தலித்துகள், பெண்கள், தமிழர்கள்

thalithiam-ss
  •  பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம்  போன்ற  சொல்லாடல்கள் ஒரு இயங்கியல் தத்துவம்.  பெண்ணியம்,தலித்தியம் தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடல்கள் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே விதைக்கப் பட்ட மார்க்சியச் சிந்தனைகள் தான் ஒடுக்குமுறையின் பல்வேறு பட்ட வடிவங்களையும் ஆதிக்க அதிகார சக்திகளின் நுட்பமான தந்திரங்களையும்  பச்சையான சுயநலக் கூறுகளையும்  அடையாளம் கண்டு கொள்வதற்குக் துணை போயுள்ளது மார்க்சியம்.பாதிக்கப்பட்டவர்களுக்கான சொல்லாடலை உற்பத்தி செய்வதற்கு வரலாற்றில் மார்க்சியத் தத்துவம் போல

 ஒரு தத்துவம் வேறொன்றும் இல்லை. எனவே தலித்தியம,; பெண்ணியம் என பேசும் போதெல்லாம் காலத்தின் தேவைக்கேற்ப மார்க்சியம் புதிய வடிவம் எடுக்கிறது. அதற்கு பெண்ணியமும் தலித்தியமும் துணை நிற்கின்றது.  மனித சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் அளவும் தன்மையும் இன்றைய உலகமயமாதல் சூழலில் பன்மடங்கு பெருகியுள்ளன. எனவே புதிய சவால்களை ஏற்கப் புதிய சொல்லாடல்கள் பிறக்கின்றன. 

மனிதர்களின் அடிப்படைச் சிக்கல்  சக மனிதர்களோடு உறவுகளை உற்பத்தி செய்து கொள்ளுகிற தன்மையில் இருக்கிறது. இந்தச் சிக்கல் இன்னும் ஆழமாக பெண்-ஆண்  என்ற பாலியல் வேறுபட்ட உறவில் வெளிப்படுகிறது. ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் உறவு கொள்ள நேரும் போது உருவாகிற முதல் சிக்கல் அதிகாரச் சிக்கல் தான் அதாவது யார் ஆளுவது யார் ஆளப்படுவது என்ற சிக்கல் தான் இது பெண்-ஆண் உறிவில் தீவிரமாகச் வெளிப்படுகிறது. பிரமாண்டமாக எந்தவகையான மனிதப் பிடிக்குள்ளும் அவை அகபபடாமல்   சுழல்கிற இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் பெண் எனவே எதையும் எதிர் கொள்ளுகிற சக்தி அப்பெண்ணுக்குள் தீவிர நிலைக்குள் இயங்குகிறது.  ஆனால் ஆண் நிலை என்ன??  இவன் இந்த மண்ணில் இவ்வாறு காலூன்றிக் கொள்ள வழியின்றி அந்தரத்தில் பாதுகாப்பற்ற ஒரு தளத்தில் தொங்குகிறான.; தனக்கு விதிக்கப்பட்ட இத்தகைய ஒரு இயற்கையான நிலையில் பாதுகாப்பைத் தேடும் உயிரின் அடிப்படை உளவியலுக்கு ஏற்ப பெண்களோடு அந்தச் சக்தியோடு ஒட்டிக் கொள்ள முயல்கின்றான்  ஆனால் உறவு உருவாக்கத்தில் எப்பொழுதுமே சக்தி குறைந்தவர்கள் தான் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள் எனவே ஆண் பொறாமை கொள்கிறான். கருப்பை நமக்கும் இல்லையே என்று வேதனை கொள்கிறான் அதன் விளைவு ஒருவன் ஓருத்தி என்கிற ஆணாதிக்கச் சமூக அமைப்பிற்கு வழி ஏற்படுத்தித் தரும் கருத்தாக்கம் உருவெடுக்கிறது. பெண் என்கிற பிரமாண்டமான இயற்கை சக்தி இப்படி ஒருத்தி, ஒருவன் என்கிற குடும்ப அமைப்பிற்குள் ஒடுக்கப்படுகிறது. ஆணாதிக்கம் நிலைநிறுத்தப்படுகிறது சொத்துரிமைச் சமுதாயம் தோன்றி பிறகு இது மேலும் அழுத்தமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, நிலைநிறுத்தப்படுகிறது.

 இப்படி பல விடயங்களை தொட்டுச் சென்றுள்ள  இந்நூல் பெண்ணியம,; தலித்தியம,; தமிழ்த் தேசியம் என்று பாதிக்கப்படவர்களுக்கான சொல்லாடலின் நவீனக் கூறுகளை அவற்றிற்கே உரிய அரசியல் குணத்தோடு பதிவு செய்துள்ளது. எப்பொழுதுமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கமிருந்து புறப்பட்டு வரும் ஒரு விதமான உணர்ச்சி வேகமும் பொங்கும் மூர்க்கத்தனமும் – அவைகள் தாம் இந்த எழுத்துமுறையின் ஆதார சக்தியாக இயக்கம் கொண்டுள்ளன. இந்நூலை வாசிப்பது என்பது பங்கேற்பது என்ற தளத்திற்கு நகர்வதற்கான வாய்ப்பாக அமைகிறது.

இந்நூலை  டாக்டர் க. பஞ்சாங்கம் அவர்கள் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள வல்லினம் பதிப்பகம் இந் நூலை வெளியிட்டுள்ளது

வல்லினம்
எண் 9
Y.பிளாக் அரசு கடியிருப்பு
இலாசுப் பேட்டை புதுவை – 605 008
இந்தியா

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *