யாரடி நீ பெண்ணே?

அ. வெண்ணிலா.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.நிறைய இலக்கிய அரங்கங்களில்இ அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.

 அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.

ஆனால் பொதுமக்கள் கூடும் வெகுஜன அரங்கங்களில் கையில் உள்ள கூர்மையான ஆயுதத்தை கையாள்வதுபோல் கவனமாக கையாள வேண்டிய தலைப்பு அது.எந்த நேரமும் பேசுபவருக்கு எதிராகவோ அல்லது தனக்கு எதிராகவோ கூட திரும்பிவிடக் கூடிய ஆபத்து அதில் இருக்கும்.அப்படி என்ன தலைப்பாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?வேறென்ன… பெண்ணியம் பற்றிய தலைப்புதான்

.

படித்தஇவேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் பெண்ணியத்தை எந்த அளவிற்குத் தெரிந்து வைத்துள்ளார்கள்இஎந்த அளவிற்கு நடைமுறைக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்இஅவர்களிடம் பெண்ணியம் பற்றி எவ்விதமான பார்வை உள்ளது போன்றவற்றைப் பற்றி வெளிப்படையாக அறிந்து கொள்வதற்கான ஆரோக்கியமான களமாக அது இருந்தது.

தமிழகத்தில் பெண்ணியம் தொடர்பான களப்பணியில் இருப்பவர்கள் செயல்பாட்டாளர்கள்இஎழுத்தாளர்கள் இகவிஞர்கள்  மற்றும் பெண்ணிய நிலைபாட்டாளர்கள் ஒரு பக்கத்திலும் எங்களுக்கு ஏன் பெண்ணியம் தேவை என திறந்த மனநிலையுடன் அதன் எந்தப் பின்புலத்தையும் அறியாத கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பெண்கள் மறுபக்கத்திலுமாக விவாதம் துவங்கியது.

இன்றைக்கு பொதுத் தளங்களில் ஆரோக்கியமான விவாதங்களுக்கான வரவேற்பு இல்லை என்று பொய்யான வெற்று நகைச்சுவை பேச்சரங்கங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே சமூக அக்கறையுடன் செயல்படுவதை அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

விவாதம் துவங்கும்பொழுதே மிக எளிய கேள்வியில் ஆனால் பொதுஜனம் என்கிற 99மூ சதவீதத்தினர் மனதில் உள்ள கேள்வியில் விவாதம் துவங்கியது.நாங்கள் எங்கள் வீடுகளில் நிம்மதியாகஇபாதுகாப்பாக இருக்கிறோம்.சின்னச் சின்ன முரண்பாடுகள் வரும்பொழுது விட்டுக் கொடுக்கிறோம் அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைக்கிறோம் அல்லது பொறுத்துப் போகிறோம்.வாழ்க்கை அமைதியாக இருக்கிறது.ஏன் எங்களுக்குப் புரியாத இந்த பெண்ணியம்?பெண்ணியத்தால் எங்களுக்கு ஆகப் போவது என்ன?

உடனே நாங்கள் எல்லாம் வெகுண்டுபோய் பெண்ணிய தத்துவம் உருவான வரலாற்றை விளக்கத் துவங்கிவிட்டோம்.எதிரில் இருந்த பெண்களுக்கு நாங்கள் தமிழ்தான் பேசுகிறோமா என சந்தேகம் வரும் அளவிற்கு அவர்களுக்கு எங்கள் வார்த்தைகள் புரியாமல் அந்நியமாய் இருந்தன.வேறு யாருடனோ பேசுகிறோம் என அவர்கள் தங்களின் கவனத்தைத் திசை மாற்றிக் கொண்டார்கள்.
திடீரென்று விழித்துக் கொண்டதைபோல் உடனே எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்டார்கள்..உங்கள் பிரச்சனைதான் என்ன?யாருடன் உங்களுக்கு சண்டை? உங்களுக்கு வேண்டிய ஆண்கள் எல்லாருடனும் சண்டையிட்டுக் கொண்டு ஆண்கள் இல்லாத உலகத்திலா வாழப் போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.

பெண்ணியவாதிகள் ஆண்களை ஒருபோதும் வெறுப்பதில்லை.ஆணாதிக்கம் எங்கு இருந்தாலும் அதைத்தான் வெறுக்கிறோம்.அதை ஒழிக்க வேண்டும் என்கிறோம் என்றோம்.உடனே ஒரு பெண் என் வீட்டில் என் அப்பாவைவிட என் அம்மாதான் எல்லா விஷங்களிலும் ஆதிக்கம் செய்வதுஇஎன் அப்பா வாங்குகிற சம்பளத்தைக் கூட என் அம்மாவிடம்தான் கொடுப்பார்இஎன் அம்மா மட்டுமல்லஇஎன் பாட்டிஇஎன் அத்தை என என் வீட்டுப் பெண்கள்தான் வீட்டில் அதிகாரம் படைத்தவர்கள் என்றார்.
மற்றொரு பெண் எங்கள் வீட்டில் சொத்துக்கள்கூட எங்கள் வீட்டுப் பெண்கள் பெயரில்தான் உள்ளன.என் அப்பத்தாஇசின்ன அப்பத்தாஇஎன் அத்தைஇஇந்த தலைமுறையில் என் அம்மாஇசித்தி என எல்லாச் சொத்தும் பெண்களின் பெயரில்தான் உள்ளன என்றார்.

விவாதம் முக்கியமான கட்டத்தை நெருங்குவதை கவனித்த நாங்கள் புள்ளிவிவரங்களை அடுக்கத் தொடங்கினோம்.இந்தியாவில் பெண்கள் பெயரில் வெறும் இரண்டு சதவீத சொத்துக்கள் மட்டுமே உள்ளன.அந்தச் சொத்துக்கள் மேலேயும் முடிவு எடுக்கிற அதிகாரம் பெண்களுக்கு இல்லை. அந்தச் சொத்துக்களும் ஆண்களின் சட்டச் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வாகவே மாற்றப்பட்டவையாக இருக்கும் என்றோம்.
இந்த உண்மையை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் புறக்கணிக்கவும் முடியாத அவர்கள் பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார்கள்.குடும்பத்தில் சொத்துக்கள் யார் பெயரில் இருந்தால் என்ன?அனுபவிக்கப் போவது நாங்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகள் தானே.நீங்கள் பிள்ளைகளே வேண்டாம் என்று சொல்லுபவர்கள்.உங்களுக்கு எங்கே புரியப் போகிறது என்ற அஸ்திரத்தை எடுத்தார்கள்.

பெண்ணியவாதிகள் பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று யாருமே சொல்லவில்லை.ஆனால் பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதில் பெண்ணுக்கும் பங்கிருக்க வேண்டும்.அவள் குடும்பத்தின் பெருமையை காப்பாற்றுவதற்காகவே பிள்ளை பெறும் இயந்திரமாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.உங்கள் வீடுகளில் நீங்கள் யாராவது எனக்கு இப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாதுஇஇன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டோம்.

அவர்கள் எல்லாருமே இதில் என்ன பதில் சொல்லுவார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்திருந்ததால்இ ஒருங்கிணைப்பாளர் உடனே அந்தப் பந்தை எங்கள் அணிக்கே திருப்பினார்.மிக மோசமான சரிவை எங்கள் அணி சந்தித்த இடம் அது என்று நினைக்கிறேன்.நிறைய பெண்கள் பயந்தது ஆச்சரியமாக இருந்தது.உடம்பு சரியில்லை என்றால் சொல்லுவேன்இபடிக்கப் போனால் சொல்லுவேன்இவீட்டுக்காரர் ஒத்துக் கொண்டால் சொல்லுவேன் என பல சமாதானங்களை தங்களுக்குள் சொல்லிக் கொள்வதுபோல் பதில் சொன்னார்கள்.இன்னும் பெண்ணால் கடக்க முடியாத தாய்மைப் படிக்கல் கண்ணருகே நிமிர்ந்து நின்று என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது.

இந்த நேரத்தில் காலத்தின் கோலம் ஒன்று நடந்ததை முக்கியமாகச் சொல்ல வேண்டும். பெண்களே குழந்தைப் பெற்றுக் கொள்ளும் முடிவை எடுக்க வேண்டும் என்ற பேச்சு வரும்போது பெரியார் எங்கு போவார்?அவரும் அங்கு வந்துவிட்டார்.பெண் தன் கருப்பையைத் தூக்கி எறிந்தால்தான் தன் அடிமைத் தளையை முழுமையாக அறுத்தெறிய முடியும் என்ற தன் கருத்தைச் சொல்ல வைத்தார்.
ஒருங்கிணைப்பாளருக்கு என்ன சந்தேகம் வந்ததோ.. உடனே எதிர் அணியைப் பார்த்து உங்களில் யார் யாருக்கு பெரியாரைப் பற்றித் தெரியும் என்றார்.பெரியாரை தெரியுமா என்று கேள்வி கேட்கும் நிலைக்குக் காலம் ஓடோடிவிட்டது என்பதே எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது அதிர்ச்சி அந்தக் கேள்விக்கான பதில்.கால ஓட்டத்தின் பின்னால் போயிருந்த நான் நிமிர்ந்து பார்த்தால் 40 பேருக்கு மேல் உட்கார்ந்திருந்த அந்த அணியில் பெரியாரைத் தெரியும் என்று கை உயர்த்தி இருந்தவர்கள் 3 பேர்தான்.
தெரியும் என்றால் அவரைத் தெரியுமாஇ அவரின் கொள்கைகளைத் தெரியுமா என்றால் அவரைத் தெரியும் என்று தெளிவாக பதில் கிடைத்தது.இந்நிலை எங்கள் பக்கத்திலும் இருந்தது ஆச்சர்யந்தான்.எதற்கோ இப்படி அதிர்கிறோம் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது மாதிரி இருந்தது.

பெண்ணியவாதிகள் ஏன் வறட்டுத்தனமானவர்களாகஇவாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறீர்கள்?கணவனுக்காக சாப்பிடாமல் காத்திருப்பதுஇஅவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால் துடித்துப்போய் உடன் இருந்து பார்த்துக் கொள்வதுஇசோர்ந்து போய் வரும்போது கை கால் அழுத்திவிட்டு சூடாக ஒரு கப் காஃபி கொடுப்பதுஇ தன் வீட்டில் எல்லோருக்கும் தான் செய்தால் தான் சாப்பிட பிடிக்கும்இஒரு நாள்கூட என் வீட்டுக்காரர் என்னை விட்டு இருக்க மாட்டார்இஎன் ஆண் நண்பன்கூட என்னிடம் கேட்டே எல்லாம் செய்வான்இநான் சரியென்று சொல்லும்வரை கெஞ்சிக் கொண்டு இருப்பான் என்று பெண்கள் தங்கள் உலகின் அழகான விஷயங்களை நிறைய பேசினார்கள்.ஒரு கணம் பெண்ணியம் என்ற கனத்தத் தத்துவத்தைப் பேசியதால் நாம் இந்த வாழ்க்கையைத் தவறவிட்டுவிட்டோமா என்ற லேசான பதற்றம் கூட எங்களில் சிலருக்கு வந்திருக்கலாம்.

ஒரு வழியாக ஒருங்கிணைப்பாளரின் சமூக அக்கறையால் அந்த விவாதம் தொகுக்கப்பட்டுஇபெண்ணியம் என்ற போர்க்கொடியை உயர்த்தியதால்தான் இத்தனை பெண்கள் பொதுத் தளத்திற்கு அதிகபட்ச அறிவோடும்இ வேலை வாய்ப்புகளோடும் வெளியுலக வாழ்க்கைக்கு வந்துள்ளீர்கள்.எனவே பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை நமக்குத் தெரியவில்லை என்பதற்காக குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என ஒருவழியாக முடித்து வைத்து எங்களைக் காப்பாற்றினார்.

பெண்ணியம் பெண்ணை தவறான வழியில் ஒரு போதும் வழிநடத்துவதில்லை.பெண்ணியம் தனியான ஒரு வாழ்வியல் போக்கு அல்லஇநினைத்தால் பயன்படுத்துவதற்கும்இ வேண்டாம் என்றால் ஒத்திவைத்து விடுவதற்கும்.அது ஒரு உணர்வுநிலை.

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வு பற்றி நினைக்கும் எல்லா கணத்திலும் எந்தப் பெயருமற்று பெண்ணியம் அங்கு நின்று கொண்டிருக்கும். பெண்ணியத்திற்கு ஆதரவானவர்கள்இ எதிரானவர்கள்இ உணர்ந்தவர்கள்இ உணராதவர்கள் எல்லாவற்றையும் கடந்து பெண் மீதான கரிசனத்தில் உலகின் ஒவ்வொரு பெண்ணுடனும் நிழல்போல் நின்று ஒவ்வொரு பெண்ணையும் அவள் சுய வாழ்வை வாழச் சொல்லி கண் திறக்கும் ஆழ்மன உணர்வு நிலையே பெண்ணியம்.

பெண்ணியவாதிகள் யாருக்கும் தலைக்குமேலே இரண்டு கொம்புகள் முளைத்திருப்பதில்லை.அவர்கள் சிரிக்க மறந்த சிடுமூஞ்சிகள் அல்ல. வாழ்வின் அழகியலுக்கு அப்பாற்பட்டவர்களோஇகுடும்பம் என்ற நெகிழ்ச்சியான உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல.குறிப்பாக பார்க்கும் எல்லா ஆண்களுடனும் பகைமை பாராட்டுபவர்கள் அல்ல. இயற்கையின் எந்தப் போக்குக்கும் ஆதரவானவர்களே பெண்ணியவாதிகள்.குழந்தை பிறப்பு உட்பட.

நன்கு படித்தஇஉயர் வகுப்பைச் சார்ந்தஇசமூகத்தில் பலருடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தப் பெண்களுக்குள்ள புரிதலே மேலே குறிப்பிட்ட அளவுதான்.இன்னும் நடுத்தர நகரங்களில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்குப் பேசப் போகும்போது என் பற்றிய பிம்பம் எனக்கே பயமாக இருந்திருக்கின்றது .எனக்குப் பின்னால் எதாவது வால் முளைத்திருக்கிறதா என பலமுறை நான் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொள்வேன்.

அந்தப் பெண்களுக்கு பெண்ணியம் என அறிமுகமாவதே மார்க்ஸியம்இசூஃபிசம் போல் பெண்ணியமும் மிகப் பெரிய தத்துவமாகத்தான்.அதுவும் பாட புத்தகம் எழுதுபவர்கள் தவறாமல் பெண்ணியத்தின் வகைகள் என்று மேலைநாட்டு பெண்ணியத் தத்துவங்களை விலாவாரியாகப் விளக்கியிருப்பார்கள்.உள்ளாடை அணிய மறுத்தல்இ ஆண்களுக்கு நிகராக அனைத்து தீய பழக்கவழக்கங்களையும் கடைபிடித்தல்இ முறை தவறிய உறவு கொள்பவர்கள் என ஒழுக்கம் மீறும் பேரவா கொண்ட பெண்களாகவே அவர்கள் அறிமுகப்படுத்தும் பெண்ணியவாதிகள் நம் பெண்களை தெனாலிராமன் பூனை போல் அலறிப் போய் ஓட வைக்கின்றன.

பெண்ணியத்திற்கு 1008 விளக்கங்களை கொடுக்க முன்வந்தாலும்இஉலகத்தில் உள்ள 350 கோடிப் பெண்ணுக்கும் பெண்ணியம் என்பது வேறுவேறுதான்.

காரணம் இயல்பில் எல்லாரும் பெண் என்றாலும் தனித்தனி பெண்களே.பெண் என்ற அடையாளம் மட்டுமே பொது.

பிறகு எல்லாருக்குமான தத்துவம் எப்படித்தான் இருக்க முடியும் என்றால் என்னைப் பொருத்தவரை இருக்க வேண்டியதில்லை.ஆனால் பெண்ணியத்திற்கான நோக்கம் மட்டும் பொதுவானதாக இருக்கக் கூடும். பொதுவானதுதான்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் போல் பெண்ணும் இந்த உலகில் சுதந்திரமாக வாழ ஆசிர்வதிக்கப் படவேண்டியவள். பெண் என்ற அடையாளம் தொலைத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *