தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை

-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு)

sisu

தமிழ் மக்களுக்கு  சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள்  அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம்  எனவும்  கூட்டாக வலியுறுத்தியுள்ளன அவ்வாறு தீர்வு வழங்கப்பட்டால் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பெண்களின் வாழ்க்கையில் புதிய ஒளி பிறக்கும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. வடக்கு, கிழக்குலுள்ளவர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அது மிகவும் நன்மைபயக்கும் விடயமாக அமையும் என்றும் பெண்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.காணி அதிகாரம் வழங்கப்படாவிடின் காணி அபகரிப்பு  தொடரும்.

– வடக்கு கிழக்கில் படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டும்.
– தமிழ்மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்.
– வடக்கு, கிழக்கில் முழுமையான சிவில் நிர்வாகம் வேண்டும்.
– வடக்கு, கிழக்குலுள்ளவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும்.

அரசியல் தீர்வின் அவசியம் குறித்து கருத்து வெளியிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

தமிழ்பேசும் மக்களுக்குப் பிராந்திய ரீதியில் சுயாட்சி வழங்கப்படவேண்டும். பிராந்திய மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்திசெய்வதற்கான சிறந்த வழிமுறையாக இது அமையும். மகளிர் அபிவிருத்தி நிறுவனம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படக்கூடிய முழுமையானதொரு தீர்வை நாம் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்  பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஜோய்

மாதர் அபிவிருத்தி ஒன்றியம்

மாகாணசபைகளுக்கு சுயாட்சி வழங்கப்படும் பட்சத்திலேயே அடிமட்டத்திலுள்ள பிரச்சினைகளை இனங் காணமுடியும்.

சமூக அபிவிருத்தி மன்றம்

நாம் எமது பிரதிநிதிகளைத்  தெரிவுசெய்து அனுப்பியுள்ளோம். அனைத்துத் தரப்பினரும்  இதயசுத்தியுடன் செயற்பட்டு விரைவில் தீர்வைக்  காணவேண்டும்.

எமக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும், நடைபெற்றுமுடிந்த தேர்தல்களில் எல்லாம் தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிவதற்கான பிரதான காரணம்தான் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கொண்டுள்ள அக்கறையாகும்  எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சமூக அபிவிருத்தி மன்றத்தின் உப தலைவி திருமதி என்.ஜெகதீசன்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்

60 வருடங்களாகப்  புரை யோடிப்போயுள்ள இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதுதான் எமது கருத்து

1 Comment on “தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *