தெருவில் வாழும் சிறுவர்கள்

My_secret_sky_.jpg 2  உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.

உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதும், தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம்பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன. 175 மில்லியன் மக்கள் உலகமெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடும்ப வேலைகள், விபச்சாரத்திற்காகக் கணிசமான அளவில் பெண்கள் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இப்படி இடம்பெயர்கிறவர்களில் பலர் காணாமல் போய்விடுகின்றனர். 

 இடம்பெயர்வு என்பது பல்வேறு புதிய நாகரீக முறைகளையும் உருவாக்கியுள்ளது. முன்பு அடிமை வியாபாரம், கத்தல், இனப்பிரச்சினைகளே இடம்பெயர்விற்குக் காரணங்களாக இருந்தன. பருவகாலப் பயிர்களின் விளைச்சல், அறுவடை போன்றவற்றுக்கும், ஆடுமாடுகளின் வளர்ப்பிற்கும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. குடும்பங்களாக இடம் பெயர்வது இதற்கென்றாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கோடைக் காலங்களில் வந்து தங்கிச் செல்வதற்காகப் பல மலைப்பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. கடும் குளிரை விரட்டவும், விடுமுறையைப் போக்கவும் என்று வெளிநாட்டினர் சுலபமாக இடம் பெயர்கிறார்கள். வேட்டையாடுபவர்கள் இடம்பெயர்தலை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

My_secret_sky_

உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதும், தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம்பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன. 175 மில்லியன் மக்கள் உலகமெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடும்ப வேலைகள், பாலியல் தொழிலுக்காக கணிசமான அளவில் பெண்கள் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இப்படி இடம்பெயர்கிறவர்களில் பலர் காணாமல் போய்விடுகின்றனர்.

அர்ஜென்டைனா போன்ற நாடுகளில் இணையதள தொடர்பு, பேஸ்புக் இணைப்பு போன்றவற்றின் காரணமாகக் காணாமல் போகிறவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சராசரியாக 16 பெண்கள் அங்கு காணாமல் போகிறார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு வேலைகளுக்காக அர்ஜென்டைனா விலிருந்து இதுவரை கடத்தப்பட்டிருக்கிறார்கள். அர்ஜென்டைனாவின் மத்திய தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும் படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றபடி விளிம்புநிலை மக்களின் கல்வியறிவு திருப்திகரமானதாக இல்லை. பெரும்பாலும் கத்தோலிக்கர்களாக இருந்தாலும் மதம் இரண்டாம் பட்சமாக்கி, அவர்களை அலைக்கழிக்க வைக்கிறது. மதமாற்ற வாய்ப்பையும் தேடிப் போகிறார்கள்.

அர்ஜென்டைனாவின் பெண் இயக்குனர் காப்யெல்லா டேவிட்டின் பல படங்களில் அந்த தேசத்துப் பெண்கள் பிரச்சினை மையமாகியிருக்கின்றன. கல்லூரிப் பேராசிரியராகவும் விளங்குபவர், 18 வயது முதல் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். அர்ஜென்டைனாவில் காணாமல் போகிற பெண்களைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் இவரின் அக்கறை திரைப்படங்களைத் தாண்டியும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளிலும் அமைகிற மாதிரி கல்லூரி வாழ்க்கையையும், திரைப்படப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

நகரத்திற்கு வேலை தேடிப் போகிற இரு இளம் பெண்களை மையமாகக் கொண்ட படம் அர்ஜென்டைனாவின் ‘எ பிளை இன் த ஆசஸ்.’ இதேபோல் நகரத்திற்குச் செல்லும் ஆப்ரிக்க சிறுவர்களைப் பற்றின ஜீலு மொழிப் படம் ‘மை சீக்ரெட் ஸ்கை.’ நகரங்களில் பெண்களும் குழந்தைகளும் அலைக்கழிவதை இப்படங்கள் காட்டுகின்றன.

‘மை சீக்ரெட் ஸ்கை’ என்ற ஆப்ரிக்க படத்தில் நகரம் நோக்கிச் செல்லும் இரு சிறுவர்களின் சிரமங்களைப் பார்க்க முடிகிறது. 10 வயது தெம்பி என்ற பெண் அவளின் 8 வயது சகோதரனுடன் அம்மாவின் மரணத்திற்குப் பின் தனித்து விடப்படுகிறார்கள். கலைப்பொருட்கள் போட்டிக்கு அம்மா கையால் செய்த ஒரு சிறு பாயைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கிராமத்திற்கு வரும் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் கலைப் பொருட்களின் சிறப்பு பற்றிச் சொன்னதால் அவள் அதைத் தயாரிக்கிறாள். அது பரிசு பெற்றால் தன் குழந்தைகளுக்குப் பயனாகும் என்பது அவள் எண்ணம். பாதிரியைச் சந்திப்பது, போட்டிக்காக அந்தப் பாயைச் சேர்ப்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தெருவாழ் சிறுவர்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களுள் 12 வயது சில்லி பைட் அவர்களுக்கு உணவளிக்கிறாள். தங்க மறைவான இடம் தருகிறாள். பாதிரியைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்கிறாள். அவள் அறிமுகப்படுத்தும் ஒருவரின் தம்பியைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த எண்ணுகிறாள். அவள் தப்பிக்கிறாள். தெருவாழ் சிறுவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு உடந்தையாக வேண்டியிருக்கிறது. தம்பியும் முரண்பட்டு அலைகிறான். பாதிரியைச் சந்திப்பதும் வெறும் ஆறுதலாக மட்டும் அமைகிறது. கொஞ்சம் காசு சேர்த்து ஊருக்குத் திரும்ப பேருந்து கட்டணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். முன்பு நகரத்திற்கு வந்தபோது திருட்டு ரயிலில் ஏறி வந்திருக்கின்றனர். கிராமத்திற்கு சில்லி பைட்டையும் அழைக்கிறார்கள். ‘தெருப் பையனைக் கிராமம் ஏற்றுக் கொள்ளுமா?’

‘தெருப் பையன் என்று யாருக்குத் தெரியும்.’ சில்லி பைட் ஒத்துக் கொள்வதில்லை நகரமும், அதன் வாழ்க்கையுமே தனக்கு ஒத்துவரும் என்கிறாள்.

‘எ பிளை இன் த ஆசஸ்’ என்ற ஸ்பானியப் படத்தில் இதுபோல் இரண்டு பெண்கள் நகரத்திற்கு வேலை தேடிச் செல்கிறார்கள். நான்சியும், பட்டாவும் நல்ல சிநேகிதிகள். ஒரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களை வீட்டு வேலைக்கென்று கூட்டிப் போகும் இளைஞனால் விபச்சார விடுதியில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். தங்களை அனுப்பிய கிராமத்துப் பெண் ஒரு பெரும் தொகை பெற்றிருக்கிறாள். நான்சி சற்றே முதிர்ந்தவள். வெகுளியானவள். விபச்சார விடுதி சூழல் தன்னை வெளியேற விடாது என்று உணர்ந்து கொள்கிறாள். பட்டா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். சித்ரவதைக்குள்ளாகிறாள். தப்பிக்க முயன்று அடிபடுகிறாள். நான்சி தன்னிடம் வரும் ஒருவனிடம் தங்கள் நிலையைச் சொல்லிக் காவல்துறையிடம் சொல்லச் சொல்கிறாள். அவன் பற்களை இழந்த ஒரு சாதாரண உணவு விடுதி வேலையாள. அவளைப் பல முறை ஜன்னல் வழியே பார்ப்பது கூட நான்சிக்கு ஆறுதல்தான். பட்டாவின் கதறல் யாரையும் எட்டுவதில்லை. தப்பிக்க முயலும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நான்சி பக்கத்துக் கட்டிடங்களுக்கு தப்பிச் சென்று காவல்துறையினரைக் கூட்டிவருகிறாள். தப்புகிறார்கள். நான்சி கிராமத்திற்குத் திரும்பி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். பட்டா நகரத்தில் உயர்நிலைக் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகிறாள். அர்ஜென்டைனா தேசத்துப் பெண்களும், கிராமச் சூழல்களும் பெண்களை எங்காவது துரத்திக் கொண்டிருக்கின்றன.

பட்டாவிற்கான கல்வி என்பது நகரத்தில்தான் வாய்த்திருக்கிறது. அதிலும் பெரிய துயரிலிருந்து மீண்டு வருகையில் ஓர் ஆறுதலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகளாலும், அரசுகளின் சில நலத்திட்டங்களாலும் இதுபோன்ற கல்வி கற்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு அமைகின்றன. உலகமெங்கும் தெருவில் வாழும் குழந்தைகளுக்கான வாழ்நிலை உறைவிடங்கள் தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.

தெருவில் வாழும் சிறுவர்களில் பெரும்பாலும் பையன்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். கல்வி வன்முறையாகித் துரத்துவதும், குடும்பச் சூழ்நிலை, வறுமை போன்றவையும் அவர்களைத் தெருவுக்குத் துரத்தி விடுகின்றன. ‘மை சீக்ரெட் ஸ்கை’ படத்தின் ஆப்ரிக்க குழந்தைகள் தெருவோரச் சிறுவர்களாய் தங்களை விதியமைத்துக் கொள்ளாமல் கிராமத்திற்குத் திரும்ப வருவதில் பெரூமுச்சு கிளம்புகிறது. பார்க்கக் கடலும், பெரிய கட்டிடங்களும், ராட்சத வாகனங்களும் இல்லாமல் போகலாம். ஆனால் கிராமம் தரும் பாதுகாப்பு அவர்களை அலைக்கழிப்பிலிருந்து தப்ப வைக்கும்.

தெருவோரச் சிறுவர்களுக்கு இயல்பான பெயர்கள் பெரும்பாலும் இருக்காது. இட்டுக் கட்டப்பட்ட பெயர்களும், கேலிக்காய் வைக்கப்பட்ட பெயர்களும் நிலைத்து விடும். அவர்களுக்கு வயது கூட தெரியாது. ஓர் ஆப்ரிக்க தெருவோரச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்: ‘எனக்கு வயது தெரியவில்லை. ஆனால் எத்தனை கிறிஸ்து மடங்களில் தெருவோரத்தில் சாப்பாடு கிடைத்தது என்பது ஞாபகமிருக்கிறது.

சுப்ரமணியம் எழுதிய இவ் ஆக்கத்தை ஊயிரோரசயிலிருந்து ஊடறுவிற்காக யசோதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *