திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் – பகுதி 2:-

சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:-

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் - பகுதி 2:-

இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளிளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டாலும் அவர்களின் முதல் காலடித் தடங்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்தான் பதிந்திருக்கின்றன.

 

இவ்வாட்சிகளின் பின் சுதந்திரம் அடைந்த இலங்கை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரிகளை திருப்பி அனுப்ப முயற்சிக்கவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே இருக்க நேர்ந்தது. அச்சமயம் இவர்களுக்கு ஏற்பட்ட வறுமை, வேலையின்மை, 1820இல் திருகோணமலையில் ஏற்பட்ட கடும் வரட்சி என்பன இவர்களின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டு சென்றது. அவ்வேளை தங்கள் வயிற்றுப் பசியை தீர்த்துக்கொள்வதற்காக சிறுசிறு வேலைகளைச் செய்தனர். இவ்வாறு கைவிடப்பட்ட காப்பிரிகள் புத்தளம்இ  திருகோணமலைஇ மட்டக்களப்புஇ யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர்

சுதந்திரத்திற்குப் பின்னர் திருகோணமலையில்  வாழ்ந்த காப்பிரிகளை நோக்கும்போது தமது வறுமையைப் போக்க நிலாவெளியில் உள்ள சிறிய மலையொன்றில் இருந்துகொண்டு திருகோணமலை யாழ்ப்பாண பொதிமாட்டுவண்டி வணிகர்களை தாக்கினர். அதுமட்;டுமன்றி திருகோணமலை கப்பற்துறையிலும் இவர்களின் நடமாட்டம் தொடர்ந்தது. அதன் பின்னர் கிண்ணியா, பாலையூற்று, ஜமாலியா போன்ற இடங்களில் வசித்தனர். இன்று ஜமாலியா தவிர்ந்த ஏனைய இரு இடங்களிலும் காக்காமுனை என்ற இடத்திலும் வாழ்கின்றனர்.

பாலையூற்று காப்பிரிச் சமூகத்தினரைப் பார்க்கும்போது ஆபிரிக்காவில் இருந்து போனா, சாலி, மைக்கல் என்பவர்களின் வருகையால் உற்பத்தியான பிள்ளைகள்தான் பாலையூற்றில் வசித்தனர் என்றும் இவர்களின சமூகத்தவர்கள்தான் இன்றும் பாலையூற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் காப்பிரிச் சமூகம் என்றும் கூறப்படுகின்றது.
1914ம் ஆண்டு பாலையுற்றுக்கு வந்தவர்களின் உறவினர்கள் நீர்கொழும்பு, புத்தளம் போன்ற இடங்களில் வாழ்ந்துவந்ததோடு தொழில்களாக காவலாளி, மீனவர், கூலியாள், தச்சர், மேசன் போன்றவற்றைச் செய்தனர். ஆனால் தற்போது அவர்களின் தொழிலானது மாற்றமடைந்து சிறப்புடன் காணப்படுகிறது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126068/language/ta-IN/article.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *