எமது பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்ககளையும் காப்பாற்றுக!

-சந்தியா- (யாழ்ப்பாணம், இலங்கை)

Loading....Loading....

ல்வி இன்றைய மனித சமுதாயஙகளின் ஒரு அடிப்படை அம்சமாகும். கல்வி ஓரு அடிப்படை  மனித உரிமையாகவிருப்பதோடு எமது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும்.  நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அது அவர்களுக்கு வழங்கப்பட  வேண்டும்.

1945ல்,  கல்வி ஒரு இலவச சேவையாக, சாள்கதி, மதம், இனம், வகுப்பு, பால்,  பிரதேசம் என்ற பாரபட்சமின்றி எல்லா மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனத்  தீர்மானிக்கப்பட்டது. இது ஓருவித சமூகப் புரட்சியை நாட்டில் ஏற்படுத்தியதுல்வி இன்றைய மனித சமுதாயஙகளின் ஒரு அடிப்படை அம்சமாகும். கல்வி ஓரு அடிப்படை  மனித உரிமையாகவிருப்பதோடு எமது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும்.  நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அது அவர்களுக்கு வழங்கப்பட  வேண்டும். 1945ல்,  கல்வி ஒரு இலவச சேவையாக, சாள்கதி, மதம், இனம், வகுப்பு, பால்,  பிரதேசம் என்ற பாரபட்சமின்றி எல்லா மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனத்  தீர்மானிக்கப்பட்டது. இது ஓருவித சமூகப் புரட்சியை நாட்டில் ஏற்படுத்தியது. இலவசக் கல்வி.  நாட்டின் பல்பாகங்களில்; வசிக்கும் சாதாரண மக்களுக்கு சமூகத்தில் முன்னேற இடம் வகுத்தது.  இலவசக் கல்வி நாட்டின் கலைவடிவங்களில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, மக்களிடையே  பலவேறு வடிவங்களில் வெளிப்படுகிற மாதிரியான ஒரு ஆழமான அடையாள உணர்வை  ஏற்படுத்தியது. எமது கல்வியமைப்பு கலைஞர், எழுத்தாளர், ஆசிரியர்கள், பொறியியலாளர்,  மருத்துவர், பல்வைத்தியர், மிருக வைத்தியர், கட்டிட நிபுணர், விவசாய நிபுணர், சுய தொழில்  முனைவோர், வழக்கறிஞர், கணக்காளர் வேறும் பல தொழில் நிபுணர்களை உருவாக்கியுள்ளது.  இது எல்லாவகையான தொழில் மற்றும் நிர்வாக சேவைகளுக்கு அடிப்படையாக திகழ்ந்து  நாட்டின் நலனுக்கு வழிகோல்கின்றது. எங்களுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்விச் சேவை  தேவை. தரமான பாடசாலைகள் தேவை. உயர் கல்வி விடயத்தில், பல்கலைக் கழகங்களில்  கல்வி பயில்வதை எமது பிள்ளைகள் நாடுகிறார்கள்.

கல்வித்துறையில் அரசாங்க முதலீடு வீழ்ச்சியடைகையில ;…..

ஆகிலும், இன்று, பொதுக் கல்வி பல்வேறு கோணங்களில் இருந்து தாக்கப்படுகின்றது.  இன்றைய அரசாங்கத்தின் பொதுக் கல்வி மற்றும் உயர் கல்வி கொள்கை பற்றி  கவலையுறுகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எந்த விகிதத்தை கல்வித்துறையில்  செலவழிக்கின்றது என்பதை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கையை எடை  போடலாம. 2005ல் இருந்து கல்வியித்துறைகக்கான நிதி ஒதுக்கீடு பாரதூரமான மாதிரி  வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. இன்றைய ஜனாதிபதி 2005ல் பதவி ஏற்ற போது,  கல்விக்கான அரசாங்க செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.9 விகிதமாக இருந்தது.  இன்று இது ஒரு பரிதாபகரமான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 விகிதமாக  ; வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கம் உயர்கல்வியில் மேற்கொள்ளும் முதலீடு பாரதூரமாக வெட்டப்பட்டுள்ளது. இவ்  வெட்டுக்கள் பயமுறுத்துவனவாக உள்ளன. கல்விக்கான ஒதுக்கீடுதல் சொற்பமென நாம்  கருதினால், உயர் கல்வி மீதான அரச முதலீடு ஒரு அற்ப 0.52 (மொத்த உள்நாட்டு  உற்பத்தியின்) விகிதமே! 2010ல் இது 0.27 ஆக வீழ்ச்சியடைந்து 2012ல் இன்னும் குறைகின்றது.  கல்வித்துறையில் அரசாங்கம் கூடுதலாக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான்  இலவசக்கல்வியைப் பலப்படுத்தலாம். கல்வித்துறை மேலும் செழிப்படையும். உயர் கல்வியில்
அரசாங்கம் கூடுதலாக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பல்கலைக்  கழகங்களும் மற்ற உயர் கல்வி நிலையங்களும் திறன் வாய்ந்த மையங்களாக திகழக்  கூடியனவாக இருக்கும்;; அரச சேவைக்கும் தனியார் துறைக்கும், மக்களுக்கும் அதி உயர்  மட்டத்தில் சேவை செய்யக் கூடியனவாக இருக்கும்.

அதே நேரத்தில் பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அரச தலையீடுகள் அதிகரித்துக் கொண்டு போகின்றது…

பல்கலைக் கழகங்களும் பாடசாலைகளும் கல்வி மையங்களாகும். அவை சுயாதீனமாக வெளி  தலையீடுகளின்றி செயற்பட வேண்டும். அந்நிலையில்தான்  அச்சமின்றி மக்கள் கல்வி கற்க,  கற்பிக்க, சிந்திக்க ஏலும். புதிய சிந்தனைகள், கருத்துக்கள், அறிவுகள் மூலமாக சமுதாயம்  நிறைய நன்மைகளைப் பெறலாம். வெளிப்புற தலையீடு கற்றல் அறிவு பெறுதலை  அழித்துவிடும். இன்று, இலங்கையில், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகாரிகளின் தலையீட்டை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது. எல்லா கல்வி மையங்களிலும் இருக்க  வேண்டிய சிந்திக்கும் தன்மையையம் அறிவைத்தேடும் தன்iமையையும் அழிக்கின்ற  இந்தப்  போக்கு ஒரு முற்றுப்புள்ளியிட வேண்டும். மேலே குறிக்கப் பட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, அரசாங்கம் கல்வித் துறையில் கூடிய முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம். அப்படிச் செய்தால்:

* – பாடசாலைகளை மூடவேண்டிய தேவை இல்லை.
* – ஆசிரியக் கல்வி, ஆசிரியப் பயிற்சி என்பவற்றினைப் பலப்படுத்த முடியும்.
* –  பல்கலைக்கழகங்களிற் கற்போர் தொகை அதிகரிக்கும்.
*- பிரதேச வேறுபாடுகளினைக் கடந்து, எல்லாப ; பாடசாலைகளிலும் தகுதியான ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவர்.
*-அறிவினைப் படைப்பதற்கும், பரப்புவதற்குமான மையங்களாகப் பல்கலைக்கழகங்கள்
திகழும்.
*- நாட்டிலிருந்து வெளியேறும் அறிவாற்றல் மிக்கோரின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும்.
*- மிகவும் உயர்ந்த தகைமை படைத்தோரினை பல்கலைக்கழகங்கள் ஈர்த்துக்கொண்டு,
வேலைக்கு அமர்த்தி, அவர்கள் தொடர்ந்தும் தமது பணிகளினை நிலைத்துநின்று
வழங்குகின்ற நிலை உருவாகும்.
*-பெருமளவு மக்களுக்கு மிக உயர்ந்த தரமான கல்வியினைப் பல்கலைக்கழகங்கள்
வழங்கும்.

எமது கோரிக்கைகள்

* எல்லா மட்டங்களிலும் கல்வித்துறைக்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடுகள்: இதனை நாம் அடைவோமாயின்,
* எமது கல்வித்துறை முழுவதையும் எம்மால் வலிமைப்படுத்த முடியும். அத்துடன் வழங்கப்படும்
* கல்வியின் தரத்தினை நாம் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
* பல்கலைக்கழகங்களின்  சுதந்திரத்தை தேவையற்ற, தனிப்பட்ட அரசியல் குறுக்கீடுகளிலிருந்து
பாதுகாத்தல்: மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் கல்வியியலாளர்கள ; இணைந்து பணியாற்றக் கூடிய நிலையங்கள் என்ற வகையில், பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் தமது பங்கினைப் பேணி மேம்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
*கல்வியைப ; பொறுத்தவரையில் அரசுக்கு பாரிய பொறுப்புண்டு. எல்லாவித கல்விச் சீர்திருத்தங்களிலும்  சம்பந்தப் பட்ட எல்லா மக்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப் பட வேண்டும்.

1 Comment on “எமது பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்ககளையும் காப்பாற்றுக!”

  1. உலக மயமாக்கல் சூழலில் இந்த முழக்கங்கள் மூன்றாம் உலக நாடுகள் அணிதிலும் ஒழிக்க வேண்டிய வையாகும்.இந்த இருமொழி முழக்கங்கள் புதிய நம்பிகையை விதைக்கின்றன.போராட்டம் வெல்லட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *