போரில் நாம் பாதிக்கப்பட்டோம்- இப்போது நாம் துன்பப்படுகிறோம்” நேசமலர்

அமந்த பெரேர -Amantha Perera – Reuters 

war_widows_trafficking_sri_lankaஇலங்கையின் முன்னாள் யுத்த வலயத்திலிருந்து (54) மார்ச் மாதம் கொழும்பில் இருந்து மஸ்கட் நோக்கி பறந்து கொண்டிருந்த நேசமலர் விமான நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை எடுத்த போது அதில் தனது வருங்காலம் அடங்கியிருப்பதாக எண்ணினார் . ஒரு தசாப்த கால போர் தோல்வி அடைந்ததினாலும் அதனல் கணவனையிழந்து பல துயரங்களை சந்தித்த நேசமலருக்கு வளைகுடாவின் ஓமனில் வசதியான ஒரு குடும்பத்திற்கு பணிப்பெண்ணாக பணிபுரிவதாக உறுதியளித்து. ஒரு மாதத்திற்கு ஒரு நல்ல அறை, நல்ல வேலை நேரம் மற்றும் ஒரு மாதம் 30,000 ரூபாய் (கூ 150) கிடைக்கும். என்ற வாக்குறுதிகளோடும் கனவுகளோடும் சென்ற நேசமலருக்கு யுத்தத்தில் சந்தித்தைப் போல் பிரச்சினைகள் அங்கும் இருந்தன.மஸ்கட்டிலிருந்து பல மைல் தூரத்திலிருந்த ஒரு காற்றோட்டமில்லாத லைட் குறைவாக உள்ள ஒரு அறையில் மற்ற பெண்களுடன் தன்னையும் அடிமைப்படுத்திக் கொண்டார். தினமும் வெளியே அவர் அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு வீடுகளுக்கு சுத்தம் செய்ய அனுப்பப்பட்டார்,பின்னர் இரவில் மீண்டும் பூட்டப்பட்டார்.
நேசமலர் கூறியதாவது.

“நாங்கள் 15 பேர் இருந்தோம்ர, நாங்கள் பணம் சம்பாதித்ததில்லை, இறுதியாக இலங்கை அரசாங்கம் தலையிட்ட போது அதிஸ்டவசமாக நான் வீடு திரும்ப வேண்டி ஏற்பட்டது.” என கணவர் 2001 ல் காணாமற்போனார் யுத்தத்தின் போது நாங்கள் துன்பப்பட்டோம், இப்போது நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார். .சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க வேலைக்கhக அமர்த்தப்படுவோரின் நிலை மிக மோசமான நிலைக்குள் உள்ளதாகவும் இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு நேசமலரும் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிவிவகாரங்களின் ஏஜன்சிகள் வடக்கிலிருந்து 1000 க்கும் அதிகமான பெண்கள் – கணவனையிழந்த தலைமையில் உள்ள குடும்பப்பெண்களை வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பணியாளர்களாக அனுப்பியுள்ளதாக 2015 2016 ஆண்டு தகவல்கள் தெரிவிக்கின்றதாக அமந்த பெரேராவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 90,000 கணவனையிழந்த பெண்கள் வட கிழக்கில் உள்ளார்கள். அவர்களுக்கான வாழ்வாதாராத்திற்கான வேலை வாய்ப்புகளை அரசாங்கமோ அல்லது சமூக ஆர்வலர்களோ கருத்தில் கொள்ளாதிருப்பதும் ஆட்சேர்ப்பு முகவர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள நேசமலர் போன்ற பெண்களை இலகுவாக சுரண்டுவதற்கும் வாய்ப்பாக உள்ளது.
ஆனால் பல பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படவில்லை அல்லது வீட்டிற்கு திரும்ப பணம் செலுத்த முடியாது மற்றும் பல ஆண்டுகளாக சுரண்டப்படுகிறார்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆட்சேர்ப்பு முகவர் அல்லது முதலாளிகளுக்கு எந்தவிதமான வழக்குகளும் இல்லை. அவர்கள் தப்பித்து விடுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *