“ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

 கலாவதி கலைமகள்  (இலங்கை)

மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு  என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு திருமலை வீதியுள்ள புனித ஜோன்ஸ் தேவாலயம் அமேரிக்க சிலோன் மிசனில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.45க்கு நிறைவுபெற்றது. இந் நிகழ்வானது மூன்றாவது கண் நண்பர்களின் கடந்த பத்து வருடகால பால்நிலை சமத்துவத்தை நோக்கிய புரிதலும் செயற்படுதலும் பற்றிய அனுபவங்களின் பகிர்வாக அமைந்திருந்தது. ஓவியக்கண்காட்சி, ஒவிய ஆற்றுகை, இவற்றுடன் அனுபவப்பகிர்வுகளை கொண்ட இரு அமர்வுகளைக் கொண்டதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்விற்கான  தலைமை உரையை கமலாவாசுகி வழங்கினார். நிகழ்வில் பெண்ணிலைவாதச் செயற்ப்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இவ்விடயத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஆவலர்கள்  என அனைவரும் பங்கு பெற்றிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்களினால் “நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில் …” என்னும் பாடலைப் பாடி பங்குபெற்றுநர்கள் வரவேற்கப்பட்டனர். பின்னர் நிர்மலவாசனின் கொடிகளில்  தொங்கவிடப்பட்ட ஓவியக் கண்காட்சியினை பார்வையிட்டவாறு பயணித்து  ஒவிய ஆற்றுகையில் பங்குபெற்றினர். பெண்ணின் முகம் கீறப்பட்டு நிலத்தில் விரிக்கப்பட்டடிருந்தது.  அத்துடன் மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களைக் கொண்ட பெரிய ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றினைக் கொண்டு பெண் உருவம் பங்குபெற்றியவர்களால் நிறமூட்டப்பட்டது. இதனை ஓவியர் நிர்மலவாசன் ஒழுங்கு செய்திருந்தார். பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணத்தில் பங்கு கொண்ட அனைவரும் பயணத்தில் தங்களையும் ஒருவராய் இணைத்துக் கொள்வதற்கான செய்ற்;பாடாய் நிறஐஸ்கட்டிகளை நிலத்தில் விரித்துவைக்கப்பட்டுள்ள பெண்முகத்தில் தங்களுக்குரிய விரும்பிய இடத்தினை தெரிவுசெய்து வைத்தனர். ஐஸ்கட்டி உருகி குறிப்பிட்ட நேரத்தில் பின் ஓவியத்திற்கு நிறம் கொடுப்பது போலவே பால்நிலைச் சமத்துவத்தை நோக்;கிய பயணம் என்பது தொடர்ந்த பல் மனிதர்களின் பங்குபெற்றலுடன் தொடர்ந்து வாழ்வில் கொண்டுசெல்லப்பட வேண்டியதாகும். இவ்வாறு ஓவிய ஆற்றுகைகளுடன் அழைத்துவரப்பட்டனர்.
 

சி.ஜெயப்பிரதாப்  நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். வரவேற்புரையை து.சோதீஸ்வரன் வழங்கினார். பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம் நூல் அறிமுகஉரை து.பிரதீபனால் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நூல் வெளியீடு கலாநிதி சி.ஜெயசங்கரினால் இடம்பெற்றது. வெளியீட்டின் முதல் பிரதியினை மாவட்ட உதவிச் செயலாளரான திரு.ரங்கநாதன் அவர்களும் இரண்டாவது பிரதியினை இயக்குநர், அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்   வாணி சிமியோன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு பற்றிய பிரதான உரையை பெண்நிலைவாதச் செயற்ப்பாடடளரான கமலாவாசுகி அவர்கள் வழங்கினார்கள்.

தேனீர் இடைவெளியைத் தொடர்ந்து முதலாம் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. முதலாம்அமர்வின் இணைப்பாளராக பெண்நிலைவாதச் செயற்ப்பாட்டளரான தி.காயத்திரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தியிருந்தார். முதல் அமர்வில் ஜோ.கருணேந்திரா  “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய எனது பயணம்” என்னும் தலைப்பிலும் து.கௌரீஸ்வரன் “பெண்நிலைவாதச் சிந்தனைகள் என்னுள் வந்தவிதம”; என்னும் தலைப்பிலும்  தங்கள் அனுபவத்தினை பகிர்ந்தனர். இவ் அனுபவத்தின் பதிவுகளின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது.  இதனைத் தொடர்ந்து மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்களின் செயல்வாதப்பாடல் அளிக்கை இடம்பெற்றது. 

இரண்டாவது அமர்வினை பெண் எழுத்தாளரும் “பெண்” சஞ்சிகை ஆசிரியருமான சே.விஜயலக்சுமி அவர்கள் தலமை ஏற்றார்.இவ் அமர்வில் “ஓவியர் நிர்மல வாசனுடனான சந்திப்பு” என்னும் பேட்டி முiயிலான கலந்துரையாடலை வாசனுடன் இணைந்து கி.கலைமகள் அவர்கள் செய்தார். இதனைத்தொடர்ந்து சி.ஜெயசங்கர் அவர்கள் “ஆளுமை கொண்ட ஆண்கள் பால்நிலை சமத்துவத்தினை உள்வாங்கி வாழ்பவர்கள்” என தன் அனுபவத்தினை  பகிர்ந்;தார். அதனைத்தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்று இரண்டாம் அமர்வு செயல்வாதப் பாடல் அளிக்கையுடன் நிறைவுபெற்றது.

நிகழ்வின் தொகுப்புரையினை க.பியுறாவும் நிகழ்வின் மதிப்பிட்டுரையை எழுத்தாளர் கௌறிபாலன் அவர்களும் வழங்கினார்கள். மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினரான ஜோ.கருணேந்திரா அவர்களின் நன்றி உரையுடன் பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு நிகழ்வு நிறைவு பெற்றது.பெண்கள் மீதான வன்முறைகளின் உருவாக்கத்தின் அடிப்படையாக பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் செய்ப்படுகின்றன. உடலியல்,உயிரியல் ரீதியான பெண்,ஆண் வேறுபாடுகள் சமூகத்தளங்களில் ஏற்றத்தாழ்வுகளாய் உணரப்பட்டு அவை பண்பாட்டசைவுகளாய் இயற்கையாகப் பின்பற்றி வருபவைகளாக தொடர்ந்தும் இறுக்கமாய் பின்பற்றப்பட்டு வருகின்றன. பால்நிலை அசமத்;துவத்தினை ஒவ்வொருமனிதரும் உணருவதும் அதற்கெதிரான மாற்றான செயற்பாட்டினைத் தொடங்கும் போதே மனிதர்கள் சந்தோசமாய் வாழும் சூழலை உருவாக்க முடியும் என்னும் உணர்தல் பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம் நிகழ்வில் இடம்பெற்ற அனுபவப் பகிர்வில் மேலோங்கி நின்றது. இதனை வாழ்வில் கொண்டுவந்ததன்  செயற்பாட்டின் விளைவுகளையும் அதே வேளை பெற்ற அனுபங்களையும் உணர்ந்து கொள்ளக் கூடியதாய் அமைந்திருந்தது.

ஓவ்வொரு மனிதரும் சந்தோசமாய் சுதந்திரமாய் வாழும் உரிமை உடையவர்கள். பெண்கள்மீதான பால்நிலைசார் பாரபட்சங்களை கேள்வி கேட்பதும் அதனை தங்களது வாழ்வில் ஒரு அம்சமாய் உணரும் ஒன்றாக கைக்கொண்டு வரும் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு ஆண் நண்பர்கள் ஒவ்வொருவரும் இந் நிகழ்வில் தங்கள் அனுபத்தினை பகிர்ந்துகொள்வதன் ஊடாக தங்கள் பத்து வருட பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணத்தினைப் பதிவு செய்தனர்.  தங்களை சுய விமர்சனத்திற்குப் உட்படுத்தினர்.  இந் நிகழ்வில் பங்குபெற்றியவர்களின்  கருத்துப்பகிர்வுகள் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய செயற்பாட்டுகளே ஆக்கபூர்வமான சமூக மாற்றத்திற்கான வழியாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *