“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படமும் சில அவதானங்களும்..! மயூ மனோ

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்ஃசிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள். 

உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலங்கையில் தடை செய்யட்டுள்ளது. இலங்கையில் இறுதிகட்ட யுத்தில் ஈழத்தில் பெண்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய கொடூரங்கலை. படமாக்கபட்டுள்ளது. புனிதவதி எனும் சிறுமிக்கு இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளையே படமாக எடுக்கப்பட்டுள்ளது..

 ஈழத்தில் நடக்கும் அவலங்களை உடனுக்குடன் இந்தியச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர், பேராசிரியர் நடேசனுக்கு (சத்தியராஜ்) வரும் தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் கதைக்குள் நுழைகிறாள் சிறுமி புனிதவதி (நீநிகா) என்னும் புனிதா. தாயுடன் களவாக இந்தியாவுக்குள் நுழைய இருக்கும் புனிதாவுக்கு ஆதரவு தருவதுடன் கர்ப்பமாக இருக்கும் அவளது கருவைக் கலைத்து அவளது எதிர்காலத்தைச் சீர்படுத்த உதவுமாறு வேண்டி நிற்கிறது அந்த தொலைபேசி அழைப்பு. அந்தவகையில் இந்தியா வந்து சேரும் புனிதாவையும் தாயாரையும் தங்கள் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கும் நடேசனும் அவர் மனைவியும் (நடிகை சங்கீதா) தங்கள் குடும்ப வைத்தியர் ரேகாவிடம் (லட்சுமி ராமகிருஷ்ணன்) அழைத்து செல்கின்றனர். கர்ப்பம் ஐந்து மாதத்தை நெருங்கிவிட்டதாலும் புனிதா பதின்மூன்று வயதேயான சிறுமி என்பதாலும் அவளது உடல் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாலும் கர்ப்பத்தைக் கலைப்பதைவிட குழந்தையைப் பிரசவிப்பதே புனிதாவைக் காப்பாற்றும் என்று சொல்லிவிடுகிறார் வைத்தியர்.

தனது மகளின் எதிர்காலத்தை எப்பாடுபட்டாவது சீரமைத்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கடல் கடந்து வரும் புனிதாவின் தாய் வேறுவழியின்றி இந்தமுடிவுக்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் ஊரில் விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்ட புனிதாவின் தந்தையை வேறு சில தமிழ்க்கைதிகளுடன் சேர்த்து இராணுவத்தார் சுட்டுக் கொல்வதை ஒரு இணையத்தளத்தில் கண்ணுற்றவர் தகவல் சொல்ல அதனைத் தானும் பார்த்து உறுதிப்படுத்தும் புனிதாவின் தாய் மேலதிக அலுவல்களின் பொருட்டு புனிதாவை நடேசன் வீட்டில் விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார்.

பின்னதாக புனிதாவுக்கு வரும் காய்ச்சலின் போது செய்யப்பட்ட பரிசோதனைகளின் போது அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட ஆரம்பிக்கிறது கதையின் இரண்டாம் பாகம். அவளுக்கே தெரியாமல் தன்னை வன்புணர்ந்தவனின் கருவை சுமந்துகொண்டு தன் தந்தை இறந்தது தெரியாமல் தாயார் ஊருக்குப் போனாரே அவருக்கு என்ன நடந்தது என்று அறியாமல் இருக்கும் புனிதாவுக்கு என்ன நடந்தது? அவள் குழந்தை என்னவாயிற்று? தாயார் என்னவானார் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி முடிகிறது திரைப்படம். எய்ட்ஸால் பாதிப்புற்றவர்களுக்கு சிறப்பு வைத்தியம் தரும் வைத்திய நிபூனராக வருகிறார் நடிகர் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் இயக்குனர் மற்றும் “நாம் தமிழர்” அமைப்பின் தலைவர் சீமான்.

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்ஃசிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள்.  பறவைகளுக்குத் தண்ணீர் வைத்து பூக்களுடன் பேசி நாயிற்கு தமிழ்ப் பெயர் வைத்து அழைத்து என்று தன்னைச் சார்ந்தவற்றை எல்லைகளற்று நேசிக்கும் புனிதா ஊரில் மண் தெருக்களில் புழுதி படிந்த உடலுடன் கெந்திக் கோடு விளையாடும் குழந்தைகளை நினைவுபடுத்துகிறாள். கள்ளங்கபடமற்று சிரிக்கும் அவளது ஆழ்மனக்கனவுகளில் அவளது ஊர் படர்ந்து கிடக்கிறது. போராளிகளுடன் சிரித்து விளையாடிய உணவு பகிர்ந்துண்ட பொழுதுகளும்இ மருத்துவ வசதி கிடைக்காது குண்டடிபட்டு மரணித்த நண்பியும் இறுதியாக விடைபெற்றுப் போன மனதுக்குப் பிடித்த போராளியும் அவளது நினைவுகள் முழுக்க நிறைந்து கிடக்கிறார்கள். விமானத்தின் ஓசை கேட்டு அலுமாரிக்குள் ஒளியும் புனிதாவின் கை பங்கருக்குள் ஒளியும் பள்ளிக்கூட மாணவர்களையே வரைகிறது.  இவ்வாறாக முழுக்க முழுக்க போரின் பேரால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்து சிறுவர்களின் பிரதிநிதியான புனிதாவை தன் நடிப்பில் மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறார் நீநிகா என்ற அந்த சிறுமி. அவரை உண்மையில் உச்சி முகரவேதோன்றியது.

தொடர்ந்து  வாசிக்க நினைவுகளின் பிரதி…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *