கேள்விச் செவியர் ஊரைக் கெடுத்து…. உலகைக் கெடுத்து…. லக்ஷ்மி

 ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி என்கின்ற பெண் ஆளுமை சில காலங்களிற்கு முன்னர் தனது முகப்புத்தக  அடையாளம் தனது துணைவராக இருந்தவரால் தொடர்ந்தும் கையாளப்பட்டு வந்திருந்ததென்று தெரிவித்ததையும் உங்களுக்கு நினைவுபடுத்தி வைக்க விரும்புகிறேன். 

உடனடியாக, பானுபாரதியின் சுயத்தை இழிவுபடுத்திய ‘பௌசரின் ஆணாதிக்கத் திமிர்த்தனம்’ என்று அவசர அவசரமான  காணொளித் துண்டுடன் ஒரு அறிக்கையொன்றையும் ( கவனிக்க இவ்வறிக்கையில்  இலக்கியசந்திப்பில் பங்குபற்றியவர்கள் யாரும் கையொப்பம் இடவில்லை)  ஐரோப்பாவில் இருந்து தயாரித்து  தமிழகத்தில் இருக்கின்ற பல பெண் ஆளுமைகளையும் அவசர அவசரமாக அரைகுறையான தட்டைத் தகவல்களுடன் துணைக்கழைத்தனர். ஏறத்தாழ 30 பெண்கள் கையொப்பமிட்ட ஒரு அறிக்கையானது இலக்கியச் சந்திப்பு முடிந்து அவரவர் தங்குமிடங்களிற்கு வந்தடைவதற்கு முன்னமேயே முகப்புத்தகத்திலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தது.

இந்த விடயம்  மிகத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு பெண் பொதுவெளிக்கு கொண்டு  செல்லப்பட்டு பெண்ணிய உரிமையின்  பெயரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பெண்களை இவர்களின் அரசியலுக்கு மலினமாக பயன்படுத்த  முனைந்துள்ளார்கள்  என்பதை  எனது அனுபவத்தில் இருந்தும் பார்வையில் -இருந்தும்தெளிவாக என்னால் உணர முடிகிறது

ஏப்ரல் மாதம் 6ம் 7ம் திகதிகளில் இலண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக் குறித்து பொதுவெளி என்று  கொண்டாடப்படும் முகப்புத்தகத்தில் நடத்தப்பட்ட விவாதங்கள், அச்சந்திப்பில் எந்தவிதமான காத்திரமான பிற விடயங்கள் எதுவும் உரையாடப்படவில்லை என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் சில சக்திகள் முனைப்பாக இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்தச் சந்திப்பு உருப்படியாக நடந்துவிடக்கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் இவ்வாறான பதிவுகளுக்கு மேலும் உரமூட்டுவது போன்ற வெளிப்பாடுகளைக் காண்பிப்பதையும் அவதானித்ததில் இருந்து எனது கருத்தினைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எண்ணுகிறேன்.

எந்த விதமான ஒடுக்குமுறைக்கும் எதிரான கொள்கை கோட்பாடுகள்பற்றி உரத்துப் பேசத் தெரிபவர்களைவிடவும், அவற்றை வரித்துக்  கொண்டவர்கள்  மதிக்கப்பட வேண்டியவர்கள் என்னும் கருத்து என்னிடம் உறுதியாகவே உள்ளது.

இலண்டனில் இலக்கியச் சந்திப்பு நடத்துவது என்று தீர்மானமெடுத்து அதற்கான செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டதில் இருந்து அந்தக் குழுவின்மீதும் குறிப்பாக பௌசர், கிருஷ்ணராஜா போன்றவர்கள்மீதும் அது நடைபெறுகின்ற தருணங்களிலும் பலர் தங்களுடைய அசௌகரியங்களை அவரவர் பாணியில் வெளிப்படுத்தினார்கள். ஏறத்தாழ, 6 மாதங்களுக்கும் மேலாக பௌசர் மீதான குற்றச்சாட்டுகள் ‘பொதுவெளி”யில் வைக்கப்பட்ட போதும், குறிப்பிட்ட சில அபிப்பிராயங்களை பௌசர் தெரிவித்ததன் பின்னர் அவற்றைத் தொடர்வதில் தனக்கு சம்மதமில்லை என்று விலகி இருந்தார். ஆனால் பௌசரை தொடர்ந்தும் வீம்புக்கு இழுப்பதில் இவர்கள் முனைப்பாகவே இருந்தனர். பௌசரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்த  இந்தக் குழு  ஒரு  தருணத்திற்காகப்  பார்த்திருந்து  பௌசரைப் பாய்ந்து கவ்விக் கொண்டது, பெண்ணிய உரிமை என்னும் போர்வையில்.

உடனடியாக, பானுபாரதியின் சுயத்தை இழிவுபடுத்திய ‘பௌசரின் ஆணாதிக்கத் திமிர்த்தனம்’ என்று அவசர அவசரமான  காணொளித் துண்டுடன் ஒரு அறிக்கையொன்றையும் ( கவனிக்க இவ்வறிக்கையில்  இலக்கியசந்திப்பில் பங்குபற்றியவர்கள் யாரும் கையொப்பம் இடவில்லை)  ஐரோப்பாவில் இருந்து தயாரித்து  தமிழகத்தில் இருக்கின்ற பல பெண் ஆளுமைகளையும் அவசர அவசரமாக அரைகுறையான தட்டைத் தகவல்களுடன் துணைக்கழைத்தனர். ஏறத்தாழ 30 பெண்கள் கையொப்பமிட்ட ஒரு அறிக்கையானது இலக்கியச் சந்திப்பு முடிந்து அவரவர் தங்குமிடங்களிற்கு வந்தடைவதற்கு முன்னமேயே முகப்புத்தகத்திலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தது.

இலண்டன் இலக்கியச் சந்திப்புக்குழுவின்மீது மலினமான விமர்சனங்களை முகப்புத்தகத்தில் எழுந்தமானமாக  வைத்த நபர்கள் பற்றி பௌசர் பேசும்போது, தமயந்தி  பானுபாரதியின் பெயரில் வைக்கின்ற விமர்சனங்கள் எழுதப்படுகின்ற முறைகள் உடன்பட முடியாதவை ஆதாரமற்றவை என்று கூறினார். இந்த அரங்கில் பௌசர் தெரிவித்த கருத்தினை நான் இப்படித்தான் விளங்கிக் கொள்கிறேன். அதாவது, ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி என்கின்ற பெண் ஆளுமை சில காலங்களிற்கு முன்னர் தனது முகப்புத்தக  அடையாளம் தனது துணைவராக இருந்தவரால் தொடர்ந்தும் கையாளப்பட்டு வந்திருந்ததென்று தெரிவித்ததையும் உங்களுக்கு நினைவுபடுத்தி வைக்க விரும்புகிறேன். 

எனக்குத் தனிப்பட்ட முறையில் பானுபாரதியை ஓரளவு தெரிந்ததாலும், தமயந்தியை நன்கு தெரிந்ததாலும் –  பானுபாரதியிடம்  இருந்து  இப்படியான ஆண்மைய அதிகார மொழி ஒன்று உபயோகப்படுத்தப்பட முடியுமா? இவ்வாறான மொழிக் கையாள்கையை அவர் செய்ய முன்வருவாரா? என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே இருந்து வந்திருக்கிறது. வேறு நண்பர்களும் இதனை ஆங்காங்கே நண்பர்களுக்கிடையான உரையாடல்களின்போது வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இதே கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த இன்னொருவரும்  இந்தச் சந்தேகத்தை அரங்கில் எழுப்பினார்.  ஆனால் அது குறித்து இவர்கள் யாரும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. எனவே இந்த தடாலடி முனைப்பு வெறுமனே  நபர்கள்  சார்ந்ததே. இவற்றைக் கோட்பாட்டுருவமைத்து கொடி பிடிப்பவர்களுக்கு ஓரளவாவது நிதானம் தேவை.

பானுபாரதியின் பெயர் இன்னொருவரால் பயன்படுத்தப்படுகிறதோ என்று எண்ணுவதால் வருகின்ற வெளிப்பாட்டை, ஆணாதிக்கத் திமிர் என்று அர்த்தப்படுத்துவதனூடாக, பாதிக்கப்பட்டிருப்பவராகக் கருதப்படுகிறவர் மீதான பிரக்ஞை ப+ர்வமான பார்வையை திசைதிருப்பி விடுகிறார்கள். மேலும் பானுபாரதி என்பவரின் கண்ணியத்திற்கோ படைப்பாளுமைக்கோ ஊறு விளைவிக்கும் வகையிலானதாக பௌசரின் கருத்து அமையவில்லை.  அங்கிருந்த  எந்தப் பெண்ணியவாதிகளோ,  பெண்களோ, புகலிட பெண்ணிய செயற்பாட்டாளர்களோ  நமது பானுபாரதி  என்கின்ற  பெண் ஆளுமையை சிறுமைப்படுத்துவதற்கான ஆணாதிக்கக் கருத்து என நம்புவதற்கான எந்த வாய்ப்பும் அவரது  பேச்சில் இருக்கவில்லை.  அங்கு நடந்த ஒரு  விடயத்தை பெண்ணியத்தின் பெயரால்  திசை திருப்பிய இந்த நடவடிக்கையானது மிகவும் ஒரு பொறுப்பற்ற, பெண் ஆளுமைகளை வஞ்சகமாகத் தங்கள் நலன்களுக்கு இழுத்துச் செல்லும் செயல்  என நான் கருதுகிறேன்.

நாங்கள் இன்னொருவர் மீது வைக்கின்ற விமர்சனங்கள் எள்ளி நகையாடுவதாக இருக்கும் பட்சத்தில் அது  பயனெதிர் விளைவுக்கே இட்டுச் செல்லும். இப்படியான தடாலடிப் போக்குகள் எந்த நல் விளைச்சலையும் தர முடியாது.

எங்களை நீங்கள் ஆதரிக்கும் பட்சத்தில் நீங்கள் ஜனநாயகவாதிகள், பெண்ணியவாதிகள், இன்னும் பல. எங்களை நீங்கள் ஆதரிக்காத பட்சத்தில் நீங்கள் அடக்குமுறையாளர்கள், ஆதிக்கசாதியினர் இப்படி முத்திரை குத்தும் மலினமான அரசியல் போக்கு தற்போது ஒரு குழுவினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. முழுப் ப+சணிக்காயை  ஒரு சிறங்கைச்  சோற்றில்  மறைக்கும்  வகையில், அந்த அரங்கில் முழுப் பெண்களுக்கும்  எதிராகத் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்தை மூடி மறைத்து வேறொரு  விடயத்தை  தவறாக  வியாக்கியானப்படுத்தி கதைகளாகவும் அறிக்கைகளாகவும் பொது அரங்குக் கொண்டு வருவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

இலண்டன்  இலக்கியச் சந்திப்பின் இரண்டாவது நாள் அரங்கில் பெண்களே உரையாளர்களாக இருந்து பெண்ணெழுத்து மற்றும் பெண்கள்  மீதான போரின்  தாக்கம்  பற்றிப் பேசிய  அமர்வின்போது  அரங்கில் இருந்த  ஒருவர்,  நேற்று முழுக்க ஆண்கள் சந்திப்பு நடந்தது. இன்றைக்கு பெண்கள் சந்திப்பு! நீங்கள் கொஞ்சம் கூட நேரத்தை எடுங்கோ என்று கிண்டலாகச் சொன்னார். நேற்று முழுக்க கதைத்த விடயத்துக்கும் பெண்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறீங்களோ? என்று நான் கேட்டேன்.

இதை நீங்கள் பிழையாக விளங்கி விட்டீர்கள்  என்று  தெரிவித்து  திரும்பவும்  அதையேதான் அந்நபர் கூறினார்.
அப்போது சபையில் இருந்த பெண்கள் அவரது  நடவடிக்கையைக் கண்டித்தார்கள். அதாவது பெண்களுக்கென்று சில விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி முழு வெளியிலும் இவர்கள் சம்பந்தப்படாதவர்கள் என்ற கருத்து  ஆணாதிக்க மனோநிலையில் இருந்து வெளிப்படுகிறது. இக் கருத்தானது அங்கு கலந்துகொண்டு பங்களித்த ஒட்டு மொத்தப் பெண்களையுமே அவமதிப்புக்குள்ளாக்குவது. இந்த வெளிப்பாடானது  எமக்கு  ஆச்சரியமானதல்ல என்றாலும் அது கண்டிக்கப்பட்டு கடந்து செல்லப்பட்டது முக்கியமானது. உண்மையில் அந்தச் சபையில் அனைத்துப் பெண்களுக்கும் எதிராக  முன்வைக்கப்பட்ட கருத்தாக இதனையே கொள்ள முடியும்.

நாங்கள் புகலிடத்தில்தான்  இந்த  இலக்கியச்சந்திப்பினைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென வாதிடுபவர்களாக  இருந்தும்  கூட, இலங்கைக்கு  இலக்கியச்சந்திப்பை எடுத்துச் செல்ல முன்னின்ற  ஒருவர் அவர் என்பதால்  அவருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துவோம் என்று ஒரு அறிக்கையை நாம் வெளியிட்டிருக்க முடியுமா? அந்த  இடத்தில்  நாங்கள் அந்த ஆணாதிக்கப்போக்கைக் கண்டித்தோம்.  அதைத் தொடர்ந்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முனைகிறோம். பொது உரையாடல் தளத்தில்  இப்படியான  கருத்தாடல்கள் வரும் என்பதனைத் தெரிந்துகொண்டுதான்  நாங்கள்  இந்த  ஆண்மையச்  சிந்தனையாளர்களுடன் பொதுத்தளத்தில் இயங்கி வருகிறோம். 

தமிழ்  இலக்கியப்பரப்பில் மனைவிமார்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்களை தங்களுடைய  புனைபெயர்களாகச் சூட்டிக்கொள்வதன்  பின்னால் உள்ள அரசியல் குறித்து  ஏற்கனவே  மீளமீளப்  பேசப்பட்டு வந்திருப்பதையும் இந்த இடத்தில்  நினைவுறுத்த விரும்புகிறேன்.  இது அவர்களுடைய சுயத்தைத் திருடுதல் என்பதுதான்.

பௌசரின் விமர்சனமானது பானுபாரதி என்பவரை அழிக்கும் அல்லது பழிதீர்க்கும் நடவடிக்கை  அல்ல. ஆனால் பௌசர் பேசியதில் இருந்த முன்னர்….. பின்னர்….. அனைத்தையும் கத்தரித்து ஆணாதிக்கவாதி என்று அவசர அவசரமாக சேறடிக்க முனைந்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த அறிக்கையின்  பின்னுள்ள அரசியலாகும். 

பௌசரை  இவர்களின் பாணியில்  யாழ்ப்பாணத்தான் என்றோ அல்லது வெள்ளாளன் என்றோ போட்டுத்தாக்கவும் அடிக்கவும் முடியாத  நெருக்கடி,  கண்டடைந்த புள்ளி ஆணாதிக்கவாதி.  அத்துடன் கவிஞர்  ஒருவரை  இலண்டன்  40வது  இலக்கியச்சந்திப்புக்கு அழைக்க எண்ணியதற்காக பௌசர், கிருஷ்ணராஜா  போன்றவர்களை நாடு கடந்த தமிழீழ ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தவும் முயற்சி செய்தார்கள்  என்பதையும்  அது பானுபாரதியின் பெயரிலான முகப்புத்தகத்திலேயே எழுதப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

இறுதியாக இந்த விடயம்  மிகத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு பெண் பொதுவெளிக்கு கொண்டு  செல்லப்பட்டு பெண்ணிய உரிமையின்  பெயரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பெண்களை இவர்களின் அரசியலுக்கு மலினமாக பயன்படுத்த  முனைந்துள்ளார்கள்  என்பதை  எனது அனுபவத்தில் இருந்தும் பார்வையில் இருந்தும்தெளிவாக என்னால் உணர முடிகிறது.

இனி பெண்களாகிய நாம்  இப்படியான  விடயங்களை  தெளிவாக உறுதிப்படுத்தியும் ஆய்ந்தறிந்தும் செயற்பட முன்வரவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு தக்க சான்றாகும். 

இவை பற்றிய ஏனைய பதிவுகள்

40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

இலக்கியச் சந்திப்பில் என் அனுபவங்கள்-I   ந. சுசீந்திரன் 

இலக்கியச் சந்திப்பில் என் அனுபவங்கள்-II– ந. சுசீந்திரன் 

இவ்வறிக்கையில் கையெழுத்திட்ட பெண்ஆளுமைகள் சிலர் தங்களது கையெழுத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

அம்பை
உமாசக்தி
அ. மங்கை
சுகிர்தராணி
கவிதாமுரளிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *