தான்யா,பிரதீபா-கனகா தில்லைநாதனின் “ஒலிக்காத இளவேனில்”

– தகவல்- வடலி

vadali பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி -தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ளவர்களை “இலங்கைப் பெண்கள்” என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது.

 இந் நூல் உருவாகிப் பதிப்பாக்கப்படும் 2003 – 2009 காலப் பகுதிகளில் ‘இலங்கையுள்” இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள், யுத்த நிலத்துக்கு ‘வெளியில்’ வாழும் இப் பெண்களது எழுத்திலும் பதிவாகியிருக்கின்றன. தமது நிலத்தினதும், அந் நிலமிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை, தமதான எல்லைகளுடன், இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இதில் இடம்பெறுகிற ஒவ்வொரு பெண்களும், தம் அன்றாடத்தின் தனிமை, காதல், காமம், ஏக்கம், அச்சம், கனவு, அரசியல் இலட்சியம்சார் அவரவர் உலகங்களை தமதான நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்

vadali

ஒலிக்காத இளவேனில்

தொகுப்பு – தான்யா,பிரதீபா-கனகா தில்லைநாதன்

பக்கங்கள் – 184

முதல் பதிப்பு டிசம்பர் 2009

வடலி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *