பாவெல் சக்தி

ம்….உன் ஆடைகளை அவுத்துப் போட்டு கீழே படு…” ஆணையிட்டான் அந்த Lo-1 அதற்கு நான் மறுக்கவே, “ஒழுங்கு மரியாதையாய் தீயே அவுத்து போட்டாலாச்சு. இல்லையானால் பலவந்தமாக நாங்கள் உருவியெடுத்துடுவோம் ஜாக்கிரதை’ அதட்டினான் அவன்.அந்த பலகை மீது படுத்தேன். உடனே, Lo – இன்னொருவனின் ஒத்தாசையுடன் என் கைகளையும் கால்களையும் தோல்வார் பட்டைகளினால் அந்த மரப்பலகையோடு சேர்த்துக் கட்டினான். பிணைக்கப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்தமேனிக்கு Lo-வை பார்த்தேன். அவன் அப்பலகையின் இடது மற்றும் வலது என பக்கத்திற்கு ஒரு கால் வீதம் கால்களை அகட்டி வைத்துக் கொண்டு இடுப்பில் கைகளை வைத்தபடி என் மார்புக்கு நேராக நின்றிருந்தான்.என்ன… நான் சொன்னதை பத்தி யோசிச்சாயா?” . என் மீது கேள்வியை வீசினான் Cha-,“இல்லை. நான் என் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை”உடனே பாராஸ் சிப்பாய்கள் நான்கு பேர் என்னை அந்த பலகையோடு அலாக்காகத் தூக்கிக் கொண்டு, சமையலறையை பார்த்த திசையில் இருந்த அந்த அடுத்த அறைக்குப் போனார்கள்.எப்போதுமே முகத்தில் புன்னகையை மாற்றாத Ja- என் கண் முன்னாலேயே எலக்ட்ராடுகளின் (மின்முனைகள்) ஓரங்களில் கிளிப்களை மாட்டி தொங்க விட்டான். சின்னதாக, பளபளப்புடன் சற்று நீண்டு முள் முள்ளான பற்களுடன் காணப்பட்ட அந்த ஸ்டீல் கிளிப்களை தொலைபேசி பொறியாளர்கள் ‘முதலைக் கிளிப்கள் (Crocodile Clips) என்றழைப்பது வழக்கம்.

அக்கிளிப்களில் ஒன்றை எடுத்து என் வலது காது மடலிலும் மற்றொன்றை எடுத்து அதே வலது பக்கத்தில் கை விரல் ஒன்றிலும் பொருத்தி விட்டான்.திடுதிப்பென்று, என் முழு உடம்புமே அந்த கட்டுண்ட நிலையிலும், ஒரு தூக்கு தூக்கிப் போட்டது. என் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு சத்தம் போட்டு அலறினேன். என் உடம்பில் முதலாவது மின்சாரத்தைப் பாய்ச்சியிருந்தான் Cha-. அடுத்ததாக, அந்த மின்மின்னல் என் காது பக்கமாகத் தாக்கிட, என் இருதயமானது மார்பகப்பத்தில் தலைதெறிக்கும் வேகத்தில் ஓடுவதாக உணர்ந்தேன். போராடினேன்; அலறித் துடித்தேன்; பிணைத்திருக்கும் தோல் வார்கள் என் சதைகளைக் கிழித்து இரணமாக்கும் வரையிலும் நான் என் உடம்பை முறுக்கி விறைத்தேன். Cha-, கையில் மேக்னட்டோவை வைத்துக் கொண்டு என் மீதான மின்சாரத் தாக்குதல்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்கிக் கொண்டிருந்தான். நடுவில் கொஞ்சமும் நிறுத்தாமல் அடுத்தடுத்து மின்சார அதிர்ச்சிகளை எனக்கு கொடுத்தபடியே, “எங்கே ஒளிந்திருந்தாய், சொல்லு?” என்று ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப இராகம் மாறாமல் பாடிக் கொண்டிருந்தான் அவன்.இந்த சித்ரவதைகளின் போது இடையில் கிடைத்த கொஞ்சம் சந்தர்ப்பத்தில் அவனிடம், “நீங்க தப்பு செய்யறீங்க. இதுக்கெல்லாம் பின்னாளிலே வருத்தப்படப் போறீங்க” என்று அந்த நரக வேதனையிலும் நான் சொல்ல, கோபமடைந்த Cha- தன் கையிலிருந்த மேக்னட்டோவின் விசை வேகத்தை அதன் முழு வீச்சுக்குத் திருப்பி இம்சையை அதிகப்படுத்தினான். “ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லிக் கிட்டிருக்கே. இரு… இரு… உனக்கொரு பாடத்தைச் சொல்லித் தரேன்” என்றான். என் கதறலோ நிற்காமல் தொடர, உடனே அவன் Ja-வை பார்த்து, “அட… கடவுளே, இவன் ரொம்ப சுத்தம் போடறானே. எதையாவது வெச்சி இவன் வாயை அடை!” என உத்தரவிட்டான்.

ja- என் சட்டையை எடுத்து அதை பந்து போல சுருட்டி என் வாய்க்குள் பலவந்தமாகத் திணித்து முடித்ததும், சித்ரவதை பழையபடி தொடர்ந்தது. என் வாயில் அடைக்கப்பட்டிருந்த சட்டையை பற்களால் கவ்வி என்னால் முடிந்தளவுக்கு கடித்துக் கொண்டதையடுத்து ஓரளவுக்காவது நோவு தணிந்ததாக உணர்ந்தேன்.திடீரென்று, கொடூர விலங்கொன்று என் உடம்பை நார் நாராகக் கிழித்துப் போட்டுவதைப் போல் உணர்ந்தேன். எனக்கு மேலே உட்கார்ந்திருந்த அந்த Ja. அப்போதும் அதே புன்முறுவலுடன் கிளிப் ஒன்றை என் ஆணுறுப்போடு இணைத்தான். என் உடம்பு முழுவதும் பாய்ந்த மின்னதிர்ச்சியின் வீரியமும் வேகமும் எந்தளவுக்கு இருந்ததென்றால், என்னை பலகையோடு இறுக்கிப் பிணைத்து வைத்திருந்த தோல் வார்களில் கட்டுகளே தளர்வைக் கண்டு விடுமளவுக்கு மிக வலிமையாக இருந்தது. இதையடுத்து, அவர்கள் சித்ரவதைகனை சற்று நிறுத்தி விட்டு கட்டுத் தளர்ந்து போன அத்தோற்பட்டைகளை மீண்டும் பழையபடியே இறுக கட்டி விட்ட பிறகு ‘வேலையை’ தொடர்ந்தனர்.சில மணி நேரம் கழித்து Ja-விடம் இருந்து ‘பொறுப்பை” வாங்கிக் கொண்ட லெப்டினன்ட், என் உடம்பில் இறுக்கியிருந்த கிளிப்களில் ஒன்றில் இருந்து ஒயரை உருவி எடுத்து அதனை என் மார்போடு சேர்த்துக் கட்டினான். அதுவரை இருந்திடாத வீரியத்துடன் பாய்ந்த மின்சாரம் என் நாடி நரம்புகளைத் தாக்க, வலிமையான அந்த வீச்சைத் தாங்க முடியாமல் என் முழு உடம்புமே ஒரு குலுங்கு குலுங்கியது. இந்த சித்ரவதை ‘அமர்வு’, எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியாதபடிக்கு நீண்டுக் கொண்டே போனது. மின்சாரத்தை பாய்ச்சுவதும்; பாய்ச்சப்படும் மின்னோட்டத்தின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்வதற்காக என் மீது குளிர்ந்த நீரையும் கொட்டுவது மாகவும் இருந்தனர். இவ்விரு வதைகளுக்கு இடையில் ஒவ்வொரு முறையும் கடும் குளிரால் நடுக்கம் வேறு எனக்கு.என்னை சுற்றி சரக்குப் பெட்டிகளின் மேல் உட்கார்ந்திருந்து Cha-வும் அவன் நண்பர்களும் பீர் பாட்டில்களை காலி செய்துக் கொண்டிருந்தனர். நானோ என் வாயில் திணிக்கப்பட்டிருக்கும் துணிப்பந்தைக் கடித்துக் கொண்டுக் கிடந்தேன்,

என் உடம்பையே திருகிப் போட்டிருக்கும் தசைநார் பிடிப்பின் வலியை இப்படியாவது கொஞ்சம் தணிக்க பார்க்கலாமே என்று! ஆனால் அது பயனளிப்பதாக இல்லை.அப்படியானா… இவனை என்ன செய்யலாம்?” என்று இன்னொருவன் கேட்க, “பேசாம… வறுத்துட்டாப் போச்சு” என ஒருவன் சொன்ன பதில் அங்கு நிலவிய பலத்த சிரிப்புகளுக்கு மத்தியில் என் காதில் விழுந்தது.”அட… நல்லாயிருக்கே. நானும் அப்படியான ஒரு வறுத்தெடுப்பை இதுவரைக்கும் பார்த்ததில்லை… என்றான் Cha-, புதிய ஒரு அனுபவத்தை பெறத் துடிக்கும் ஒருவனின் தொனியில்.என்னை அப்படியே பொட்டலமாக உயரே தூக்கி நீர்த் தொட்டிக்கு மேலே குறுக்காக போடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டனர். என் கை விரல்கள் மட்டும் தரையை தொட்டபடி இருந்தன. தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த என்னை சில நொடிகள் வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்த பின்னர் அச்சிப்பாய்கள், கட்டித் தொங்க விட்ட மணல் மூட்டையை தள்ளி விளையாடுவதைப் போல், என்னை அவர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி ஊஞ்சலாட்டம் ஆடினர். Lo சற்று குனிந்து என் முகத்திற்கு அருகில் காகிதத்தைச் சுருட்டி அதன் முனையில் தீவைப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவன் நிமிர்ந்து நின்ற அடுத்த வினாடி என் ஆணுறுப்பின் மீதும், கால்கள் மேலேயும் நெருப்பின் சூடு படுவதையும் தீப்பற்றியதைப் போல் அவ்வுறுப்புகளின் ரோமங்கள் புசுபுசுவென பொசுங்குவதையும் உணர்ந்தேன். இந்த மூர்க்கமான தாக்குதலை தாங்காமல் உடம்பே ஒரு வெட்டு வெட்டி உடம்பே விறைத்து போய் அப்படியே Lo- மீது போய் இடித்தது. மறுபடியும் அவன், ஒன்று…இரண்டு என்று அடுத்தடுத்து எனக்கு சூடு போட்டுக் கொண்டேயிருந்தான். பிறகு என் மார்புக் காம்புகளையும் பொசுக்க ஆரம்பித்தான்.அவர்கள் நான் அணிந்திருந்த பேன்ட்டையும், பின்னர் ஜட்டியையும் உருவி என்னை முழு நிர்வாணமாக்கினர். என் ஆணுறுப்பின் விரைப்பையின் இரு பக்கங்களிலும் எலக்ட்ராடுகளை இணைத்தனர். பின்னர் மேக்னட்டோவின் குமிழை திருகினர். இதற்கு முந்தைய நாள் இவர்கள் 2-வது ‘அமர்வின்’ போது பயன்படுத்தியிருந்த கருவியை விடவும் இந்த மேக்னட்டோ சற்று பெரியதாகவே இருந்தது.

பதிப்பகம்: விடியல்விலை: 140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *