எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து போராட விரும்புகிறேன்! – முருகன், நளினி மகள் “ஹரித்திரா”

தேனுகா பிரான்ஸ்

nalini

‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட விரும்புகிறேன்.

இந்தியா வர நான் நுழைவு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளேன். எனது அப்பாவைக் காப்பாற்றக் கோரி அங்கு பலர் போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன்’

‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட விரும்புகிறேன்.’

நளினி கைது செய்யப்பட்ட போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வேலூர் சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 20 வயதாகும் ஹரித்திரா தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது தந்தை முருகனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் போகின்றார்கள் என்ற செய்தி அறிந்து அவர் பெரும் கவலையில் உள்ளார். நான் பிறந்தது முதலே பல்வேறு சிரமத்தை எதிர்நோக்கி வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரைப் பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பெற்றோரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நான் 12 வயதாக இருந்த போதுதான் கடைசியாக அவர்களைப் பார்த்தேன். அதன் பிறகு என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

nalini

பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களுக்கான நான் ஏஙங்குகிறேன். அவர்களுடன் கூடவிருந்து வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட பறிக்கப் பார்க்கிறார்களே. இது கொஞ்சமும் நியாயமில்லை.இதை விட ஒருவருக்கு கொடுமையான விடயம் எதுவும் இல்லை. யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

எனது தந்தையை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து வருகிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *