மாயா அஞ்சலோவுடன் ஒரு உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி
maya-title நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு வலி தரக்கூடிய விடயங்கள் சிலவற்றைத் தாண்டி வந்திருப்பீர்கள். நீங்கள் 35 வயதுவரை உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சில துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதையோ இழந்திருக்கிறீர்கள்.

மாயா அஞ்சலோ 1928ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி மிசூரியில் உள்ள சென் லூயிஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கறிட் ஆன் ஜோன்சன். தனது மூன்று வயது தொடக்கம் ஏழு வயது வரை ஆர்க்கன்சாஸில் வசிக்கும் தனது பாட்டியுடன் வசிக்கிறார். எட்டாவது வயதில் தனது தாயாருடன் இருப்பதற்காக திரும்பவும் வந்த இடத்தில் தாயாரின் நண்பன் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார். மீண்டும் பாட்டியிடம் செல்கிறார். தனது 21வது வயதில் திருமணம் செய்கிறார். மூன்று வருடங்களில் திருமண உறவு முறிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் நடனம், நாடகம் போன்ற துறைகளில் தனது கவனத்தைக் குவிக்கிறார். 

 அமெரிக்காவின் மிகவும் அறியப்பட்ட சுயசரிதையாளர். 82 வயதான மாயா, ஒரு கவிஞர், ஆசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர், செயற்பாட்டாளர், வரலாற்றாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர். இவருடைய, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று நான் அறிவேன்’ என்கின்ற நூலின் மூலம் தன்னுடைய சொந்த வாழ்க்கைச் சரிதத்தை பகிரங்கமாகப் பேசிய முதலாவது ஆபிரிக்க அமெரிக்கப் பெண்ணாக அறியப்படுகிறார். இந்நூல் 1970ம் ஆண்டில் வெளிவந்தது. 

உங்களால் எவ்வாறு| குறிப்பாக பெண்களை| ஆகர்ஷிக்கவும் அவர்களுக்கான பலத்தை அளிக்கவும் என்று எப்படி அவர்களை  நெருங்க முடிந்திருக்கின்றது என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ‘என் மகளுக்குக் கடிதம்’ என்கின்ற நூலை எழுதுவதற்கு உங்களைத் தூண்டியது எது?

கிட்டத்தட்ட 20 வருடங்களாக, நான் ஓப்ராவுடன் பேசுவதற்கு விரும்பிய விடயங்களை ஒரு வரியில் அல்லது இரண்டு வரிகளில் குறித்து வைத்திருந்தேன். அடுத்த தடவை அவளைச் சந்திக்கும்பொழுது நான் அவளிடம் எதனைப் பகிர்ந்து கொள்வது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவையெல்லாவற்றையும் ‘நடப்பிலிருக்கும் வேலைகள்’ என்று குறிப்பிட்டு ஒரு பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். சென்ற வருடம் அந்தப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன். அதைச் சும்மா எடுத்துப் பார்த்தால் அதற்குள் பாடல்கள் மற்றும் கவிதைகளிற்கான குறிப்புகள் என்பனவும் இருந்தன. இன்னும் அப்படியே தொடர்ந்து பார்த்துக்கொண்டு போகும்போது , ஓ! இங்கே ஒரு கட்டுரை கிடக்கிறது. ஆ! அங்கே இன்னும் ஒரு கட்டுரை இருக்கின்றது.  இப்படியாக அந்தக் குறிப்புகள் எனக்கு ஒரு உற்சாகத்தைத் தந்தன. என்னிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கின்ற பெண்கள் சிலருக்காக, சில வார்த்தைகள் எழுதவேண்டும் என்று விரும்பினேன். (அதாவது அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்து). அவர்கள் என்னிடம் இருந்து விவேகமான ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். எதுவாயிருப்பினும் அவர்கள் எதிர்கொள்ள  நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கருதியதால்தான் இந்நூலை எழுதினேன்;.

இந்த நூலின் சாராம்சம் அல்லது இந்த நூல் எதுபற்றிப் பேசுகிறது என்று நீங்கள் சொல்வீர்கள்? வாசகர்கள் இதிலிருந்து எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

maya-tit-01ஓகே! நான் எதைக் கற்றுக்கொண்டேன் என்பதைப்பற்றிச் சொல்வதைத் தவிர்ப்பதற்கு முயற்சித்திருக்கிறேன். ஆனால் அப்படி இருந்தும் ஓரிரு இடங்களில் அது நுழைந்திருப்பதை நான் அவதானித்தேன். நாங்கள் எல்லோரும் பெருமளவில் ஒரே மாதிரியாக இருக்கிறோம். எனினும் அதேசமயம் நாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கஷ்டத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். நானும் என் வயதில் அதேமாதிரியான கஷ்டத்தை எதிர்கொண்டிருப்பேன். அதுபற்றி யாராவது உங்களிடம் கேட்டால் அதற்கான பதில் ஒரு மாதிரி யாகவும் என்னுடையது இன்னொரு விதமாகவும் இருக்கும். இதில் எந்தப் பதிலும் சரியானதோ அன்றித் தவறானதோ அல்ல. நாங்கள் இருவரும் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான துணிவுள்ளவராக இருந்திருக்கிறோம் என்பது மட்டும்தான் பிரதானமானது. அதனால்தான் நான் ஒருவர் துணிச்சலாக இருக்கவேண்டும் என்பதை உற்சாகப்படுத்துகிறேன். ஒன்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதை அல்லது அப்படியான ஒரு துணிச்சல்பற்றி இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதை உற்சாகப்படுத்துகிறேன். எதையும் மறுதலிக்காதீர்கள். எதையும் எதிர்கொள்ளுங்கள்.

 எனக்கு இரண்டு மகள்மார் இருக்கிறார்கள். இன்னும் இளம்;பிராயத்தில் இருக்கின்ற பெண்களுக்கு நீங்கள் மேலதிகமாகச் சொல்ல விரும்புவது என்ன? நீங்கள் சிறுமியாக இருக்கும்போது கண்டவற்றில் எதைச் சொல்ல விரும்புவீர்கள்?

 அதேதான். துணிச்சல். மற்றது மரியாதை. மரியாதையை விடக் குறைந்த எதையும் ஏற்றுக்கொள்ளவோ அதனை விடக் குறைந்த எதையும் கொடுக்கவோ கூடாது.

நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயை அண்மையில் பேட்டி கண்டபோது அவர் ஒருவர் தன்னைப் பற்றி அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் பற்றிச் சொன்னார். அதாவது| “சில வேளைகளில் நாங்கள் மற்றவர்களின்-எங்களைச் சூழவுள்ளவர்களின் சிந்தனையினால் பாதிக்கப் பட்டு விடுவோம். ஏனெனில் எங்களுக்கு எங்கள்மீது நம்பிக் கையில்லை.” அத்துடன்|“உங்களுக்கு உங்களை யாரென்று தெரியும்போதுதான் நீங்கள் சுதந்திரமாக இருக்கின்றீர்கள்”என்று தெரிவித்தார். இந்தக் கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை அல்லது தாங்கள் யார் என்பதை ஒருவரால் எப்படிக் கண்டடைய முடியும்?எவ்வளவோ மரபுரீதியான விடயங்களின் செல்வாக்கின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்| எப்படி நாங்கள் யாரென்பதையோ| நாங்கள் வாழுகின்ற வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கின்றோம் என்பதையோ கண்டுபிடிக்க முடியும்?

வாழ்க்கையின் பல தருணங்களில், நாங்கள் எப்படி வீழக் கூடும் என்பதையும் அதிலிருந்து எப்படி எழ முடியும் என்பதையும் நாங்கள் காணுகிறோம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கோ! நாங்கள் எத்தனையோ தோல்விகளைச் சந்திக்கக்கூடும். ஆனால் நாங்கள் தோற்கடிக்கப்படக்கூடாது. தோல்வியை எதிர்கொள்வதென்பது ஒரு நிர்ப்பந்தமாகக்கூட இருக்கலாம். அந்தச் சமயத்தில் நாங்கள் யாரென்பதை எங்களால் அறிந்து கொள்ளமுடியும். அப்போது நாங்கள் எங்களை மீட்டுப் பார்க்க முடியும். எப்படியென்றால், ஓ! எனக்கு அப்படி ஒரு விடயம் நடந்தது. நான் அதிலிருந்து மீண்டேன். முழு உலகத்தின் முன்பும் நான் அடித்து வீழ்த்தப்பட்டேன். ஆனால் நான் எழுந்து வந்தேன். நான் அதைவிட்டு ஓடவில்லை. எந்த இடத்தில் அடித்து வீழ்த்தப் பட்டேனோ அந்த இடத்திலிருந்தே எழுந்து வந்தேன். இப்படித் தான் ஒருவர் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். என்னால் எழுந்துவர முடியும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளவேண்டும். என்னை வீழ்த்தவேண்டும் என்று  மற்றவர்கள் பொறாமை கொள்ளக் கூடியளவுக்குப் போது மானளவு உயிர்ப்பு எனக்குள் இருக்கின்றது. எழுந்து நிற்பதற்கான அகம்பாவமும் நம்ப முடியாதளவு ஆத்திரமும் இருப்பதனால்தான் என்னிடம் அவ்வளவு துணிச்சல் இருக்கின்றது. இப்படித்தான் நீங்கள் யாரென்பதை உங்களால் அறிந்து கொள்ளமுடிகிறது.

‘எனது மகளுக்குக் கடிதம்’ என்கின்ற உங்களுடைய நூலின் ஒரு இடத்தில்| “உங்களுக்கு நிகழ்கின்ற எல்லாச் சம்பவங்களையும் உங்களுடைய கட்டுப்பாட்டில் நீங்கள் வைத்திருக்கமுடியாது. ஆனால் அவற்றினால் நீங்கள் தாழ்ந்து போகாமல் இருக்கக்கூடியதான முடிவை உங்களால் எடுக்க முடியும்” என்று நீங்கள் சொல்லி இருப்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.?

அதேதான். உதாரணத்திற்கு, வெளியே சோவென்று மழைபெய்து கொண்டிருக்கிறது. உங்கள் நண்பர்களை இன்று வீட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள். அவர்கள் அன்று உங்களிடம் வருவதற்கு ஒருவிதமான ஆடையை அணிந்துகொள்ள முடிவெ டுத்திருக்க முடியும். பின் மழை காரணமாக அவர்கள் வேறு விதமான ஒரு ஆடையை தெரிவு செய்யவேண்டி இருக்கலாம். எனவே அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் ஒரு உடன்பாட்டிற்குச் செல்லவேண்டி இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் நீங்கள் சோர்ந்து போகத் தேவையில்லை. இதுபோலத்தான், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கின்ற அனுப வங்கள் உங்களைத் இழிவான நிலைக்கு இட்டுச் செல்வதற்கு அனுமதிக்காதீர்கள். அப்படியான நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான ஒரே வழி, நீங்கள் பதட்டப்பட்டு குய்யோ முறையோ என்று கத்தாமல் இருப்பதுதான். நீங்கள் இழிவு படுத்தப்படக்கூடும். அதனால் நீங்கள் இழிந்துபோகாதீர்கள். இதுதான் வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளுங்கள். இதனை நான் பல தடவைகள் செய்திருக்கிறேன். இன்னும் நான் இறப்ப தற்கு முன்பு இப்படிச் செய்வதற்கான பல சந்தர்ப்பங்கள் எனக்கு வரக்கூடும். (சிரிக்கிறார்)

இன்றைக்கு உலகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளுக் கெல்லாம் மூலகாரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 maya-01ிச்சயமாக அலட்சியம்தான் காரணம். ஆனால் அதை விடவும் வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையில் காணப்படக்கூடிய இடைவெளியின் அளவுத்தன்மை. (அமெரிக்காவைக் கணக்கில் கொண்டு மட்டும் பேசுகிறார்) இந்த நிலைமை ஒரு குறுகிய காலத்தில் தீர்த்துவிடக்கூடிய ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட நோக்கிலான ஒழுங்கமைவு தேவைப்படுகின்றது. ஆனால் நாங்கள் ஒரு சரியான பாதையில்தான் சென்று கொண்டி ருக்கிறோம்.

அடிமையாக ஒருவர் இருப்பாரெனில் அவர் சாதாரணமான ஒருவரை விடவும் கீழாக நடத்தப்படுகின்றார் என்பதை நாங்கள் முதலில் நம்பவேண்டும். அடிமைத்தனத்தைப்பற்றிக் கருத்தில் கொள்ளக்கூடாது. செய்யவேண்டிய இரண்டாவது விடயம் என்னவென்றால், அவர் அடிமையாக இருக்கின்றாரென்பதை உங்கள் சுற்றாடலுக்குத் தெரியப்படுத்தவேண்டும். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். மூன்றாவதும் மிகவும் கொ¬ரமானதுமான விடயம் என்னவென் றால், அவனோ அவளோ முதல்தரமான பிரஜை அல்ல என்பதை அவரை நம்ப வைக்கவேண்டும். இந்தச் செயன்முறை ப+ரணமாக முடிந்த பின்னர், இதனை ஆரம்பித்து வைத்தவர் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பின்வருமாறு கேட்க முடியும். “மக்களே நீங்கள் ஏன் உங்களை அதிகமாக நேசிப்பதில்லை? ” இது பெண்களைப் பொறுத்தவரையில் உண்மையாக இருந்திருக் கிறது. இது புலம்பெயர்ந்தவர்களைப் பொறுத்த வரை உண்மையாக இருக்கிறது. இது ஆசியர் களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கி றது.  ஸ்பானிய மொழி பேசுபவர்களைப் பொறுத்த வரை உண்மையாக இருக்கின்றது. எங்களுக்கு இப்போது இந்த விடயம் தெரிந்திருக்கின்றது. எனவே இப்பொழுது நாங்கள் அவற்றைக் களைய வேண்டும். நாங்கள் எல்லோரும் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். இவை எங்களுக்கு வெறுமனே கற்றுத் தரப்பட்டவையல்ல. நாங்கள் அவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இவை சாதாரண விடயங்கள் அல்ல. இவற்றை இல்லாமலாக்க எங்களால் முடியும். எனவே நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிப் பதற்கும் எங்களை மற்றவரில் காண்பதற்கும், ஏனைய மனிதர்களை அங்கீகரிப்பதற்கும் முடியும். மனிதர்களிடம் ஒருவருக்கொருவர் ஒவ்வாமைகளைவிடவும் ஒற்றுமைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்பதை நாங்கள் அங்கீகரிப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உலகம் முழுவதிலும் பெண்கள் தங்களுடைய சொந்தப் பலம் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என்றும் இந்த உலகத்தின்மீது அவர்கள் செல்வாக்குச் செலுத்து வதற்கான தேவை ஒன்று இருக்கின்றது என்றும் நீங்கள் உணருகிறீர்களா?

ஓம்! நான் அப்படித்தான் நினைக்கிறேன். (அமெரிக்காவை மையப்படுத்தி பேசுகிறார்). கலிபோர்னியா தொடக்கம் நியயோர்க் வரை, மையின் தொடக்கம் புளோரிடா வரை, சியாட்டில் தொடக்கம் நிய+மெக்சிக்கோ வரை என்று எல்லா இடங்களிலும் பெண்கள் அமைப்புகள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எங்கும் பெண்கள் சுற்றுச்சூழல் மாசுபடலுக்கு எதிரான பணிகள், தனியனான பெற்றோராக இருப்பதற்குத் தங்களைத் தயார்ப் படுத்தும் பெண்கள், சிறையில் தங்கள் துணைவர்களைக் கொண் டிருக்கும் பெண்களிற்கான ஆதரவு என்று இப்படியான இன்னோ ரன்ன விடயங்களில் பெண்கள் செயற்படுகிறார்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால், எனக்கு இப்போது 80 வயதா கின்றது. 50 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறேன். அன்றைக்கு இப்படியாக எதுவுமே இருந்ததில்லை. ஒன்றுமே இருக்கவில்லை. அன்று அமெரிக்க-ஆபிரிக்கர்களின் குழுக்கள், மற்றும் வெள்ளையரின் குழுக்கள் என்று இருந்தார்கள். இவர்கள் கலாச்சாரப் பேணலிலும் மற்றும் மோஸ்தர்கள் அலங்காரங்கள் போன்ற விடயங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். பெரும்பாலும் சமூக முன்னேற்றத்தைக் கருதிச் செயற்பட்ட குழுக்கள் மிகவும் அரிதாகவே இருந்தன. அதுவும் எந்தப் பாது காப்புமற்ற பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக என்று எதுவும் இருந்ததில்லை. வடக்கு வேர்ஜினியாவில் அல்லது மேற்கு வேர்ஜினியாவில் இருந்த மலைச்சாரல்களில் நிலக்கரிச் சுரங் கங்களில் எஞ்சிக் கிடைக்கின்றவற்றை வைத்து தங்கள் வாழ்க் கையை ஓட்டினார்கள். இந்த நிலையில்தான்  ஆசியர்கள் மற்றும் லத்தீனமெரிக்க பெண்கள் ஆகியோரும் இருந்தனர். இவர்க ளுக்காக யாரும் இருக்கவில்லை. ஆனால் இன்று நான் எங்கு போனாலும் ஏதாவதொரு அமைப்பு இருக்கின்றது. இது மிகவும் மனதைத் தொடுவதாக இருக்கின்றது.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் சில இருண்ட பொழுதுகளைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அந்த நேரங்களில் அவற்றை மிகவும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு அவற்றைத் தாங்கியிருக்கிறீர்கள். இந்தத் துணிவும் தைரியமும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

எனக்கு மிகவும் அற்புதமான ஒரு பாட்டி இருந்தா. அத்துடன் எனது அம்மா மற்றும் சில நண்பிகள் இருந்தார்கள். விடுமுறை காலங்கள் நெருங்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஏனெனில் என்னுடைய அந்த நண்பிகளை நான் இழந்துவிட்டேன். எனக்கு இந்த உலகமேயாயிருந்த அவர்கள் இறந்துவிட்டார்கள். நாங்கள் அப்போது கோடைகால விடுமுறை யின்போதும் நத்தார் விடுமுறையின்போதும் சந்தித்துக் கொண் டோம். அப்போது அவர்கள் என்னுடன் இருந்தார்கள். அவர்கள் என்றென்றைக்கும் என்னுடன் இருந்திருக்கவேண்டியவர்கள் என்ற எண்ணம் வருகின்றபோது, நான் இப்போதும் அதை நினைத்து அழுகிறேன். அவர்கள் என்னுடன் இருந்தார்கள். அவர் கள் என்னுடைய வாழ்க்கையில் பாதிப்புச் செலுத்தினார்கள். என்னுடைய வாழ்க்கையை பலப்படுத்தினார்கள். ஒரு விடயத் தைச் சரியாகச் செய்யவேண்டும், கெட்டித்தனமாகச் செய்ய வேண்டும் என்று யோசிக்கும்போது என் பாட்டியின் குரல் என் காதுகளில் ஒலிக்கும். “உங்களுக்கு எது சரியென்று தெரியும். சரியானதைச் செய்யுங்கள்” என்று அவர் எப்போதும் கூறுவார்.

வாழ்க்கையில் உங்களை வழிநடத்துகின்ற அல்லது உங்களுக்கு வழிகாட்டுகின்ற ஒரு ஆத்மார்த்தமான தத்துவம் அல்லது வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு காணுகின்றீர்கள் என்பதற்;கான ஒரு தத்துவம் உங்களிடம் இருக்கின்றதா?

ஓம்! தகுதியானது எது என்று எங்கள் அனைவருக்கும் தெரியாது.  எங்களை  பிரசித்தமாக்கப்போகின்றது எது என்று எங்கள் எல்லோருக்கும் தெரியாது. கொள்கை எது என்பதும் தெரியாது. ஆனால் உண்மையில் சரியான விடயம் எது என்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது. இப்படித்தான் நான் வழிநடத்தப்படுகிறேன்.

துயரத்தில் இருப்பவர்கள்| விரக்தியில் உள்ளவர்கள்| மனத்தளர்ச்சியுடையவர்கள் இப்படியானவர்களிற்கு நம்பிக்கையளிப்பதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு வலி தரக்கூடிய விடயங்கள் சிலவற்றைத் தாண்டி வந்திருப்பீர்கள். நீங்கள் 35 வயதுவரை உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சில துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதையோ இழந்திருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் அதைத் தாண்டி வந்திருக்கிறீர்கள். எனவே குறைந்த பட்சம் அதனை யோசித்துப் பாருங்கள். நீங்களே உங்களைப் பார்த்து, “நல்லது. ஒரு நிமிடம் பொறு. என்னைப் பற்றி நான் நினைத்ததைவிட நான் தைரியமுள்ளவள்’ என்று சொல்லிக் கொள்ள உங்களால் இயலவேண்டும். எனக்கு ஜெசிக்கா என்று ஒரு நண்பி இருந்தாள். அவள் இப்போது இல்லை. 25 வருடங்களிற்கு முன்பு  நான் எனது எழுத்துகள் குறித்துத்  திருப்தியற்று அழுது வடிந்து கொண்டி ருந்தேன். அப்போது ஒரு தரம் அவள் சொன்னாள்:  “மாயா, புத்தக அடுக்கில் இருக்கும் உன்னுடைய ஒரு புத்தகத்தை எடுத்து ஓரிடத்தில் அமர்ந்து, ஒரு கிளாஸ் வைனைக் குடித்துக்கொண்டு ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து படி”. நான் அவள் சொன்ன படியே செய்தேன். 15 நிமிடங்கள் கூடக் கடக்கவில்லை. என்னால் எழுதமுடியும் என்று நினைக்க என்னால் முடிந்தது. எனவே பாருங்கள், நாங்கள் செய்தவைகள், நாங்கள் கடந்தவைகள் பற்றிய மறுதலிப்பு எங்களிடம் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் இப்படி எங்களை மீள்பார்வை செய்வது எங்களிற்கு உதவியாக இருக்கும்.

உங்களுடைய எழுத்துப்பற்றிப் பேசும்போது| நீங்கள் உங்க ளைக் கலையின் வௌ;வேறு வடிவங்களினூடாக – நடனம்| நடிப்பு, எழுத்து, கவிதை – என்று வெளிப்படுத்தி இருக்கி றீர்கள். எங்கள் சமூகத்தில் ஒரு ஊடகமாகவும்| மனித வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகவும் கலையின் பாத்திரம் அல்லது அதன் விழுமியம் என்ன?

ஓகே! முதலில் நாங்கள் வெறும் நிணமும் சதையும் கொண்ட வர்களல்ல என்பதை அது நினைவூட்டுகிறது. எங்களுடைய ஏக்கங்கள், தாகங்கள் என்பன வெறும் நிணமும் சதையுமாக ஒருபுறத்தே ஒதுக்கி வைக்கப்படப்போவனல்ல. உண்மையில் எங்களுக்கு ஒரு ஆன்மா இருக்கின்றது. ஒருவர் மத நம்பிக்கை யுள்ளவராக இருந்தால், அது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் அப்படி நீங்கள் மதநம்பிக்கை அற்றவராக இருப்பீர்களாயின், வானத்து விண்மீன்களை ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் பார்த்து உணருகின்ற ஒரு தன்மை உங்களுக்குள் இருக்கும். பாயும் நதியும், மழைச் சாரலும் உங்களை அள்ளிக் கொண்டு செல்கின்ற ஒரு உணர்வை நீங்கள் கொண்டிருப்பீர்கள். அற்புதமான பாடல்களில், அற்புதமான சங்கீதங்களில் உங்களை இழந்து போகின்ற, வியப்புக் கொள்கின்ற ஒரு உணர்வு உங்களிடம் இருக்கும். ஆமாம்! இப்படியான உணர்வு களால் என் ஆன்மா இப்போது கழுவப்பட்டிருக்கின்றது. நான் இப்போது முன்னரை விடவும் நன்றாக இருப்பதாக உணருகிறேன். நல்ல கவிதைகளைக் கேளுங்கள். நாங்கள் வெறும் உண்ப தற்கும் உடுப்பதற்கும் மட்டுமே வாழப் பிறந்தவர்கள் என்ற எண்ணத்தை அவைகள் தூர விலக்கும்.

ஒரு எழுத்தாளராக ஒரு கவிஞராக அல்லது ஒரு கலைஞராக மேலே வர விரும்பும் ஒருவருக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்லுவீர்கள்?

உங்களுக்கு விருப்பமான ஒரு எழுத்தைத் தெரிவுசெய்தபின், ஒரு அறைக்குள்ளே சென்று கதவைப் ப+ட்டிக் கொள்ளுங்கள். உரத்த குரலில் படியுங்கள். நடனத்தை விரும்புகின்ற எவரும் ஒரு நடனத்தைப் பார்க்க முடியும் அல்லது பாடகர் ஒரு இசையைக் கேட்கமுடியும் அல்லது ஓவியர் ஒரு ஓவியத்தைப் பார்க்க முடியும் – ஆனால் பேச முடியாதவர்கள் அல்லது கேட்க முடியாதவர்கள் தவிர்ந்த அனைவரும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆதலால், எழுத்தாளர்கள் இந்த மிகப் பொதுவான விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளர் சில பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், மற்றும் வினையுரிச் சொற்களை எடுத்து அவற்றை ஒன்று சேர்த்து உருட்டி அவற்றை வீசும்போது அவற்றில் ஒரு துள்ளல் இருக்கவேண்டும்.

உங்களுடைய சொந்த பலத்துக்கும் எழுச்சிக்கும் தூண்டுதலாக இருந்த ஊற்றுக்கண் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மதநம்பிக்கையுள்ளவள். எனக்குப் பொறுப்புகள் இருப்பதாக நான் உணருகிறேன். என்னிடம் கண்ணியம் என்பதே இல்லை. எனக்கு அது குறித்த அச்சம்கூட உண்டு – இது ஒரு கற்றுக்கொண்ட  போலி நடத்தை என்பதாக. இக்கருத்தானது என்மேல் ஒரு ஒட்டோவியம் போல் ப+சிக்கொண்டு விட்டது. நான் இப்போது அடக்கமாக இருப்பதற்குப் பிரார்த்தனை செய்கிறேன். ஏனெனில் அது உள்ளிருந்து வருவது.  தனக்கு முன்பாக வேறும் பலர் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஒருவருக்கு அடக்கம் என்பது நினைவுபடுத்துகிறது.   ஏற்கனவே இப்படி நான் இருப்பதற் காக யாரோ விலைகொடுத்திருக்கிறார்கள். எனவே நான் என்ன செய்யவேண்டும் என்றால் இனிமேல் வரப்போகின்ற ஒருவருக்கு அதனைக் கொடுப்பதற்கு என்னைத் தயார்ப்படுத்த வேண்டும். ஆகவே இங்கிருப்பவர்களில் எவருக்கு என்னுடைய தேவை இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டிருப்பது, அதுவே எனது பலம். எனது எழுச்சி.

 நன்றி- உயிர்நிழல் இதழ் – 33 (ஜனவரி 2011)

 

 

0 Comments on “மாயா அஞ்சலோவுடன் ஒரு உரையாடல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *