நினைவுப் பனைகள்

எஸ்தர் (மலையகம்)திருகோணமலையிலிருந்து)

பனம்பழங்கள் விழுகின்ற காலத்தில்
அவள் வந்திருந்தாள்
பனங்காடுகள் அவளின்
தாய் பிள்ளைகள.;
பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள்
பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள்.
பனைகளின் ஒவ்வொரு பருவமும் அவளுக்கு நேர்த்தியாய்
தெரியும்.
பனையைக் கொண்டு பலதரப்பட்ட பொருளாதாரத்தால் ஊரின் சிற்றரசியாய் வலம் வந்தாள்

அவளின் பனை மரங்களில் பஞ்ச வர்ண கிளிகள் விருப்பத்துடன கூடுகட்டி குடும்பம் நடத்தின.
பனைகளோடு அவள் இயைந்து விட்டாள்.

பனங்காடுகளை பிரியும் நாளேன்றில் நெடுநாள் காதலனை பிரிந்த துயரத்துடன் பனை நிலத்தை பிரிந்தாள்.
பனங்காடுகளைப்பற்றி எத்துணையளவு அறிந்தாளோ பனங்காட்டு நரிகளைப் பற்றி யும் நன்கறிவாள்

அவளது பனங்காடு களை கொள்ளையடிக்க அவைகள் தருணம் பார்த்திருந்தன.

‘தொப் தொப்பென்று’ விழும் பழங்களுக்கு அவைகள் நாக்கை தொங்கப்போட்டு அலைவதையும் அறிவாள்.
இன்று குள்ள நரிகளிடமா நல்ல நரிகளிடமா என்று அறியாமல் நிலத்தை தாரை வார்த்துவிட்டு நிலமிழந்து நடக்கிறாள்.

பனையரசி

வேற்று கிரகமொன்றுக்கு குரோட்டன்கள் வளர்க்க அவள் அனுப்பப்பட்டாள்.
குரோட்டன்களுடன் சேர்ந்து இன்று குறட்டை விடுகிறாள்.

அவ்வப்போது பனங்காட்டில் விழுகின்ற குண்டுகளையும் கேள்விப்பட்டு வெட்டியானாய் விழிந்திருந்து ஓலமிடுகிறாள்.
பனை மரம் போன்ற நீண்டதான காலத்துக்குப் பின்னர்
பனை பூமிக்கு வந்திறங்கினாள். பனையும் இல்லை கொட்டையும் இல்லை.

குள்ள நரிகள் அவளின் வாழ்வை அறுத்து அரண்கள் அமைத்துள்ளன.கும்மாள குள்ள நரிகளை கண்டு இவள் வாய் பிளந்து அலறுகிறாள்.

செவிட்டு கூட்டம் பனைகளை வேகமாக அறுக்கிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *