மஹா -ஷாலினி ஸ்ரீராஜேந்-

“மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு புகைப்புடத்துடன் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சற்றே அதிர்ச்சியுடன் தொலைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா அவள் மனம் எங்கும் பதில் தெரியாத பல கேள்வி சூழ்ந்து நிற்க கலங்கிய கண்களுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவளது ஆறு வயது மகள்  பவித்திராவை பார்த்தபடி நின்றாள்.வாழ்க்கையில் சாதித்து விட்டேன் என்ற திருப்தியில் நகர்ந்து கொண்டிருந்த நாட்கள்   இன்னும் முழுமையடைய வில்லை என்ற உண்மையை அவளுக்கு உணர்த்தும் விதமாக அந்த குறுஞ்செய்தி அவளுக்கு எதையோ உணர்த்திக் கொண்டிருந்தது.

வாழ்க்கையில பல போராட்டங்களையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தனிமையில் பாதையில் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்கிறாள் மஹா அவளது கடந்தகால அனுபவங்களை அன்று முதல் இன்று வரை அவளை மனதாரா காயப்படுத்தி சத்தமின்றி மெல்ல மெல்ல கொலை செய்து கொண்டிருந்தது.மஹா பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் என்னும் இடத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தாள் அவளது தந்தை மருது அந்த ஊரிலே விவசாயம் செய்து வருகிறார் மற்றும் அவளது தாயார் நவராணி மற்றும் அவளது அண்ணன் சந்திரன் தம்பி சுரேஷ் இதுதான்அவளது குடும்பம்.

மஹா பத்தாவது வரைதான் படித்திருந்தாள் அவள் அந்த ஊரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறாள் அவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் விதி அவளது விருப்பத்திற்கு மாறாக அவள் வாழ்க்கையை தினம் தினம் புரட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தது. மஹாவிற்கு இருபத்திரெண்டு வயது நிரம்பிய போது குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி அவளது தூரத்து உறவினர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்து வைத்தனர் அவளது பெற்றோர் அவளது கணவன் பெயர் பரனி அவன் அவளை விட பத்துவயது பெரியவன்.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சீக்கிரமே மகளை கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் அப்படித்தான் மஹாவின் பெற்றொரும் அவளுக்கு திருமணம் என்று நடந்தால் போதும் என்ற பெயரில் பரனி பற்றி எதுவுமே விசாரிக்காமல் தூரத்து உறவினர் என்ற வகையில் தங்களால் முடிந்த படி தன் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீதனங்களைக் கொடுத்து அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த வாழ்க்கையை மஹாவிற்கு ஏற்றதாக அவள் சந்தோஷமாக வாழ்வாழ என்று எதையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை அதுமட்டுமின்றி இந்த திருமண வாழ்க்கையில் அவளுக்கு விருப்பமா என்று அவளது விருப்பத்தை யாருமே கேட்டு அறியவில்லை.

மஹா தன் திருமணம் பற்றியும் எதிர்கால வாழ்க்கை பற்றியும் பல கனவுகளைக் கொண்டிருந்தாள் அவளுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் தன்னால் தன் குடும்பத்தினர் சந்தோஷப்பட வேண்டும் தன் கணவன் மற்றும் பிள்ளைகள் எல்லாம் பெருமைப் படக்கூடிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

ஆனாலும் அவளது கனவுகளைச் சிதைக்கும் வகையில் அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவளது குடும்பத்தினர் திருமண ஏற்பாட்டைத் தொடங்கி விட்டனர் இந்த நிலையில் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறி அவளது பெற்றோரை ஏமாற்ற மனமின்றி பரனியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டாள்.

அவளது திருமண வரவேற்பும் திருமணமும் அந்த ஊரிலுள்ள அவர்களது குலதெய்வம் முன்னிலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது திருமணச் சடங்குகள் மறுவீட்டு அழைப்பு என அவளது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து.முதல் ரெண்டு மாதம் ஏதோ விருப்பமின்றி வேண்டாம் வெறுப்பாக தொடங்கிய அவளது நாட்கள் மெல்ல மெல்ல பரனியின் பக்கமாக செல்லத் தொடங்கியது அதற்கு ஏற்றால் போல பரனியும் அவளை அன்புடன் பார்த்து வந்தான் அவளை அறியாமலே அவன் மேல் காதல் கொண்டாள் அதன் பிறகு அவளது திருமண வாழ்க்கை சந்தோஷமாக நகரத் தொடங்கியது.

பரனி அவள் மேல் உயிரையே வைத்திருந்தான் அவளை எந்த வகையிலும் கண்கலங்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் அதுமட்டுமின்றி அவனது உறவுகளும் மஹாவின் மேல் அன்புடன் இருந்தார்கள்.சரி செய்ய பரனி பற்றி இதில் சொல்லியே ஆகனும் பரனி ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தான் அவனது குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம் தான் அவனது தாயார் மாரியம்மாள் மற்றும் அவனது சகோதரி வள்ளி இதுதான் அவனது குடும்பம்.

அவனது தங்கை வள்ளி திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கிறாள் அவளது கணவனும் அவனின் பெற்றோரும் எப்போதும் பணத்தாசை பிடித்தவர்கள் எப்போதும் அவளை அடித்து துன்புறுத்தி அவளது வீட்டில் இருந்த பணம் கேட்டு நச்சரிப்பார்கள் இதனாலேயே பரனி இரவு பகலாக தன் சகோதரியை சந்தோஷமாக வாழ வைக்க தன்னை வருத்தி வேலை பார்த்து வந்தான்.அவனுக்கு உதவியாக “நானும் மீண்டும் வேலைக்குப் போக அனுமதி தாருங்கள்” என்று எத்தனையோ தடவை மஹா கேட்டும் “நீ சம்பாதிக்க போவதில் எனக்கு விருப்பம் இல்லை மஹா ஆனால் எனக்கு ஏதாவது ஆனால் நீ என் குடும்பத்தைப் பார்ப்பாய் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லி அவளை அன்போடு அனைத்துக் கொள்வான் பரனி.

இப்படியே அவர்களது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் மஹா கர்ப்பமானாள் அது அவர்களது வாழ்க்கையில் வசந்தத்தை அள்ளி வீசியது. பரனி மஹாவிற்கு ஒரு தந்தையும் தாயுமாக மாறி அவளை அன்புடன் பார்த்துக் கொண்டான் மஹாவும் அவனது அரவணைப்பில் மகிழ்ந்து தன் கணவனை நினைத்துப் பெருமிதம் கொண்டாள். அவளது பிரசவ காலம் நெருங்க நெருங்க அவளது மனதில் சிறிய பயம் குடி கொண்டது ஆனால் அதற்காக காரணம் என்னவென்தை மஹா அறிந்திருக்கவில்லை அதுமட்டுமின்றி அந்தப் பயம் அவளுக்கு ஒவ்வொரு நொடியும் எதையோ உணர்த்திக் கொண்டிருந்தது.

அன்று மஹாவிற்கு தலைப்பிரசவம் என்பதால் அவளுக்கு எட்டுமாதம் நெருங்கிய போது வளைகாப்பிற்காக அவளது ஊருக்கு அவளை அழைத்துச் செல்ல அவளது பெற்றோர்கள் வந்திருந்தனர் ஆனால் மஹாவை அங்கே  அனுப்பி வைக்க பரனிக்கு விருப்பமில்லை அதனால் அரைமனதாக அவளை அங்கே அனுப்பி வைத்துவிட்டு வளைகாப்பு நடைபெறும் நாளில் தான் வந்து கலந்து கொள்வதாக சொன்னான் பரனி அவனைப் போலதான் பரனியைப் பிரிந்து செல்ல மஹாவிற்கு துளிகூட விருப்பமில்லை ஆனாலும் தன் பெற்றோரின் ஆசைக்காக அங்கே சென்றாள் மஹா.

இப்படியே ரெண்டு நாட்கள் ஓடிமறைந்தது  அன்று காலையில் தான் மஹாவிற்கு வளைகாப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்தது வளைகாப்பு வைபவம் முடிந்ததன் பின்னர் மாலை ஐந்து மணிக்கு பரனி மஹாவிடம் அவசர வேலை இருப்பதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.அந்த மாலைப் பொழுதில் அவளிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற பரனி மறுநாள் காலையில் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைக்க பதறி அடித்து அங்கே சென்றாள் மஹா.

பரனிக்கு எதுவுமே ஆகிவிடக் கூடாது என்று அவளது இதயம் துடித்தது இறைவன் மேல் பாரத்தைப் போட்டுக் கொண்டே அங்கே சென்றாள்.அங்கே மிகவும் இக்கட்டான நிலையில் துடித்துக் கொண்டிருந்தான் பரனி அவனது நிலையை கண்டு பித்துப் பிடித்தவள் போல் பயத்தில் உறைந்து போனாள் மஹா அவள் மனமெங்கும் “ஆண்டவா நான் ஆசைப்பட முன்னதாகவே இப்படியொரு அன்பான கணவரை எனக்கு கொடுத்தாய் இப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன கணவன் என்பவன் யார் என்று நான் உணர தொடங்கியிருக்கிறேன் இந்த நிலையில் அவரை என்னிடமிருந்து பறித்துவிடாதே இந்த உலகத்தை என் குழந்தை பார்க்கும் போது அது அப்பா இல்லாமல் பிறக்க கூடாது இறைவா” என்று நினைத்து அழுதாள் ஆனாலும் அவளது அழுகையையும் வேண்டுதலும் இறைவனின் காதுகளுக்கு செல்ல மறுத்து.

இரக்கமே இன்றி அவள் வாழ்க்கையில் இருந்து கணவன் என்ற பந்தம் பறித்து எடுக்கப்பட்டது விதவை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அவளது நாட்களை உறவுகள் தள்ளிவிட்டது.இப்படியே நாட்கள் நகர வீட்டிற்குள் முடங்கிப் போனவள் அவன் இறந்து ஒரு மாதத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றேடுத்தாள் அந்தக் குழந்தையே அவளது வாழ்வின் ஆதாரமாக அதற்காக வாழத் தொடங்கினாள் மஹா.

நாட்கள் நகர நகர வீட்டிற்குள் முடங்கியிருக்க மனமின்றி மீண்டும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்பெணாக வேலைக்கு செல்லத் துவங்கினாள் மஹா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்வது போல ஏதோ நடைபிணமாக திரிந்தாள் அவளது மகள் பவித்ராவிற்கு ஒருவயது நிரம்பிய போது அவளுக்கு பிறந்தநாள் செய்ய ஆசைப்பட்டாள் இதை தன் குடும்பத்திரிடம் அவள் கூறிய போது அவளது பெற்றோரும் சகோதரர்களும் அவர்களின் மனைவியும் அவளை வார்த்தையால் வஞ்சித்தனர்.

“தரித்திரம் பிடித்தவள் நீ என்றாள் உன் பொண்ணு இந்த உலகத்திற்கு வரமுன்னதாகவே அப்பனையே பலியேடுத்தது அதுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுதான் இல்லாத குறையா” என்று கூறி அவளை வார்த்தைகளால் கொல்லாமல் கொன்றார்கள்.அவர்களது வார்த்தையால் மனதார பலவீனமாக தொடங்கினாள் மஹா இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியதவளாக தவித்தாள் இப்படியிருக்க அன்றொருநாள் அவள் வேலை பார்க்கும் நிர்வனத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள் அங்கு அவளுக்கு அறிமுகமானான் அவளது பள்ளி தலைமை ஆசிரியரின் மகன் மகேஷ்.

மகேஷ் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் வேலை பார்த்துவிட்டு இப்போது ஊரில் வந்து பெரிய அளவிலான ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறான்.ஏற்கனவே மகேஷ் மஹாவிற்கு அறிமுகமவன் என்பதால் அவளது நிலையைக் கண்டு சற்றே அதிர்ச்சியுடன் அவளிடம் இதுபற்றி எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவள் நிலை சற்றே அவனை யோசிக்க வைத்தது.

ஆரம்பத்தில் மகேஷ் ஒருதலையாக மஹாவை காதலித்தான் ஆனால் இது எதுவும் மஹாவிற்கு தெரிந்திருக்கவில்லை அதனால் அவள் அவனுடன் நட்புடன் பழகினாள் காலப் போக்கில் வேலைக்காக மகேஷ் தன் காதலைக் கூடச் சொல்லாமல் துபாய் போய்விட்டான் அதன் பின் மஹாவின் வாழ்க்கை வேறு பாதையில் பயணித்து திருமணம் குழந்தை என்றாகி இன்று கணவனையும் இழந்து நரக வாழ்க்கை வாழ்கிறாள்.

அவளின் நிலையைப் பற்றி அறிய மகேஷின் மனம் துடித்தது எங்கே அவளிடம் பேசப் போய் அவள் நீயார் என்று கேட்டுவிடுவாளோ என்ற பயம் வேறு அவனுக்குள் கேள்வியை எழுப்பியது ஆனாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளுடன் சென்று பேசினான்.அவளுடன் அவன் பேசிய சிறிது நேரத்திலேயே அவளது நிலை பற்றியும் தற்போது அவள் கணவனை இழந்து தன்னுடைய ஒரு வயது மகளுடன் வாழ்வது பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது தன் நிலையை நட்புடன் அவனுக்குத் தெரியப் படுத்தினாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது மஹாவிற்கு தான் ஒரு முதலாளி ஸ்தானத்தில் இருக்க வேண்டும் தனக்கு கீழ் பலர் வேலை பார்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே ஒரு கனவு இருந்தது இதை மகேஷ் நன்கு அறிந்திருந்தான் எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மகேஷ் அதற்காக சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.

இப்படியே ஐந்து மாதங்கள் ஓடி மறைந்தது மஹா வீட்டில் அவளை திட்டுவது அவள் அதிஸ்டம் கெட்டவள் என்று தூற்றுவதுமாகவும் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவுகளின் பார்வையிலும் இழிவாகப் பேசும் பொருளாகிப் போனாள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவள் மனதாரா காயப்படுத்தப்பட்டடாள்.

இத்தனை கடுஞ் சொற்களுக்கு மத்தியில் என் மகள் வளர்ந்தாள் அவள் தன்னைத் தானே தாழ்தி ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்துவிடுவாள் அது என்றைக்கும் நடக்க கூடாது என்ற முடிவுடன் ஊரைவிட்டு சென்று நகரப் பகுதியில் சென்று குடியேறி அங்கே தனக்கு ஒரு வேலையைத் தேடினாள்.

அந்த சமயத்தில் அவளுக்கு ஒரு நண்பனாக நல்ல மனிதனாக மகேஷ் கை கொடுத்து  குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிறிய அளவிலான கடையை திறந்து கொடுக்க முயற்சித்தான் ஆனால் மஹா இதை ஏற்க மறுக்க “நண்பனாக நான் உனக்கு இந்த உதவியைச் செய்கிறேன் கடனாக இதை என்னிடம் பெற்றதாக நினைத்து இதற்கான தொகையை எனக்கு மாதம்தோரும் தந்துவிடு” என்று கூறி அவளைச் சம்மதிக்க வைத்து அவளை தன்னுடைய கோரிக்கையை ஏற்க செய்தான் மகேஷ்.

மகேஷ் செய்த உதவியின் மூலம் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள் உழைக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய வேலையில் முழுமையான ஈடுபடத் தொடங்கினாள்.

மறுபுறம் அவளது வியாபாரம் சிறக்க மறைமுகமாக அவளுக்கு உதவி செய்தான் மகேஷ் இப்படியே மூன்று ஆண்டுகளில் மகேஷின் கடனையும் கொடுத்து முடித்து தன் மகளுக்கும் சேமித்து இன்று ஊரே பிரமிக்கும் வகையில் சொந்த வீடும் கட்டி தனக்கு கீழ் இருபது பேர் வேலை செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டாள் மஹா.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஓயாமல் உழைத்து வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வந்தது மட்மின்றி தன்னைப்போல கணவனை இழந்து உறவுகளால் நிந்திக்கப்பட்ட பெண்களை உயர்வடையச் செய்து சாதனைப் பெண்ணாக வாழ்கிறாள் மஹா.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகேஷ் அவளிடம் “நான் உன்னைத் திருமணம் செய்து வாழ ஆசைப்படுகிறேன்” என்று அவனது தாயாருடன் வந்து கேட்டான் ஆனால் அவள் அவனைத் திட்டி அனுப்பிவிட்டாள் இது மகேஷின் வாழ்க்கையை மிகவும் பாதித்தது.

இப்படியே சில மாதங்கள் ஓடி மறைந்தது மகேஷ் மஹா நினைப்பில் சுற்றித் திரிந்தான் இது அவனது தாயார் சாரதா மிகவும் பாதிக்க அவரும் எத்தனையோ தடவை மஹாவிடம் இதுபற்றி பேசியும் மஹா அவரிடம் “இங்க பாருங்க நீங்க எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்ற மரியாதையில் உங்களிடம் பேசுகிறேன் பிளீஸ் மறுபடியும் இப்படிப் பேசி என்னைக் காயப்படுத்தாதீர்கள்” என்று கேட்டாள் இதற்கு மேலும் பேசி எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்த சாரதா ரீச்சர் அதுபற்றி அதற்கு பிறகு அவளிடம் பேசியதே இல்லை.

இப்படியே நாட்கள் நகர பவித்திராவிற்கு அப்பா இல்லை என்ற உணர்வு அந்த குழந்தையை மிகவும் பாதிக்க தொடங்கியது இதனால் தினம் தினம் மகளின் நிலை கண்டு அப்பா என்ற உறவு எவ்வளவு முக்கியம் என்று சற்றே நினைக்கத் தொடங்கினாள் மஹா.

ஆனாலும் அவளது மனம் பரனியைத் தாண்டி வேறு ஒருவனை நினைக்க இடம் கொடுக்க மறுத்தது இப்படியிருக்க எதிர்பாராத விதமாக சாரதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அவரைச் சந்திக்க சென்றாள் மஹா.

அங்குதான் மீண்டும் பரனியின் தாயார் மாரியம்மாளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவரும் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மாரியம்மாள் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் அவர் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது அவனது கண்களில் தெரிந்தது கவனிக்க கூட யாருமே இல்லாத நிலையில் இருந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரது வைத்திய செலவை பார்த்து வந்தது மகேஷ் தான் ஆனால் மாரியம்மாள் தான் மஹாவின் மாமியார் என்ற உண்மையை அவன் அறிந்திருக்கவில்லை.

தன்னுடைய கணவன் இல்லாத நிலையில் அவனது தாயாருக்கு உதவியாக இருக்க வேண்டிய இடத்தில் நான் அவர்களை நிற்கதியாய் விட்டு வந்துவிட்டேனே எவ்வளவு சுயநலவாதியாக இருந்திருக்கிறேனே என்று நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள் மஹா.

தன்னுடைய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன்னுடைய அத்தையை கவனிப்பதிலும் தன்னுடைய இக்கட்டான நிலையில் தனக்கு உதவியாக இருந்த மகேஷின் தாயாரை கவனிப்பதிலும் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் மஹா.

இப்படியே ரெண்டு மாதங்கள் ஓடி மறைந்தது மஹாவிற்கு இப்போது முப்பது வயதுதான் அவளது மாமியாரும் மகேஷின் தாயாரும் அவளிடம் மகேஷை திருமணம் செய்து அவனுடன் வாழச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருந்தனர் ஆனால் அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து கொண்டேயிருந்தாள்.

அவர்களது இந்த செயலுக்கு பின் இருப்பது மகேஷ் தான் என்று அவனைத் தவறாக புரிந்து கொண்டு அவனை வார்த்தைகளால் நோகடித்தாள் இதற்கு காரணம் தான் இல்லை என்பதை அவன் அவளுக்குத் தெரியப்படுத்தியும் அதை அவள் நம்ப மறுத்தாள் வேறுவழியின்றி  அவளது நிம்மதிக்காக ஊரை விட்டு அவனது தாயாரை மஹாவையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு மீண்டும் துபாய் சென்றான்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது அன்றொருநாள் ஒரு தனியார்  யூடியூப் சேனல் வளர்ந்துவரும் சாதனைப் பெண்மணி என்று ஒரு நிகழ்ச்சிக்கு மஹாவை அழைத்து அந்த மீட்டிங் அவளது மனதில் உள்ளதைப் பேசும் சந்தர்பம் கிடைக்க அன்றுதான் தன் வாழ்க்கையில் மகேஷ் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறான் என்ற உண்மையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்படியே நாட்கள் நகர அவளது இதயம் மெல்ல மெல்ல அவனுக்காக துடிக்கத் தொடங்கியது அன்றொருநாள் எதிர்பாராத விதமாக மகேஷின் டைரி ஒன்று அவளது பார்வை பட அதை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள் அதில் ஆரம்பத்தில் மகேஷ் அவளைக் காதலித்தது முதல் இன்று அவளுக்கு ஒரு காவலனாக வாழ ஆசைப்படுவது வரை எழுதியிருந்தது அது அவளை மிகவும் யோசிக்க வைத்தது இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இன்று “மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்ற குறுஞ்செய்தி மகேஷிடம் இருந்து அவளுக்கு வந்தது.

அந்த குறுஞ்செய்தி அவளது வாழ்வையே புரட்டிப் போட்டது அதுவரை ஸ்தம்பித்து போயிருந்த அவள் இதயம் மெல்ல மெல்ல துடிக்க தொடங்கியது ஆனாலும் அவனை ரொம்ப காயப்படுத்தி விட்டேன் என்ற குற்றவுணர்ச்சியில் மூழ்கிப் போனாள்.

மகேஷ் என்ற ஒற்றை வார்த்தையில் அவளது நாட்கள் மொத்தமாக அர்த்தம்பெற அவன் முழுவதுமாக அவளுக்குள் நிறைந்ததை யாரிடம் கூறமுடியாது போக அவன் நினைவோடு அவனுக்காக காத்திருக்கிறாள் மஹா.

என்றாவது ஒரு நாள் ஒரு காதலனாக தன் வாழ்க்கையை அழகாக்கி இறுதிவரை காவலனாக இருப்பான் என்ற நம்பிக்கையில்  மகேஷிற்காக காத்திருக்கிறாள் மஹா  இனியாவது அவளது வாழ்க்கை பாதையில் வர்ணங்கள் நிறையட்டும்.

https://tamil.pratilipi.com/story/ezjsky6idlsl?utm_source=android&utm_campaign=content_share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *