பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யாழ்.பஸ் நிலையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 50க்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று யாழ். நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 50க்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று யாழ். நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

யாழ் நகரில் உள்ள மனித உரிமை இல்லத்தில் தினசரி கிடைக்கும் முறைப்பாடுகளில் பெண்களால் செய்யப்படும் முறைப்பாடுகளே அதிகம் என தெரிவித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதால் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக மனித உரிமை இல்லம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
கறுப்புத் துணிகளினால் வாய்களைக் கட்டியவாறு பெண்கள், தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரிய சுலோக அட்டைகளை கறுப்புத் துணிகளினால் வாய்களைக் கட்டியவாறு பெண்கள், தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரிய சுலோக அட்டைகளை தாங்கி நின்றனர். ஜந்து மாதங்களின் 50 பெண்கள் யாழ்ப்பாணத்தில்; தற்கொலை செய்துகொண்டனர். குடும்ப வன்முறைகளில் 18 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். சிசுக் கொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக்கொண்டு செல்வதாக இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த யாழ். மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது. தாங்கி நின்றனர்.பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பணம் செய்யும் போது பேருந்திலும் வீதியோரங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலை தூக்கியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
 
• பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளிவை.
 
பெண்கள் உரிமையும் மனித உரிமையே.
-பெண்களை பெண்களாக மதித்து நட.
–பெண்கள் பாலியல் கொடுமைகளை நிறுத்து
-பெண்களை பாலியல் பொருளாக்காதே
 
இது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தாங்கியிருந்தனர்.
நன்றி உதயன், தினக்கதிர்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *