கிளிநொச்சியில் “அக்கினி” எரிப்பு

அன்னபூரணி (இலங்கை)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக அக்கினி வதம் என்ற நிகழ்வு ஒன்றும் கிளிநொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்கும் வாரம் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமைகள் இல்லம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது

இலங்கையில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக சோசலிஸ பெண்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜே. வி. பி தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பெண்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க, அரசாங்கம் பெண்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக குறிப்பிட்டார்.இந்தநிலையில் பெண்களின் உரிமைகளுக்காக சோசலிஸ பெண்கள் அமைப்பு தலைமையேற்று போராட்டங்களை நடத்தவுள்ளதாக சமன்மலி குணசிங்க,தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர். எனவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள பெண்கள் முன்வரவேண்டும் என்று; கோரிக்கை விடுத்த. அவர் இன்று வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் கணவர்மாரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் தெற்கில் பெண்கள் தமது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்கின்றனர் என்றும் சமன்மலி குணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக அக்கினி வதம் என்ற நிகழ்வு ஒன்றும் கிளிநொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்கும் வாரம் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமைகள் இல்லம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய கிளிநொச்சி மாவட்டப் பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயற்பாடுகளை ஓவியங்களாகவும், எழுத்துருவிலும் துணிகளில் எழுதிய பதாதைகளை கையில் ஏந்திய வண்ணம் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துமாறு கோரி வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியிருந்தனர். தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர். வாயில் கட்டியிருந்த வெள்ளைத் துணியை அக்கினியில் வீசி எறிந்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் எனவும் உறுதி எடுத்தனர். பெண்கள் சம உரிமையுடன் வாழவேண்டியவர்கள் என இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.விமலேஸ்வரி தெரிவித்தார். பெண்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம உரிமையை அனுபவிப்பதற்கு பின்நிற்க முடியாது எனவும் இன்றைய நாளில் பெண்கள் தங்களது பலத்தினை மீட்டுப் பார்க்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மனித உரிமைகள் இல்லத்தின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி எஸ்.விஜயராணி, கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் அமைப்புக்கள், கலாசர அமைப்புகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்

1 Comment on “கிளிநொச்சியில் “அக்கினி” எரிப்பு”

  1. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே -பெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி!” என்ற பாரதியின் கனவு நனவாகும் நாள் வெகு தொலைவினில் இல்லை, இன்ஷா அல்லாஹ்! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *