அவளும் அம்மா வேடமும்

புதியமாதவி மும்பை

012_story-puthiya-2 ஆஸ்கர் திரைப்பட விருது பெற்ற நடிகை சென்னை வருகிறார் என்றவுடன் சன், மூன், விண் எல்லாம் அதையே திருப்பி திருப்பி பல்வேறு வார்த்தைகளில் செய்தியாக காட்டி காட்டி எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் சூப்பர் டூப்பர் கேப்டன் தளபதி இத்தியாதிகளுடன் பலகோடிக்கணக்கான முதலீட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள்

ஆஸ்கர் திரைப்பட விருது பெற்ற நடிகை சென்னை வருகிறார் என்றவுடன் சன், மூன், விண் எல்லாம் அதையே திருப்பி திருப்பி பல்வேறு வார்த்தைகளில் செய்தியாக காட்டி காட்டி எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் சூப்பர் டூப்பர் கேப்டன் தளபதி இத்தியாதிகளுடன் பலகோடிக்கணக்கான முதலீட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் என்று ஒரு கூட்டமே அந்த நடிகையை எப்படியும் தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டிருந்தன.

இத்திரைப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் பற்றியும் அவரவர் ஊகங்களை   எழுதி எழுதி அதையும் அவரவர் தொலைக் காட்சிகளில் தவறாமல் வாசிக்கும்படி 10 நிமிடத்துக்கு ஒரு முறை அலறிக் கொண்டிருந்தன.

லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆஸ்கார் விருது பெற்ற நடிகை கீதாஞ்சலிக்கும் தமிழ் திரையுலகத்திற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி ஓபாமா வாழ்க்கை குறிப்பு போல குறிப்பு எழுதியிருந்தது. அந்தச் செய்தியை வாசித்த தமிழ் அன்பர்கள் அப்படியே அதை டஈஊ கோப்பாக மாற்றி மின்னஞ்சல் செய்ய தமிழ் மின்னஞ்சல் வட்டத்தில் அந்தச் செய்தி ஒரு பக்கம் பல்வேறு ஊகங்களைத் தந்தது.
இத்தனை பரபரப்பான செய்திகளையும் தந்த நடிகை கீதாஞ்சலி சென்னை வராமல் திருவனந்தபுரம் வந்து விட்டு அங்கிருந்து இயற்கை மூலிகை மருத்துவ மனைக்கு சென்று விட்டு அமெரிக்கா திரும்பி போய்விட்டதாக நம்பகமான தகவலை மலையாள பத்திரிகைகள் வெளியிட்டன. அவரைப் பற்றி செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் வாழும் இசைப்புயல் ஒன்றுக்குத்தான் தெரியும் என்றும் ஆனால் அங்கிருந்து அவ்வளவு எளிதில் ரகசியங்கள் வெளிவராது என்றும் திரையுலக பிரபலங்கள் பேசிக் கொண்டார்கள்.
*
அம்மா எப்படி இருக்கா டாடி..’ மறுமுனையில் அவர் எதோ சொன்னார்.
ஜானகி அழுதக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“மீடியாவுக்கு எதாவது செய்தி தெரியுமா டாடி”
“தெரியாது ஜாணு. ஏன் சொல்லனும்..”
“என்னைப் பத்தி அம்மா ஏதாவது கேட்டாளா டாடி..”
எதுவுமே கேட்கவில்லை என்று சொன்னாள் மகளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
“ம்ம்ம்.. எப்போதாவது கேட்கிறா ஜானு.. கோர்வையா நினைவில்லே.. திடீர்னு ஜானு எங்கேனு கேட்கிறா..”
ஜானு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அவரும் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

நடிகை கீதாஞ்சலி மிகவும் பிரபலமான ஒரு திரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழாவுக்கு மும்பை வந்திருந்தாள். அவளைச் சுற்றி இந்தி திரையுலக பிரபலங்கள். அவள் அதிகமாக அலங்காரம் செய்து கொள்ள வில்லை. ஊஹக்ஷ ண்ய்க்ண்ஹ காட்டன் சுடிதார். அதற்கு மேட்சிங்காக கழுத்தை ஒட்டி சிவப்பு பாசியில் கோத்த மணிமாலை நீளக்கை வைத்து தைத்திருந்த உடையில் வாட்ச் போட்டிருந்தளா வளையல் அணிந்திருந்தாளா என்பது தெரியவில்லை. உதட்டுச் சாயம் கூடத் தூக்கலாக இல்லை. துப்பட்டா அவள் மார்பின் மீது காற்றைப் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது. கூந்தலுக்கு என்று சிறப்பாக எந்த அலங்காரமும் செய்யவில்லை. குளித்துவிட்டு தலைகாய கூந்தலை அப்படியே விட்டிருப்பது போல இருந்தது. அது என்னவோ அவள் உடைக்கும் முகத்துக்கும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்தது.
மணிக்கணக்கில் கூந்தல் அலங்காரமும் மேக்கப்பும் போட்டுக் கொண்டு வந்திருப்பவர்கள் நடுவில் அவள் சாதாரணமே ஓர் அசாதரணமான அபரிதமான கவர்ச்சியைக் கொட்டிக் கொண்டிருந்தது.
“சினிமாவில் நடிப்பது என் தொழிலல்ல. இட்ஸ் மை ஹாபி’ என்று அவள் அன்றைய விழாவில் சொன்னதையே இந்தியாவின் அனைத்து மொழி தொலைக்காட்சிகளும் காட்டிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து ஜானுவும் ஜானுவின் அப்பாவும் பெருமூச்சு விட்டார்கள்.

“அப்பா டாக்டர் என்னதான் சொல்றார்பா. நீயும் அங்கே போயிட்டு அப்படியே இருக்கே. பேசாம அம்மாவை இங்கேயே அழைச்சிட்டு வந்துடுப்பா..”
“சரிம்மா.. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு தேறட்டும்.. 25, 26 மணிநேரப் பயணத்தை அவள் உடம்பு தாங்குமானு தெரியலை.. டாக்டர் இப்போ அலைய வேண்டாம்னு சொல்றாரு.. அதை மீறி எப்படி அழைச்சிட்டு வரமுடியும் சொல்லு..”
“அண்ணன் வந்து பார்த்தானா டாடி..”
“இல்லடா.. அவனுக்கு கோபம் தீரலை.
பெத்தப் பிள்ளைங்களை வீட்டை விட்டு விரட்டினவ என்னைப் பொறுத்த வரையில் அன்றைக்கே செத்துப்போயிட்டா டாடினு” சொல்றான். எப்படியாவது அவன் மட்டும் அம்மாவை நேரில் வந்து பார்த்தான்னு வச்சிக்கோ அவ மேலே இருக்கிற கோபமெல்லாம் போயிடும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ஜானு.. நீ அடிக்கடி அவனுக்கு போன் பண்ணு.. “

ப்படியோ கீதாஞ்சலியால் இம்முறை இந்தி திரையுலக விழாவுக்குப் பின் மீடியாவிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
பெங்காலியும் இந்தியும் கன்னடமும் தமிழும் கலப்படமில்லாமல் சரளமாக பேசும் அவளைக் கண்டு இந்திய சினிமா உலகத்தின் நாயகிகள் மட்டுமல்ல கதாநாயகர்களும் கொஞ்சம் பயப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிலும் சத்தியஜித் ரே படங்களை விட ஹாலிவுட் பற்றி எதுவும் அறியாத ஹாலிவுட் படங்களின் எவ்விதமான பாதிப்புகளும் இல்லாத ஒரே இந்திய சினிமா டைரக்டர் ரித்விக் கடக் படங்களைத் தான் ரொம்பவும் விரும்பி ரசித்து பார்ப்பதாக பதில் சொன்னதிலிருந்து சினிமா இயக்குநர் திலகங்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. இந்தப் பொண்ணு நாம நினைக்கிறமாதிரியான நடிகை என்றவெளிச்சத்தின் நிழலுக்குள் அடங்கிவிடும் பெண்ணாக தெரியவில்லை. என்பதை மட்டும் புரிந்து கொண்டார்கள்.
நீங்கள் வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டீர்களா?
எல்லா கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கடைசியாக வந்த கேள்விக்கு மட்டும் அவள் பதில் சொன்னாள்.
“எனக்கு அப்பா வயதிலிருக்கும் நடிகர்களுடன் டூயட் பாடி நடிக்க மாட்டேன்..” என்றாள்.
அப்படியானால் பல பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள் என்றார்கள் நிருபர்கள்.
“பல பிரபலங்கள் என்னுடன் டூயுட் பாடும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்’ என்று சொல்லுங்கள்… ‘ அவள் சொன்னவுடன் அந்தச் சந்திப்பில் சிரிப்பலைகள் மோதியது.
மீண்டும் தன் பழைய கேள்விக்கு வந்தார் வயதான நிருபர்.
“நடிப்பு என்பதை நடிப்பாக மட்டும் தான் அணுக வேண்டும். நீங்கள் நடிப்பையும் நிஜத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதாக நினைக்கிறேன்.. ‘ என்றார்.
“நான் குழப்பமடையவில்லை ரொம்பவும் தெளிவாகத் தான் இருக்கிறேன்.
என்னுடைய கேள்வி எல்லாம் இந்த நடிப்பு நிஜம் இத்தியாதி பார்மூலாக்கள் நடிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்பது தான்!
நிஜமும் நடிப்பும் வேறு வேறு என்றால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் ஏன் இதெல்லாம் சாத்தியமாகவில்லை.
இன்றைக்கு இருக்கும் எந்த இளம் நடிகைகளுடனும் அழகிலும் உடல் பராமரிப்பிலும் நான் சொன்ன நடிகைகள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை..’ அவள் சொன்னவுடன் அங்கே அமைதி நிலவியது.
வந்திருந்த நிருபர்களில் ஒருவர்..

“பெண்கள் பக்கமிருக்கும் இந்த உண்மையைப் பேசுவதற்குப் பெயர்தான் பெண்ணியம் என்றால்.. நீங்கள் என்னை அப்படியே கூப்பிடலாம். ஒரு பிரச்னையும் இல்லை”

அடுத்த ஒரு மணிநேரத்தில் தொலைக் காட்சிகள் கீதாஞ்சலி சொன்னதையே திருப்பி திருப்பி போட்டுக்காட்டின. அதிலும் சில டிவிக்காரர்கள் சில வயதான பிரபல நடிகைகளிடம் கீதாஞ்சலி சொன்னதைப் பற்றி கருத்து கேட்டார்கள்.
மீடியாக்காரர்களுக்கு இந்த விசயமே நல்ல தீனியாக இருந்தது. குறைந்தது இதை வைத்து ஒரு வாரம் என்ன ஒரு மாசம் வரை ஓட்டிவிடலாம் என்று தீர்மானித்தார்கள்.
பெண்ணியவாதிகள், எழுத்தாளர்கள் என்று எல்லோருக்கும் தீனி கிடைத்தது.

ஜானு ஒரு வழியாக தன் அண்ணனைச் சரி செய்து விட்டாள். அவனும் அம்மாவைப் பார்க்கப்போனான். அம்மா அப்போது புதுப்பெண் போல அலங்காரம் செய்திருந்தாள்.இவன் வந்ததையோ பக்கத்தில் இருந்ததையோ அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவள் பக்கத்தில் இருந்த பெரிய டி.வி. திரையில் அந்தக் காலத்தில் அவன் அம்மா நடித்த திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
சுருட்டைமுடி., கரிய திராட்சை கண்கள், அளவான நெளிவு சுழிவுகளுடன் இருக்கும் வாளிப்பான உடல், கழுத்தில் மின்னும் அட்டியல், காற்றில் பறக்கும் புடவை முந்தாணி அம்மா கதாநாயகனுடன் மரத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு அழுகை வந்தது.
அப்பாவின் தோள்களில் சாய்ந்து அழுதான்.
அப்பா அவன் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

அவள் தன் நிகழ்காலத்தை இழந்து விட்டாள். அவள் கடந்த காலத்தில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்” என்றார்.
“ஏம்பா அம்மாவுக்கு மட்டும் இப்படி ஆயிடுச்சி..”
அவள் சினிமாவை ரொம்ப நேசிச்சாப்பா.. நடிக்காமல் சும்மா வீட்டில் இருக்க முடியாது என்ற நிலை வந்ததால் தான் நான் மீண்டும் அவளை சினிமாவுக்கு நடிக்க அனுப்பினேன். இதற்குள் அவள் இடத்திற்கு நிறைய புது முகங்கள் வந்து விட்டார்கள்.
இயக்குநர்கள் அவளை அம்மா வேடங்களில் நடிக்க வைத்தார்கள். அவள் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு அம்மாவாகவும் அவள் நடித்தாள்.. அவள் சந்தோஷமாகத் தான் நடித்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நானும் நினைச்சேன். ஆனால் அம்மாவாக நடித்த ஒவ்வொரு நாளும் அவளுக்கு அவள் மீதே வெறுப்பு ஏற்பட்டிருக்கு.

நம்மை விட்டு விலகின பிறகு ப்ளாஸ்டிக் சர்ஜரி அது இதுனு செய்து உடம்பை வருத்தி இருக்கா.. கையிலிருந்த காசை எல்லாம் போட்டு சினிமா எடுக்கிறேன்னு எடுத்தா.. அதிலும் கதாநாயகனுக்கு டபுள் ரோல். இவள் அப்பா வேடத்தில் வரும் ரோலுக்கு ஜோடி. மகன் வேடத்தில் வருபவனுக்கு ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தினாள்.. படம் வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் போயிடுச்சி..

சொல்லி விட்டு அழும் அப்பாவைப் பார்த்து அவனுக்குப் பாவமாக இருந்தது.

அவர்கள் எழுதியிருந்தபடி பார்த்தால் கதையில் நடிகை கீதாஞ்சலி இரண்டு சீனில் வந்து விட்டு இறந்து விடுவாள். அதன் பின் அவள் மகள் வருவாள்.
மகளாக வருவதும் கீதாஞ்சலி தான். மகளுக்கு போன பிறவி ஞாபகம் வந்துவிடும்.
அறுபது வயதிலிருக்கும் ஒரு இயக்குநரை அவள் விரட்டி விரட்டி காதலிப்பதும் டூயட் பாடுவதும் தான் கதை. அவள் காதலை அறுபது வயதுக்காரர் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தான் கதையின் முடிச்சு என்று நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்திகள் மிதப்பதாக பத்திரிகைகள் கிகிசுத்தன.

வடக்கு வாசலில் வெளிவந்ததது இச்சிறுகதை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *