ஈழத்தமிழர்கள் நடிப்பில் வெளியாகும் “மாறு தடம்”(டிரைலர் இணைப்பு)

தகவல் பாஸ்கி

 

ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் “மாறு தடம்” எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது. இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் கண்டுள்ளனர்.

அவர்களுடைய உழைப்பு, புலம் பெயர்வு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது. ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி கண்டுவரும் இவர்கள், நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றில் பெரிதாக வளர்ச்சி காணவில்லை.

அதற்கு தகுந்த தயாரிப்பாளர்கள், சந்தை மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற பற்பல நடைமுறை காரணங்களால் கலைஞர்கள் துணிந்து திரைத்துறைக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஓசை பிலிம்ஸ்.

இதன் நோக்கம் திரைக்கலைத்திறன் மிக்க கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுடைய திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதே ஆகும். இந்நிலையில் ஓசை பிலிம்ஸ் மற்றும் விஷ்னி சினி ஆர்ட்ஸ் இணைந்து மாறு தடம் என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 27.01.2013 Restaurant Steinhof – Bernstrasse 61 – 3400 Burgdorf – ல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அகண்ட திரையரங்கில் காண்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுவிஸின் பல பாகங்களிலும் மற்றும் பிரான்ஸ்இ ஜேர்மனி, கொலண்ட், லண்டன், இத்தாலி, நோர்வே, டென்மார்க், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, மலேசியாஇ சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *