அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்வங்காரி மதாய் காலமானார்.

 ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன, மழைநீர்ச் சேகரிப்பு மக்களுரிமை, ஆப்பிரிக்காவின்  ஜனநாயகப் போராட்டத்திற்கு மரம் ஒரு அடையாளம் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியவர் மாதாய் ஆவார்.மாதாய் திங்கட்கிழமை மாலை நைரோபி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
நோபல் பரிசு பெற்ற வங்காரி மதாய் காலமானார். 
அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான  வன்கரி மாதாய் நீண்டகாலமாக புற்று நோயில் அவதிப்பட்டு   மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவர் நிறுவிய சுற்றுச் சூழல் நிறுவனம் ( ( Green Belt Movement )  ) அவரது மறைவைத் தெரிவித்தது.வன்கரி மாதாய் 2004ம் ஆண்டு நோபல் பரிசு வென்றார். சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறந்த சேவை ஆற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மழைநீர்ச் சேகரிப்பு மக்களுரிமை, ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பசுமை மண்டல இயக்கம் போன்ற கருத்தியல்கள் பற்றி அவர் ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், அமெரிக்காவில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரி, நார்வே பல்களைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் போன்ற பல கல்வி நிறுவனங்கள் மாத்தாய்க்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன, நோபல் பரிசு தவிர மாற்று வழங்கிச் சிறப்பித்துள்ளன, நோப்ல் பரிசு தவிர மாற்று நோபல் பரிசு சுற்றுச் சூழலுக்கான விண்ட்ஸ்டர் விருது , கோல்ட்மேன் சுற்றுச் சூழல் விருது, எடின்பரக் மேடல் விருது எனப் பற்பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *