பேசஸ்,எலியட் பீச் சாலை பெசண்ட் நகர் சென்னை

நெறியாளர் குறிப்பு

பல ஆண்டுகளுக்;கு பிறகு மீண்டும் பாலினம் – பாலியல்பு குறித்த உரையாடலை நாடக வடிவில் நிகழ்த்த நான் எடுத்துள்ள முயற்சி இது பெண் – ஆண் இரு பிரிவினர் பெண்மை – ஆண்மை இரு எதிர்வுகள் ஓர் பாலின ஈர்ப்பு – எதிர் பாலின ஈர்ப்பு என பிரிந்து கிடக்கும் சட்டகங்களை மாட்டிக்கொண்டு அலைகிறது இந்த சமூகம் இதில் எது இயல்பு எது? எது இயல்புக்கு மாறானது? என்ற வியாக்கியானங்கள் வேறு. இதில் இயல்பானது எனக் கூறப்படுவது அனைத்தும் இருத்தல்களை,மனிதர்களை ஒடுக்கி ஆள்கிறது. அதனால் ஒடுக்கப்படுவோர் பலர். வலிமையை காட்டும் வெறியால் மற்றவரையும் முடக்கி தம்மைத் தாமேயும் அடக்குவோர் மற்ற அனைவரும் இந்த வகையில் சாதி,மதம் வர்க்கம்,இனம் ஆகியவற்றோடு சேர்ந்த ஒரு ஒடுக்குதலாகத்தான் பால் மற்றும் பாலியல் சார்ந்த ஒடுக்குமுறையும் இவை அனைத்தும் நமக்குள் திணிக்கப்பட்டவை ஆனால் நடைமுறை வாழ்வு வௌ;வேறு திசைகளில் பயணப்படுகிறது. மூளைச்சலவை செய்யும் பாடங்கள்,அவற்றை மீறும் வாழக்கை இரண்டையும் முன்வைக்கிறது இந்நிகழ்வு. உடையமைப்பையும், உடல் புலப்படுத்தும் குறியீடுகளையும் மீறி மனசைத் தேடுகிறது. கண்கொத்தி பாம்பாய் பண்பாட்டைக் காக்கும் காமிராக்கள் முன் நின்று எம்மைக்காட்ட “நாங்க ரெடி”


 

அரங்கில் :- அஸ்வினி, சௌம்யா –தமிழரசன்,தமிழரசி,திலகவதி,பொன்னி,மயூரன்,ஜெனி

இசை:- ரங்கசாமி, ஸ்ரீ கிருஸ்ணா கட்டைக் கூத்துக்குழு
உடையமைப்பு :-  இந்து வஷிஷ்ட்
மேடையமைப்பு :- உடையமைப்பு குரு சூரஜ்
ஓளியமைப்பு  :- சுரேந்தர்
பனுவல் வடிவமைப்பு  :- பிரேமாரேவதி (சுனில்,சுமதி ஆகியேரின் ஆவணங்களைச் சார்ந்து)
நெறியாள்கை :- அ.மங்கை

 

நன்றி சுனில் மோகன் சுமதி மூர்த்தி,பனுவல் பட்டறை பங்கேற்பாளர்கள்,அனிரத்தன், வாசுதேவன், மீனா சுவாமிநாதன், மற்றும் ஸ்பேசஸ் தக்ஷிணசித்ரா

Naanga-Ready-Mailer-tamil (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *