சொல்லி முடிக்கப்பட முடியாத துயரங்கள் – லண்டாய்

றஞ்சி (சுவிஸ்)

ச. விஜயலட்சமியின் லண்டாய் பற்றிய சிறு குறிப்பு

landay

1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசியல் சூழலில் தோன்றிய தலிபான் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தலிபான்கள் முதன் முதலில் கண்டகார் நகரத்தில் தமது பலத்தை தக்க வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவின் ஆளில்லாமல் இயங்கும் டிரோன் விமானங்கள் கூட்டம் கூட்டமாக ஆஃப்கானிய மக்களைக் கொல்கின்றன. மதவாத ஆணாதிக்கத்தின் போர் நிற்பதேயில்லை அதன் எதிரி பெண்கள் தாம்.

கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குமேல் போரைச்சந்தித்துக்கொண்டு நிற்கும் தேசத்தில் 56 வீதத்துக்குமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேசத்தில் மனித மதிப்பீடுகள் அழிந்து வயிற்றுப்பசிக்காக எதுவும் செய்யத் தோன்றும் அவலத்தின் பிரதிபலிப்புகள் தான் லண்டாய்க் கவிதைகள்.
ஒரு ஆப்கானிஸ்தான் பிரஜையாக தனது இனத்தவரால் தனது இனத்திற்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படுகின்ற கொடுரங்களை விமர்சிப்பது ஆப்கானிஸ்தானை நேசிக்கும் அந்நாட்டு மக்களின் கடமையாகும். அதுவும் ஆணதிக்காத்தால் ஒடுக்கபடுகின்ற அந்நாட்டு பெண்கள் தனது இனத்திற்கு இழைக்கப்பட்டஃ இழைக்கப்படுகின்ற கொடுரங்களை விமர்சிப்பது ஆப்கானி);தான் பெண்களின் கடமை.

எழுத என் பேனாவை எடுத்த போது பயந்தேன்
எதை எழுதுவது
எதைப்பற்றி எழுதுவது
என் இதயத்திற்கு வெளியே இருந்து எழுதத் தொடங்கவில்லை

என் இதயத்திலிருந்து எழுதுகிறேன்

இளங்கவிஞர் ரோயா

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நேரடியாக ஆண்களுடன் பேசுவதும் பொது வைத்திய சாலைகளில் வைத்தியம் பெறுவதும் முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது. பெண்கள் தங்களது வீட்டிற்குள் இருக்கும் போது சத்தம் ஏற்படுத்தாத பாதணிகளையே அணிய வேண்டியிருந்தது. அவர்கள் தெருவில் செல்லும் போது ஆண் உறவினர்களுடன் மாத்திரம் செல்ல அனுமதியிருந்தது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது பெண் பாடசாலைகள் மூடப்பட்டன அவர்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது.

உன்னை நான் எப்படி வெளிப்படுத்துகிறேனோ?
அது போலவே உன் எதிர்பாலான என்னைப்பற்றியும் நீ வெளிப்படுத்துவது அவசியமானது
இதன் அவசியம் அறியா வண்ணம் அடைபட்டிருக்கிறது
இப்பொழுது அதன் இடைவெளியை நான் உணர்கிறேன்
நான் கேட்பதற்கு கேள்வி ஒன்று எப்போதும் இருந்து வருகிறது.
பெண்கள் தன் உணர்ச்சிகளை எதனால் வெளிப்படுத்த முடியவில்லை
பெண்களால் ஆண்கள் மீதான கருத்தை ஏன்
வெளிப்படுத்த முடியவில்லை
அவளைச் சுற்றியுள்ளவை குறித்தும் கருத்துரைக்க முடியவில்லை
ஐயங்களின் நிழலில் அமர்ந்து கொண்டிருக்கிறேன்…

கரீமா ஷப்ரா

 1959ம் ஆண்டு பெண்கள் பர்தா அணியும் முறை நீக்கபட்டிருந்தது.  பெண்கள் பல்லைக்கழகம் செல்வதும் அனுமதிக்கப்பட்டிருந்தது 1963க்கும் 1964க்கும் இடைப்பட காலத்தில் பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். ஆனால் தலிபானின் உருவாக்கத்துடன் பெண்ஒடுக்குமுறை ஆப்கானிஸ்தானில் மிக மோசமாகியது.

நான் ஒரு முஸ்லிம்
எனக்குத் தெரியும் புர்கா என்பது இஸ்லாம் அல்ல
ஆனால் அறியா மக்களுக்கு நான் எப்படி சொல்வது?
புர்காவை அணிய விரும்பவில்லை என்று
நான் சொன்னால்
என்னை அவர்கள் எரிப்பார்கள் அல்லது
கொல்வார்கள் மற்றப் பெண்களைப் போல

அஷ்மா

நான் பெண்ணிய வாதி
அண்டை வீட்டில் இருப்பவர்கள்
தங்கள் மனைவிகளை அடிப்பதைப்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை
சக மாணவர்களோடு பணியிலிருக்கும் போது
கெட்ட பெண் என என் ஆசிரியைக் கூறுவதை
என்னால் கேட்க முடியவில்லை
இது என் எதிர்கால இலக்கு

நான் பெண்ணியவாதி
ஆப்கான் பெண்களின்
வுரலாறினை மாற்ற விரும்புகிறேன்.

ஷஹாரா

ஒரு ஆப்கானிஸ்தான் பிரஜையாக தனது இனத்தவரால் தனது இனத்திற்கு இழைக்கப்பட்ட தனது சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுரங்களை விமர்சிப்பதற்கு கூட ஒரு பெண்ணியவாதியால் முடியாமல் வாயடைக்கப்பட்ட நிலையில் இருக்கும் அவலத்தை ஷஹாரா தனது வலியின் நிழலில் நின்று தனது ஆற்றாமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

நீங்கள் என்னைக் கொலை செய்தாலும்
நான் மீண்டும் வரமாட்டேன்
என் இறப்பு எவ்வித வேறுபாட்டையும் உருவாக்கப் போவதில்லை
நீங்கள் என்னை மறந்து விட்டால் கூட

எவ்வித வேறுபாட்டையும் உருவாக்கப் போவதில்லை
நான் மீண்டும் வர மாட்டேன்.
உங்களின் அச்சுறுத்தும் வேலைகளை நினைவு கூர்கிறேன்
நான் மீண்டும் வர மாட்டேன்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் தனது பேட்டி யொன்றில் ஆப்கானிஸ்தானிலுள்ள வெறுமையான கூடாரத்தையும் ஒட்டகத்தையும் தாக்குவதற்கு தனக்கு 10 டொலர் பெறுமதியுள்ள குண்டு போதும் என்று கூறியிருந்தார். சிறை அவர்களின் வீடாக இருக்கிறது

பார்வையற்ற மனிதனின் கல்லறையில் புல்
முளைத்திருக்கிறது

தமிழ் கவிதைச் சூழலுக்கும் அறிமுகமாகியிருக்கும் மொழிப் பெயர்ப்புக் கவிதைகள் மற்றும் பாடல்கள்தான் “லண்டாய்” 2000 ஆண்டுகளன் வரலாற்றை புடம் போட்டு சமகாலத்தில் மேற்கத்திய ஆட்சியாளர்களின் ஆப்கானில் தேவையற்ற யுத்தத்தையம் அம் மக்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சார சிக்கல்களையும் மதத்தின் பெயரால் ஏற்படுத்தும் முரண்பாடுகளையும் மொழிபெயர்ப்பின் ஊடாக ஆப்கான் பெண்களின் உணர்வுகளை தெளிவுப்படுத்தியுள்ளார் ச. விஜயலட்சுமி

கடவுளே நீ பெண்ணாக இருந்திருந்தால்
ஒரு ஆஃப்கான் பெண்ணாக இருந்திருந்தால்
நீ வருத்தப்பட்டிருப்பாய்
நீ ஏன் பெண்களை படைத்தாய்?
நீ ஏன் பெண்களை படைத்தாய்?
தூய் பெண் குழந்தையை பெறும் போது
அவளுக்கு கடைப்பது எச்சரிக்கைகளே!
வெகுமதிகள் அல்ல
வெட்கக்கேடு!

இக்கவிதைகளை வாசிக்கும் போது ஆப்கானிதானில் இழப்பதற்கு ஏதுமற்ற மக்கள் செயற்கைக் கால்களுக்காக வானை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவலம் தான இன்றைய நிலையாக உள்ளது.

ஆசிரியர் ச. விஜயலட்சுமி
தடாகம்
112 திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி -0091 43100442

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *