மத்திய கிழக்கின் அவலங்கள்

எஸ்தர் விஜித்நத்தகுமார் (திருகோணமலை)

இலங்கையிலிருந்த தொழிலுக்காக தங்களது குடும்பத்ததை விட்டு விட்டு புறப்படும் பெண்கள் பலதரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த ரிசானாவின் மரணமானது வரலாற்றில் மறக்கமுடியாத துனபியலாகும்.

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வன்கொடுமைகள் உலகத்ததை அச்சத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றது. பொருளாதார சுமையால் அழுதுக்கொண்டிருக்கும் அடிநிலை மக்கள் கூட்டம் ஒரு பக்கம் இருக்க, மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் அவ்வப்போது தலையைக் காட்டிவிட்டு இழுத்துக் கொள்ளும் நத்தையாகவே நாட்கள் நகர்கின்றது.குறிப்பாக ஆசிய நாடுகளில் தலைவிரித்தாடும் பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்த நிலையில்….,மத்திய கிழக்கு நாடான சவ+தி அரேபியாவில் மரணதண்டனைக்கு ஆளான ரிசானா நபீக்கின் மரணசெய்தி இடியென இறங்கியது. என்னால் எதையும் நம்ப முடியவில்லை. அதிக காலம் இழுபட்டு கொண்டிருந்த இந்த பிரச்சினையை மரணதண்டனை முலம் சவூதி அரேபியா அரசு முடிவுக்குக் கொண்டு வந்ததுள்ளது.

இலங்கையிலிருந்த தொழிலுக்காக தங்களது குடும்பத்ததை விட்டு விட்டு புறப்படும் பெண்கள் பலதரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இந்த ரிசானாவின் மரணமானது வரலாற்றில் மறக்கமுடியாத துனபியலாகும். அதற்கு சமுக ழட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எது முன்னேற்றமடைந்தது யார் யார் இதற்காக குரல் கொடுத்தார்கள் என்பதை விட இப்பெண்ணை யாராலும் காப்பாற்;ற இயலாமல் போனது என்பது வரலாற்று துரதிஸ்டமே.

இன்று இலங்கை எந்த திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றது என்ற இன்னமொரு குழப்ப நிலை நிலவுகின்றது. நீதித்துறையை எடுத்தால் அது யாரிடம் உள்ளது என்பதில் ஒரு குழப்பம். நீதித்துறையிடமா? சட்டத்துறையிடமா? அல்லது நிறைவேற்றுத்துறையிடமா? என்ற குழப்ப நிலை காணப்படுகின்றது. எங்கும் பேராட்டமும் பகிஸ்கரிப்புக்களம் ,காரசாரமாக விவாதங்களும் விரேதங்கள் பகைகள் என வளர்ந்துக் கொண்டே செல்கின்றது.

rizana_family_001

இன்னுமொருப்பக்கம் அடிநிலை மக்களின் துன்பியல் வாழ்வு குறிப்பாக ரிசானா நபீக்கிக்கின் மரணம் அவரது குடும்ப சூழலை பார்க்குமிடத்து சிறிய வயதில் பிழையான வெளிநாட்டு முகவர்கள் முலம் வெளிநாட்டுக்கு அனுப்பும் பெண்களுக்கு தக்க உதாரணமாகும்.திருகோணமலை மாவட்டம் கடந்த காலங்களில் பெரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சற்று மீண்டும் வரும் நிலையில் மக்களுடைய வாழ்வாதாரமும்  விலையேற்ற சுமையாலும் அடிநிலை மக்கள் தொழிலுக்காக வெளிநாடுகளை நாடுகின்றனர். எப்படியாவது வெளிநாடு போய்விடவேண்டும் என்று பிழையான முகவர்கள் முலம் தங்களின் பயணத்ததை ஆரம்பிக்கின்றனர்.இதனால் பெரும் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாய் நினைக்கினறனர்.நிலைமயோ வேறு வடிவல் இருக்கின்றது.

இந்த கருத்தியலை பெண்கள் மத்தியிலருந்து மாற்ற வேண்டும். மட்டுமல்ல சமுக மட்டத்தில் மாற்றம் வேண்டும்.இதற்கு சிவில் மற்றும் அரசு மட்டங்கள் பாரிய பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இன்று ரிசானாவின் குடும்பம் பாரிய இழப்பொன்றை சந்தித்துள்ளது. சவூதி அரசாங்கம் உடலைக் கூட இலங்கைக்குஅனுப்ப தவறிவிட்டது. இவ்வளவு காலம் சிறையில் வாடின மகளை அவளது உடலைக்கூட காணாத துர்பாக்கியதோடு நிற்கும் குடும்பம். இலங்கையிலிருந்தோ  வேறு எந்த நாடுகளின் இருந்தோ வெளிநாட்டுக்கு வேலை செய்யும்  பணிப் பெண்களுக்கு சரியான தொழில் பாதுகாப்பு இல்லை என்று ஐணுடழ கூறுகின்றது.

இது முற்றிலும் உண்மையான கருத்தாகும் இந்நிலையில் ரிசானா நபீக் மட்டுமல்ல,ஓராயிரம் பெண்கள் துன்பியலை
அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கட்டுரையை எழுதும்  நேரத்தில் கூட எங்கோ ஒரு முலையில் அது இடம்பெற்றுக் கொண்டிருக்கலாம்.அரசாங்கம் வெளிநாட்டு பணத்ததை வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்தப் பணத்துக்கு பின்னால் எத்தனை துயரச் சிதைவுகள்.அது இன்று ரிசானாவின் வடிவில் வெளிவரும் போது தாளாத துன்பமே சேர்கின்றது.இந்நிலையில் இதுப் குற்pத்த பாரிய சமுக உரையாடலும் தீர்வுகளும் தேவைப்படுகின்றன.எதிர்கால நிலைப்பற்றிலும். பெண்களிகன தொழில் பாதுகாப்புப் பற்றியும் ஒரு தீர்மானமான இணக்கப்பாடும் ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இச்சூழலில் அவசியமாகின்து.இதனை அரசாங்கமே முன்வந்து செயற்படுத்த வேண்டும். குறிப்பாக  குறைந்த வயதில் வெளிநாடு செல்லும் பெண்களை தடுக்கவும்,சரியான  சமுக திட்டமிடலும் இன்றி வெளிநாடுகளை நோக்கி பயணிக்கும் பெண்களை தடுக்க வேண்டும்.இதற்கு சமுக மட்டத்தில் விழிப்புணர்வு அவசியமாகின்றது. வெளிநாட்டில் ரிசானா போன்று வெளிவராத அவலங்கள் எத்தனை எத்தனையோ.

வறுமை , வெளிநாட்டு மோகம் குடும்ப பொறுப்புக்கள் காரணமாக பெண்கள் வெளிநாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.மலையகத்தில் இந்த நிலை மோசமாக உள்ளது. இதனால் வீடுகளிலுருந்த துரத்தப்பட்டவர்களாக .அங்கவீனர்களாக, காயப்பட்டவர்களாக என அவலத்தின் பட்டியல் நீளுகின்றது. உள்ளுர் வளமும் வருமானமும் கைகொடுக்காத நிலையில் வெளிநாட்டு அடிவருடிகள் இவர்களை தங்களின் பணப்பசிக்காக பசப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகின்றனர்.இது ஒரு பாரிய சமுகக் பிரச்சினையாகும்  பெண்களின் வருமானத்தை உள்ளுரில் அதிகரிக்க அரசும் சமுக மட்ட அமைப்புக்களும் முன் வர வெண்டும்.

ஒரு நாட்டின் எடுக்கும் எந்த செயற்பாடாகட்டும் திட்டங்களாகட்டும் அதன் அதிகமான சவால்கள் வந்தடைவது பெண்களைத்தான். பெண்களின் உழைப்பில் வியர்வையூரிய பணத்தில் குளிர்காயும் ஆணாதிக்க முதலாளித்துவ சிந்தனையில் ரிசானாவின் இந்நிலைப்பாட்டுக்கு பின்னராவது மறுமலர்ச்சி அடையட்டும்.அரசானது தனது கடமையை வெறும் காகிதத்தில் விடும் அறிக்கைகளாக மட்டுமின்றி வெளிநாடுகளில் ரிசானா போன்று துன்பியலை அனுபவக்க விடாது தரமான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னேடுக்க வேண்டும்.

பாலைவனத்தில் வெந்துக் கொண்டிருக்கும் மணலை விட வெம்பும் பெண்களின் மனவிசாரங்கள் அரசாலும் உலக நாடுகளாலும் கேட்கும் பட்சத்தில் இன்னும் வீடுகளிலும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் தடுக்கப்பட்டுள்ள பெண்களுக்க ரிசானாவின் மரணம் ஆரம்ப கட்ட விடுதலைக்கு அடித்தளம் இடப்படும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை முடிக்கின்றேன்

கழுகுக் கூட குதற தாமதிக்கலாம்
தன் பசி தீர்க்க
உன் உடல் துண்டம் கண்டு
பாலூறும் வயதில்
பல நூற்றுத் தொலைவில் யாருமற்ற
உன் காலங்கள் முற்றுப்பெற்றது.
எப்போதும் புகைந்துக் கொண்டிருக்கும்
நிரந்தர எரிமலையாய் நினைவு அக்கினிப் பிளவுகள்
கொதிக்கும் கொடும் காலங்களில்
பால் முகம் மாறாது துயிலுறிக்கப்பட்ட உனதுயிர்
இரத்தம் வியர்வை கடைசிசொட்டுக் கண்ணீர் இனி
ஒருக்கால் ஏழைத் தொழிலாளிப் பெண்ணின்
உரிமை வேர்களுக்கு உரமாகட்டும்.
வீரத்தியாகமான உனதுயிரானது ஆணாதிக்க முதலாளித்துவ மனோபாவ
சிந்தனைகளுக்கு
இறுதிக் கொலலியாகட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *