நாள்வழி

September 2010
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

வகைகள்

உள்ளீடுகள்

- அரசை ஆதரிப்போர் கூறும் பொய்கள்

- அதிரா (இலங்கை)

Rape 2
  • இலங்கை இராணுவம்  தமிழ் பெண்களை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவதேயில்லை என அரசை ஆதரிப்போர் இன்று வரை (புலம்பெயர் நாடுகளில் கூட) கூறி வரும் நிலையில் இவ் 9 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்   இதற்கு அரசை ஆதரிப்போர் தான் மௌனித்து இருக்கிறார்கள் என்றால் பெண்ணியவாதிகளும் கூடவா??

திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய அனுஷா  என்ற மாணவி மூன்று படையினரால் பாலியல் வல்லுறவுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது  அனுஷா என்ற இந்த மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த மூன்று இராணுவத்தினர் இவர்களைத் துரத்தியுள்ளனர்.அதன் போது மற்றைய சிறுமி ஓடித் தப்பிவிட   அனுஷா என்ற இந்த ஒன்பது வயது சிறுமி அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டார். இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்ட மாணவி பெண் உறுப்பில் இரத்தம் வடிந்த நிலையில் தள்ளாடியபடி வீட்டை வந்தடைந்துள்ளார் சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சிச்சியடைந்த தாயார் அவரை உடனடியாக மாவடி வேம்பு வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். 
 
  மாலை ஆறு மணியளவில் இச்சிறுமியின் வீட்டிற்குச் சென்ற இருகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் சிறுமியின் உள்ளாடைகளை பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். பெப்.13ம் திகதி சனிக்கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் பொலிஸ் அத்தியட்சருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாம் நான்கு இராணுவத்தினரை கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெவித்துள்ளார். விசாரணை என்ற பெயரில் அச்சிறுமியை இராணுவத்தினரும் பொலிஸாரும் அச்சுறுத்தி வருவதாகவும் இராணுவ சீருடையைக் கண்டாலே அச்சிறுமி பயந்து அழுவதாகவும்  இதேவேளை இச்சிறுமியின் பெற்றோரும்  இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக;கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

One Response to “- அரசை ஆதரிப்போர் கூறும் பொய்கள்”

  1. donkey says:

    Where is rajeswary madam she can phone police comandar and ask becasus rajes belive army and the rajapaksa not womens or people supper femisium

Leave a Reply

copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).