நாள்வழி

September 2010
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

வகைகள்

உள்ளீடுகள்

நீரின் கருமை

சலனி (இலங்கை)

அமைதியாக உறங்கும்
நீர்ப்பரப்பின் கருமை நிறம்
கூடி இன்னுமின்னும் ஓயும்
கரைகளில் ஒதுங்கிய மரங்களின்
சயனநிலை சொல்லும்
ஊமைக் காற்று
இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்
மாறாது தோன்றும்
அதே மௌனத்துடன் மென் மயிர்கள் படர்ந்த உன்
கரங்களில்
என் தவிப்பை
காற்று சொல்லக் கூடுமென
எழுந்து நடக்கிறேன்
நீரின் கருமையின் போர்வையை
வானம் கலைந்து பார்க்கிறது.

 

Leave a Reply

copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).