வெட்கப்படவேண்டிய விஷயம் !-சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

வைகை (இந்தியா)

Shanthi1s1 2006 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் 200ரூபாய் தினக்கூலிக்கு  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் கேட்டு அதிர்ச்சி யடைந்துள்ளோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது.

2006 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் 200ரூபாய் தினக்கூலிக்கு  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் கேட்டு அதிர்ச்சி யடைந்துள்ளோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத்துறை பெண் என நிரூபித்திருப்பதுடன் லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் வழங்கியிருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் நம்முள் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் ?

 

Shanthi1s1

 சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழப்பெண். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வறுமை,அறியாமை நிறைந்த ஒரு வாழ்க்கைச்சூழலில்அனைத்துத் தடைகளையும் தாண்டி ஆசிய விளையாட்டுப்போட்டி வரை ஒடியிருக்கிறார். இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல. இமாலய சாதனையாகும். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த போது நாம் அனைவருமே மகிழ்ந்து போனோம். பெருமிதப் பட்டோம் அந்த மகிழ்ச்சியைத் துடைத்தெடுப்பதைப் போன்று அடுத்து சில தினங்களிலேயே செய்திகள் வெளியாகத் துவங்கின. சாந்திக்குப் பாலின பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் தேறாத காரணத்தினால் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை அவர்பெற்றிருக்கும்ப தக்கத்தையும் ஒலிம்பிக் கமிட்டி திரும்பப் பெற்றுவிடும் என்பதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஒரு பரிசினைப் பெறாமல் போவது என்பது வேறு. பெற்ற பரிசினை இழப்பது என்பது வேறு. ஆனால் இங்கு அது மட்டுமல்ல பரிசு இன்றும் சாந்தி கையில் தான் இருக்கிறது. வந்து கொண்டிருக்கும் செய்திகிளில் எது உண்மை எந்த அளவு உண்மை என்று தெரியாத அளவுக்குச் செய்திகள் சிக்கல்களாகச் முதலாவதாக போட்டிக்குப் பிறகு சாந்திக்கு நடத்தப்பட்ட பாலின தேர்வில் சாந்திக்கு பெண் தன்மை குறைவாக இருப்பதாகத் தகவல் கசிந்தது. என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது அப்படியொரு பாலினத் தேர்வு நடத்தப்பட்டது அதன் பின் தேஹாவில் நடந்தது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அப்படி ஒரு சோதனை அங்கு நடத்தப்பட்டிருக்குமேயானால் அந்த அறிவிப்பு ஆதாரபூர்வமாக அந்த சர்வதேச அமைப்பினால் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏன் அது ஒரு வதந்தியாக வெளிவருகிறது.  என்பது நமக்கு புரியவில்லை. ஒருவேளை அந்த சர்வதேச அமைப்பு வெளியிடுவதற்கு முன்னால் அப்படி ஒரு தகவல் உண்மையாகவோ பொய்யாகவோ பரப்பப்படுகிறது.  பரப்படுகிறது என்று சொன்னால் அதை ஏன் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியிடவேண்டும்.? எத்தனையோ விசயங்களில் தேசபக்தியைப் பற்றி பேசுகிறவர்களுக்கு இந்த அறிவும் உணர்வும் கூடவா இல்லாமல் போகும்?

  2007 இல் ஊடறுவில் வெளியாகிய சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்??? என்ற வைகையின் கட்டுரை தொடர்ச்சியை வாசிக்க

 

 

 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *